தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்த  அதிமுக-வின் திடீர் கரிசனம் வெறும் தேர்தல் நாடகம்!

19 Jan 2026, 2:23 pm
பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்த  அதிமுக-வின் திடீர் கரிசனம் வெறும் தேர்தல் நாடகம்!
<p><strong>பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்த &nbsp;அதிமுக-வின் திடீர் கரிசனம் வெறும் தேர்தல் நாடகம்! </strong></p> <p>சென்னை, ஜன.19 - அரசு ஊழியர்களின் எதிர்காலத்தைச் சிதைத்த அதிமுக, &nbsp;இப்போது பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்துப் பேசுவது &lsquo;முதலைக்கண்ணீர்&rsquo; வடிப்பது போன்றது எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம்: 2003-இல் ஓய்வூதியத் திட்டத்தையே ரத்து செய்து, &nbsp;அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை நிர்மூலமாக்கியது அதிமுக. 2016 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை &nbsp;அமல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்து, ஐந்தாண்டு கள் ஆட்சியில் இருந்தும் அதை நிறைவேற்றாமல் எடப்பாடி &nbsp;பழனிசாமி ஏமாற்றினார். 2019-இல் போராடிய ஊழியர்களின் &nbsp;சம்பளத்தைப் பட்டியலிட்டு, விளம்பரம் கொடுத்து அவர் களைக் கொச்சைப்படுத்தியவர் இதே பழனிசாமிதான். ஆனால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2021 தேர்தல் &nbsp;வாக்குறுதியை நிறைவேற்றி, &lsquo;தமிழக அரசின் உறுதி யளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை&rsquo; அறிவித்து அரசு ஊழி யர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தியுள்ளார். இத்திட்டம் பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் போலவே, ஊழியர் &nbsp;கடைசியாகப் பெற்ற மாத ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக உறுதி செய்கிறது. 10 ஆண்டுகள் பணி முடிக்கா தவர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கும் வகை யில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அறிவித்த இந்த மகத்தான திட்டத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், தேர்தல் நெருங்குவதால் பழனிசாமி இப்போது தேன் தடவிப் பேசுகிறார். அரசு ஊழி யர்கள் மீது எடப்பாடி பழனிசாமி காட்டும் இந்தப் போலிப் பாசத்தையும், தேர்தல் நாடகத்தையும் ஊழியர்கள் ஒரு போதும் நம்ப மாட்டார்கள் என அமைச்சர் தனது அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.