முந்தய பக்கம்

விலை போன அதிமுக எம்எல்ஏக்கள்! சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை

30 May 2026, 9:34 pm
விலை போன அதிமுக எம்எல்ஏக்கள்! சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை

விலை போன அதிமுக எம்எல்ஏக்கள்! சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை

சென்னை, மே 30 - ஆளும் தவெக, குதிரை பேரம் மூலம் தங்கள் கட்சி எம்எல்ஏ-க்களை விலை பேசியது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் அக்ரி கிருஷ் ணமூர்த்தி மற்றும் மேலவை உறுப்பினர் தனபால் தலை மையிலான குழுவினர் சனிக் கிழமையன்று (மே 30) தமிழக ஆளுநரைச் சந்தித்து முறையிட்டனர்.

அண்மையில் அதிமுக வின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென ராஜினாமா செய்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

சபாநாயகர் உடனடியாக அந்த ராஜி னாமாக்களை ஏற்றுக்கொண் டதை அடுத்து, அதிமுக தலைமை, கடுமையான குற்றச்சாட்டுகளை தவெக மீது முன்வைத்தது.

ஆளுநரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்ரி கிருஷ்ண மூர்த்தி, “தற்போது தமிழ கத்தில் மிக மோசமான முறை யில் குதிரை பேரம் நடை பெற்று வருகிறது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை த.வெ.க. அரசு மிகத் தீவிர மாக விலை பேசிக்கொண் டிருக்கிறது.

இது ஜனநா யகப் படுகொலைக்குச் சமம்” என்றார்.

மக்கள் பணிகளுக்காக நிறுவப்பட்ட தலைமைச் செயலகமே த.வெ.க.வின் கட்சி அலுவலகமாக மாற்றப் பட்டிருக்கும் நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 167-ன் கீழ் ஆளு நர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாங்கள் அழுத்தமாக வலி யுறுத்தியதாகவும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித் தார்.

Share
FacebookXWhatsAppTelegram