பாஜகவுக்கு சாமரம் வீசவே எஸ்ஐஆரை அதிமுக ஆதரிக்கிறது: திமுக சாடல்!
18 Nov 2025, 3:21 pm
<p><strong>பாஜகவுக்கு சாமரம் வீசவே எஸ்ஐஆரை அதிமுக ஆதரிக்கிறது: திமுக சாடல்!</strong></p>
<p>சென்னை, நவ.18- பாஜகவுக்கு சாமரம் வீசுவ தற்காகவே எஸ் ஐ ஆரை அதிமுக ஆதரித்தது என்றும் திமுகவினர் மீது அதிமுக விமர்சனம் வைப்பது இயலாமையின் வெளிப்பாடு என்றும் திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி தெரி வித்துள்ளார். சென்னையில் செவ்வாயன்று (நவ,18) செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்தித்தபோது, வாக்கா ளர் பட்டியல் திருத்தப் பணி (SIR) மற்றும் அ.தி.மு.க.வின் அரசியல் விமர்சனங்கள் குறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்து ரைத்தார். அ.தி.மு.க. முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவர்களின் இயலாமையின் வெளிப்பாடு என்று அவர் குறிப்பிட்டார். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆர்) அ.தி.மு.க. ஆதரவு அளித்ததைச் சுட்டிக்காட்டிய இளங்கோ, இது பா.ஜ.க.வுக்குச் சாமரம் வீச வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே செய்யப்பட்ட தாகவும், இதில் இருந்த சிக்கல்களை அ.தி.மு.க. அறிந்திருக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும், இந்தச் சீர்திருத்தம் முறையாக மேற்கொள்ளப்படாததால், களத்தில் பல இலட்சக்கணக்கான சாதாரண மக்களின் வாக்குரிமை பறி போகும் பேராபத்து தமிழ்நாட்டின் ஜன நாயகத்திற்கு ஏற்பட்டுள்ளதாக அவர் அச்சம் தெரிவித்தார். தி.மு.க. மீது பா.ஜ.க.வினர் மற்றும் அ.தி.மு.க.வினர் வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த இளங்கோ, நீதிமன்றம் முதல் தேர்தல் ஆணையம் வரை மக்கள் பக்கம் நின்று குரல் கொடுக்கும் கட்சி தி.மு.க.தான் என்றார். வாக்காளர் பட்டியலைச் சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி 2004 ஆம் ஆண்டிலிருந்தே வலி யுறுத்தி வருவதாகவும், தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 'தகுதியற்ற யாரும் வாக்காள ராகக் கூடாது, தகுதியுள்ள யாரும் நீக்கப்படக் கூடாது' என்ற ஜன நாயகத்தின் அடிப்படைக் கோட்பாட்டில்தான் தி.மு.க. உறுதி யாக இருக்கிறது என்றும், அவர் கூறினார். உச்ச நீதிமன்றம் நோக்கிய அடுத்த நகர்வு தற்போதைய எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையால் முறையற்ற முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டால், எந்தவொரு தனிமனிதரின் வாக்குரிமையும் பறி போகாமல் இருப்பதை உறுதிசெய்ய, தி.மு.க. 2026 ஆம் ஆண்டில் நிச்சயம் உச்ச நீதிமன்றத்தை நாடும் என்றும், இந்த ஜனநாயகப் போராட்டத்தில் பின்வாங்கப் போவதில்லை என்றும் உறுதியளித்தார்.</p>
