தீக்கதிர் விரைவு செய்திகள்
7 May 2026, 10:01 pm

அதிமுக எம்எல்ஏ-க்கள் புதுச்சேரியில் தங்க வைப்பு!

புதுச்சேரி, மே 7 - தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிமுக சார்பில் வெற்றிபெற்ற எம்எல்ஏ-க்கள் புதுச்சேரி நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் வெயில் அதிகமாக உள்ளதால் அதிமுக எம்எல்ஏ-க்கள் புதுச்சேரியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர் என்று புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார். அவர்களைச் சந்திக்க, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரைவில் வரவுள்ளதாகவும், அதிமுகவில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுக வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை யில், அனைத்து எம்எல்ஏ-க்களும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்தாய்வு நடத்தினர் என்றும், கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் ஆதாரமற்றவை என்றும் கூறப்பட்டுள்ளது. ஸ்டாலின் தோல்விக்கு பழனிசாமி வருத்தம் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வியுற்றதற்கு அதிமுக பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி வருத்தப்பட்டதாக புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வலுவான எதிர்க்கட்சித் தலைவர் இருக்க வேண்டும் என்ற எண்ணமே அந்த வருத்தத்திற்கு அடிப்படை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சி.வி. சண்முகம் திடீர் தில்லி பயணம்

சென்னை, மே 7 - தமிழகத்தில் புதிய ஆட்சியமைப்பதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம், திடீரென தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளதை அடுத்து மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்வதற்காகவே அவர் தில்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை, மே 7 - தமிழகத்தில் நிலவும் பர பரப்பான அரசியல் சூழல் மற்றும் ஆட்சி அமைப்ப தில் ஏற்பட்டுள்ள இழுபறி யால் சட்டம் - ஒழுங்குப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஒன்றிய அரசின் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் முக்கிய மான இடங்கள் மற்றும் பிர முகர்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறும் தமிழக காவல்துறைக்கு அறி வுறுத்தியுள்ளது. விஜய்க்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தவிருப்பதாக சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்கள் கருத்து களைப் பகிர்ந்த நிலையில், முன்னெச்சரிக்கையாக மெரினாவில் காவல்துறை யினர் குவிக்கப்பட்டுள்ள னர்.