கரூர் வெண்ணைமலை கோவில் நிலப் பிரச்சனைக்கு காரணம் அதிமுகவினர் வி. செந்தில் பாலாஜி எம்எல்ஏ குற்றச்சாட்டு
16 Nov 2025, 3:30 pm
<p><strong>கரூர் வெண்ணைமலை கோவில் நிலப் பிரச்சனைக்கு காரணம் அதிமுகவினர் வி. செந்தில் பாலாஜி எம்எல்ஏ குற்றச்சாட்டு </strong></p>
<p>கரூர், நவ.16- கரூரில் மாவட்ட திமுக சார்பில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம், வாலிபால், கிரிக்கெட், டென்னிஸ், கபடி உள்ளிட்ட போட்டிகள் ஒரு மாதம் நடைபெறுகின்றன. முன்னதாக சனிக்கிழமை, கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் சிலம்பம் போட்டியை செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “இப்போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.49 லட்சம் மதிப்பில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. வெண்ணைமலை கோவில் நிலப்பிரச்னை, கடந்த அதிமுக ஆட்சியில் செய்த தவறினால் இன்று பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. கோவில் நிலம் பிரச்சனை தொடர்பாக தவறான ஆவணங்களை, கடந்த 2018 -19 ஆம் ஆண்டுகளில் அதிமுகவினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து குளறுபடி ஏற்படுத்தினர். இதுதான் இந்த பிரச்சனைக்கு அடிப்படை காரணம். யாரால் குளறுபடி ஏற்பட்டதோ அவர்களே அந்த பகுதி மக்களை சந்தித்து, அவர்களை காப்பாற்ற துடிப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற நோக்கில் ஒரு குழு அமைத்து, அந்த குழுவின் மூலமாக அந்த பகுதி மக்களின் ஆவணங்களை ஆராய்ந்து, அதற்கு ஏற்ப சுமூக தீர்வு காணும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றார்.</p>
