எடப்பாடி - வேலுமணி தலைமையில் இரண்டு அணிகளாக சிதறிய அதிமுக!
12 May 2026, 11:42 pm

எடப்பாடி - வேலுமணி தலைமையில் இரண்டு அணிகளாக சிதறிய அதிமுக!

சென்னை, மே 12 - அதிமுக வெளிப்படையாக இரண்டு அணிகளாக உடைந்துள்ளது.

ஒருபுறம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி, மறுபுறம் சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அணி என அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரண்டாகப் பிரிந்துள்ளனர். த

மிழ்நாடு சட்டப்பேரவையில் புதன்கிழமை தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள சூழ்நிலையில் அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி -சி.வி. சண்முகம் தலை மையில் 30 அதிமுக எம்எல்ஏ-க்களைக் கொண்ட அணி நேரடியாக முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக, அந்த அணியில் 17 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இடம் பெற்று உள்ளனர்.

இதில், ஒரு அணி எஸ்.பி. வேலுமணியை சட்டமன்றக்குழுத் தலைவராக அங்கீகரிக்க கோரியும், மற்றொரு அணி எடப்பாடி பழனி சாமியை சட்டமன்றக் குழுத் தலைவராக அங்கீகரிக்க கோரியும் தனித்தனியாக மனுக்களை கொடுத்துள்ளன.

இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜே.சி.டி. பிரபாகரி டம் உள்ளது.

இதனிடையே, இன்று நடை பெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக அதிமுக வாக்களிப் பதென பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமி முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ள அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “கட்சியின் உத்தரவை மீறி யாரேனும் வாக்களித்தால் அவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும்,” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.