தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எம்எல்ஏ பதவி தகுதியிழப்பு அபாயம் : பழனிசாமியிடமே திரும்பிய வேலுமணி தரப்பு

27 May 2026, 8:43 pm
எம்எல்ஏ பதவி தகுதியிழப்பு அபாயம் : பழனிசாமியிடமே திரும்பிய வேலுமணி தரப்பு

எம்எல்ஏ பதவி தகுதியிழப்பு அபாயம் : பழனிசாமியிடமே திரும்பிய வேலுமணி தரப்பு

சென்னை, மே 27 - எஸ்.பி. வேலுமணி தலைமையி லான அதிமுக எம்எல்ஏ-க்கள், எம்எல்ஏ பதவி தகுதியிழப்பு அபாயத்தால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடமே திரும்பி னர்.

தொடர் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தரப்பும் எஸ்.பி. வேலுமணி தரப்பும் ஒன்றி ணைந்து உள்ளன.

சட்டமன்றத்தில் தவெகவுக்கு வழங்கிய ஆதரவை திரும்பப் பெறுவ தாகவும் எஸ்.பி. வேலுமணி தரப்பு அறிவித்துள்ளது.

இதையடுத்து, எடப்பாடி பழனி சாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராகவும், அக்ரி கிருஷ்ண மூர்த்தியை கொறடாவாகவும் நியமிக்கக் கோரி, இருதரப்பினரும் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அலுவலகத்தில் ஒன்றாகக் கடிதம் அளித்தனர்.

இதற்கு முன்னர் எஸ்.பி. வேலு மணியை சட்டமன்றக் குழுத் தலைவ ராகவும் விஜயபாஸ்கரை கொறடா வாகவும் நியமிக்கக் கோரி சபாநாயக ரிடம் அளித்திருந்த கடிதத்தையும் திரும்பப் பெற்றனர்.

எனினும், இந்த சமரச நிகழ்வு களில் சி.வி. சண்முகம் பங்கேற்க வில்லை.

எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்கவும் வருத்தம் தெரிவிக்கவும் அவர் மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியி லிருந்தும் விலக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர், “தகுதி நீக்க மனுக்களை திரும்பப் பெறுவதாக அதிமுகவைச் சேர்ந்த இரு அணிகளும் என்னிடம் மனு அளித்துள்ளன.

அவற்றை நன்கு ஆராய்ந்து வியாழக்கிழமை மே 28 அன்று காலையில் எனது முடிவை அறிவிப்பேன்” என்றார்.

முன்னதாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி. வேலுமணி, “அதிமுக வில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி விட்டன.

எங்கள் தரப்பு கோரிக்கையை பரிசீலனை செய்வதாக பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித் துள்ளார்” என்றார்.

வெற்றி தோல்வி சகஜம் தான். தோல்வி குறித்து ஆராய வேண்டும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி யிடம் கூறி உள்ளோம்.

இதனால், இரு தரப்பிலும் பேரவை தலைவரிடம் கொடுத்திருந்த தகுதி நீக்க மனுக் களை திரும்ப பெற்றுக் கொண்டோம் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, தேர்தலில் தவெக ஆட்சி அமைந்த சூழலில் எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சேர்ந்த மரகத குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய நான்கு பேர், தங்களின் எம்எல்ஏ பதவி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தது குறிப்பிடத் தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.