தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதிமுக கொறடா விவகாரம்: இரு தரப்பும் சபாநாயகரிடம் மனு இபிஎஸ் அணிக்குத் திரும்பினார் கே.சி.வீரமணி

16 May 2026, 2:14 am
அதிமுக கொறடா விவகாரம்:  இரு தரப்பும் சபாநாயகரிடம் மனு இபிஎஸ் அணிக்குத் திரும்பினார் கே.சி.வீரமணி

அதிமுக கொறடா விவகாரம்: இரு தரப்பும் சபாநாயகரிடம் மனு இபிஎஸ் அணிக்குத் திரும்பினார் கே.சி.வீரமணி

சென்னை, மே 15- தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவின் 25 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் மனு அளித்துள்ளனர்.

அதேசமயம், எஸ்.பி.வேலுமணி தரப்பு சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர், கட்சியின் கொறடா உத்தரவை மீறிச் செயல்பட்டதாகக் கூறி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிப் பதில் மனு அளித்துள்ளார்.

பழனிசாமி தரப்பு அக்ரி கிருஷ்ணமூர்த்தியைச் சட்டமன்றக் கொறடாவாக அங்கீகரிக்கக் கோரும் நிலையில், வேலுமணி தரப்பினர் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகக் கூறி சி.விஜயபாஸ்கரை கொறடாவாக ஏற்க வலியுறுத்துகின்றனர்.

இதற்கிடையில், இதுவரை வேலுமணி தரப்பிற்கு ஆதரவாக இருந்த அதிமுக மூத்த தலைவர் கே.சி.வீரமணி, திடீரெனத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியே கட்சியின் உண்மையான பொதுச்செயலாளர் என்றும், அனைவரும் அவருடன் இணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இரு தரப்பு மனுக்களையும் சட்டப்பேரவை விதிகளின்படி ஆய்வு செய்து வருவதாகச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள மூத்த பத்திரிகையாளர் வெங்கட்ரமணன், கொறடா உத்தரவை மீறிய 25 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் பதவியை இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.