அதிமுக கொறடா விவகாரம்: பேரவை தலைவர் விளக்கம்
24 May 2026, 10:26 pm
<p><strong>அதிமுக கொறடா விவகாரம்: பேரவை தலைவர் விளக்கம்</strong></p><p>சென்னை, மே 24 - அதிமுக கொறடா விவகா ரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை எழும்பூரில் தமிழர் தந்தை தினத்தந்தி நிறுவனர் சி.பொ.ஆதித்தனாரின் 45 ஆவது நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ் வில் சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், பள்ளிக் கல்வித்துறை மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ் மோகன் உள்ளிட்டோர் சி.பொ. ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய ஜே.சி.டி. பிரபாகர், “இரு வேறு குழுக்களாக பிரிந்துள்ள அதிமுக வினர் என்னிடம் மனுக்களை அளித்து உள்ளனர். அவை ஆய்வில் உள்ளன. இதற்கான முடிவை உரிய நேரத்தில் சட்டப் பேரவையில் அறி விப்பேன். அப்போது நான் நடுநிலையில் இருந்து பணியாற்று கிறேனா இல்லையா என்பதை என் தீர்ப்பின் மூலம் நாடே தெரிந்து கொள்ளும்” என்று தெரிவித்தார். நிகழ்வில் சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், குற்றச் செயல்களை பொறுத்தவரை ‘பூஜ்யம்’ என்ற நிலைப்பாட்டை முதலமைச்சர் விஜய் கொண்டுள்ளதாகவும், கோவை சம்பவத்தில் குற்றவாளிகள் துரிதமாக கைது செய்யப்பட்டதாகவும் தெரி வித்தார்.</p>
