தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

29 Mar 2026, 3:34 pm
திருச்சி விரைவு செய்திகள்

புரூலியா எக்ஸ்பிரஸ் ரயிலில் புகையிலைப்பொருள் கடத்தல்

விருதுநகர், மார்ச் 29- விருதுநகர் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த புரூ லியா எக்ஸ்பிரஸ் ரயிலில் புகையிலை பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டது. மேற்குவங்க மாநிலம் புரூலியாவில் இருந்து திரு நெல்வேலி வரை செல்லும் புரூலியா அதிவேக ரயில்  விருதுநகர் சந்திப்புக்கு வந்தது. அதில்,போதைப்பொருள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து விருதுநகர் இருப்புப் பாதை காவல்நிலைய ஆய்வாளர் பிரியா உத்தரவின் பேரில், சார்பு ஆய்வாளர் பெருமாள் மற்றும் காவலர்கள் கருப்ப சாமி, சௌந்தரபாண்டியன் ஆகியோர் ரயிலில் சோதனை  செய்தனர்.  அப்போது கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான கூல்-லீப் மற்றும் புகையிலை இருப்பது  கண்டறியப்பட்டது.  இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.  அதன் மதிப்பு ரூ.13 ஆயிரம் ஆகும். பின்பு புகையிலைப்  பொருட்களை விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையிடம் ஒப்படைத்தனர்.

சாலை விபத்தில் 4 பேர் காயம்

நத்தம், மார்ச் 29- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே முளையூர்- ராவுத்தம்பட்டியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம்(42). கூலித்தொழிலாளி. இவர் வெள்ளியன்று தனது இரு சக்கர  வாகனத்தில் கொட்டாம்பட்டி அருகே வெள்ளாள பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, ஊராளிபட்டி பிரிவு பகுதியில் டீ சாப்பிடுவதற்காக நிறுத்தி விட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது நத்தம் நோக்கி உலுப்பகுடியை சேர்ந்த  நிதீஷ்ராம்(28) என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாக னம் அவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த பஞ்ச வர்ணத்திற்கு கை, கால், தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் வாகனத்தில் வந்த நிதீஷ்ராம் மற்றும்  அவரது நண்பர்கள் சரவணக்குமார், பெரியகருப்பன் ஆகி யோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலை யில் இருந்த 4 பேரையும் நத்தம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  பின்னர் நான்கு பேரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி விடுதி மாணவி மாயம்

திருவில்லிபுத்தூர், மார்ச் 29- விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில் கலச லிங்கம் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு கலை அறி வியல் கல்லூரியில் இராமநாதபுரம் மாவட்டம் சூரன்கோட்டை கிராமம் சமரன் காலனியைச் சேர்ந்த முகமது ஜின்னா என்பவரின் மகள் ஜமீமா பீவி, பிஎஸ்சி  முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 28.3.2026 அன்று கல்லூரி விடுதியில் இருந்து வெளி யில் சென்றுள்ளார். ஆனால், அவர் வீட்டிற்கும் செல்ல வில்லை; விடுதிக்கும் திரும்ப வரவில்லை. இந்நிலையில் பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால், கிருஷ்ணன் கோவில் காவல்நிலையத்தில் முகமது ஜின்னா புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து புகாரின் அடிப்படையில் காவல்  துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்குப் பதிவு

ஸ்ரீவில்லிபுத்தூர், மார்ச் 29- வத்திராயிருப்பு வட்டம் மேல கோபாலபுரம் கிரா மத்தைச் சேர்ந்த சிறுமி திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக மாவட்ட குழந்தை கள் மைய உதவி வழக்கு பணியாளர் முத்தம்மாள் என்ப வருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவ மனைக்கு சென்று சிறுமியிடம் விசாரித்த போது அதே கிரா மத்தைச் சேர்ந்த சிவா என்பவர் சிறுமியுடன் ஒரு வரு டமாக பழகியுள்ளார். இதில் சிறுமி 7 மாத கர்ப்பம் அடைந்துள்ளார் என்ற தகவல் கிடைக்கப் பெற்றதன் அடிப்படையில் திருவல்லிபுத்தூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியை திருமணம் செய்த  சிவா மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி முத்தம்மாள்  புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறை  வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது.

விஷம் குடித்தவர் பலி

இராஜபாளையம், மார்ச் 29- இராஜபாளையத்தை அடுத்த இளந்திரை கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி, விவ சாய வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இசக்கிராணி, பிரியா  என்ற மகள்களும், முனியராஜ்(35) என்ற மகனும் உள்ள னர். இசக்கிராணி திருமணம் முடிந்து சென்றுவிட்டார். பிரியா  படித்து முடித்து வேலைக்கு சென்று வருகிறார்.  முனியராஜ் கொத்தனார் வேலைக்கு செல்கிறார். இந்நிலையில் கடந்த மூன்று வருடத்திற்கு முன் முனியாண்டி, மனைவியின் 10 பவுன் நகையை அவ ரது மகன் முனியராஜ் பெயரில் வங்கியில் ஒரு லட்சத்திற்கு  அடகு வைத்துள்ளார். இதற்கு அவரது மகளிடம் பணம் கொடுத்து ஒரு வருடத்திற்கு வட்டி கட்டி வந்துள்ளார். அதன்பின்பு வட்டி கட்டமுடியாமல் அவரது நகை ஏலத்திற்கு போனது. இதை முனியராஜ் வீட்டில் சொல்லாமல் இருந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த முனியாண்டியும், அவரது மனைவியும் நகை யை திருப்பிக் கொடுக்க முனியராஜிடம் சத்தம் போட்டுள்ளனர். இதனால் கவலையடைந்த முனியராஜ், ஞாயிறன்று வாந்தி எடுத்துள்ளார். விசாரித்த போது தென்னை மரத்துக்கு வைக்கும் பூச்சிக்கொல்லி மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார். இராஜபாளையம் அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, பரி சோதித்தபோது ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை செய்து வருகின்றனர்.

தொடரும் சர்ச்சை, மக்களின் அதிருப்தியால் ஶ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக எம்எல்ஏவுக்கு வாய்ப்பு மறுப்பு

ஶ்ரீவில்லிபுத்தூர், மார்ச் 29- விருதுநகர் மாவட்டத்தில் கடந்த தேர்த லில் அதிமுக வெற்றி பெற்ற ஒரே தொகுதி யான ஸ்ரீவில்லிபுத்தூரில் தற்போது வாய்ப்பு மறுக்கப்பட்டு முன்னாள் எம்எல்ஏ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. மற்ற 6 தொகுதிகளையும் திமுக  கூட்டணி கைப்பற்றியது. 2026 தேர்தலில் இராஜபாளையம், சாத்தூர் தொகுதிகளை கூட்டணி கட்சி களுக்கு ஒதுக்கிய அதிமுக, மற்ற 5 தொகுதிகளிலும் நேரடியாக களமிறங்கு கிறது. முதல் கட்ட வேட்பாளர் பட்டிய லில் சிவகாசி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி  போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டி ருந்தது. இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டிய லில் விருதுநகர் தொகுதி வேட்பாளராக வி.ஜி.கணேசன், அருப்புக்கோட்டை வேட்பாளராக எஸ்.சேதுபதி, ஸ்ரீவில்லி புத்தூர் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ  சந்திரபிரபா ஆகியோர் அறிவிக்கப்பட் டுள்ளனர். திருச்சுழி வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் கடந்த முறை அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மான்ராஜூக்கு, இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ சந்திரபிரபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மான்ராஜ் மீது எழுந்த பல்வேறு புகார்கள் காரண மாகவே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட தாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், அதிமுக தொடங்கிய முதல் தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக  சார்பில் போட்டியிட்ட தாமரைக்கனி வெற்றி  பெற்றார். 1996 தேர்தலில் முதல்வராக இருந்த ஜெயலலிதா தோற்றபோது அதி முக வெற்றி பெற்ற நான்கு தொகுதிகளில் ஸ்ரீவில்லிபுத்தூரும் ஒன்று. ஶ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு சாதகமான தொகுதிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் முக்கியமானது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. மான்ராஜ் எம்.எல்.ஏ.வாக வும், அவரது மனைவி வசந்தி மாவட்ட  ஊராட்சித் தலைவராகவும் இருந்தும் தொகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த போதிய நடவடிக்கை எடுக்க வில்லை என புகார் எழுந்தது. மேலும், எம்எல்ஏ மான்ராஜ் தொடர்பாக எழுந்த சர்ச்சை, அவர் மீதான வழக்கு போன்ற கார ணங்களால் கட்சியினரிடையேயும், மக்களி டையேயும் அதிருப்தி உள்ளதாக கட்சி தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் அடிப்படையில் மான்ராஜ் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 2016 முதல் 2021 வரை எம்.எல்.ஏ.வாக இருந்த சந்திரபிரபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று கூறினர்.

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த நகராட்சி ஊழியர் நீக்கம்

இராமநாதபுரம், மார்ச் 29- இராமநாதபுரம் நகராட்சி அலுவல கத்தில் அலுவலக உதவியாளராக பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தவர் என்.ஐயப்பன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழக்கரையில் நகராட்சி அலுவலகத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். தற்போது  அங்கு பணிபுரிந்து வருகிறார். மார்ச் 31  அன்று பணி ஓய்வு பெற உள்ளார். இந்த  நிலையில் இவர் போலி கல்விச் சான்றி தழ்களை கொடுத்து பணியில் சேர்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்டதைத தொடர்ந்து அவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற் கான உத்தரவை கீழக்கரை நகராட்சி ஆணை யர் பிறப்பித்துள்ளார்.  பல ஆண்டுகளாக இராமநாதபுரம் நக ராட்சி அலுவலகத்தில் அலுவலக உதவியா ளராக பணிபுரிந்த அலுவலர் ஒருவர் ஓய்வு பெறுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு  போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக வரப்பட்ட புகாரின் பேரில்  அவர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டி ருப்பதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டி ருப்பது.

நூதன முறையில்  ஏடிஎம் கார்டு மூலம் பணம் மோசடி

இராஜபாளையம், மார்ச் 29- இராஜபாளையம் காந்தி நகரில் வசித்து  வருபவர் முத்து (57). இவர் கொத்தனார், காண்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார். இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளதார். அடமானம் வைத்துள்ள தங்க நகையை  மீட்டு மறுஅடகு வைக்க வேண்டி பணம் தேவைப்பட்டதால், 26.3.2026 ஆம் தேதி  இராஜபாளையம் மருத்துவமனை சாலை யில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்றுள் ளார். அங்கு வங்கி அதிகாரியிடம் கேட்ட போது ரூ.5,000 குறைவாக பணம் இருப்பு  இருப்பதாக கூறியதின் பேரில் அதிர்ச்சி யடைந்துள்ளார். 25.3.2026 அன்று வங்கி அருகில் உள்ள  ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்காக  உள்ளே சென்றுள்ளார். சரிவர தெரியாத தால் சுமார் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க  நபரிடம் பணம் எடுத்து கொடுக்க கார்டை  கொடுத்துள்ளார். அதற்கு அவர் கார்டை மிஷினில் சொருகி நீங்களே பின் நம்பரை  பதிவு செய்யுங்கள் என்று கூறி, ரூ.5,000ம் எடுத்து கொடுத்துள்ளார். ஏடிஎம் கார்டை தனது கையில் கொடுத்த  போது சரிபார்க்காமல் வாங்கி வைத்து கொண்டு வங்கிக்குள் சென்று மறு அடகு  வைத்து அந்த பணம் ரூ.2,50,000ம் கணக்கில் ஏறியுள்ளது. அதில் ரூ.50 ஆயிரத்தை கையில் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், இரவு சுமார் 80 மணியள வில் தனது செல்போனில் உள்ள குறுஞ் செய்தியை தனது மகன் காளீஸ்வரிடம் கொடுத்து பார்க்க சொன்னபோது, அதில் மாலை 5.02 மணிக்கு ரூ1,000மும் 5.03 மணிக்கு ரூ.20,000மும், 6.04 மணிக்கு 20,000மும், 6.08 மணிக்கு 4,000மும் ஆக மொத்தம் ரூ.45,000 கார்டை பயன்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு இரவு 7.43 மணிக்கு நகைக்கடையில் ரூ.53,955க்கு பொருட்கள் வாங்கியதாக குறுஞ்செய்தி வந்துள்ளதாக கூறப்படு கிறது. அதன் பிறகு கார்டை முடக்கம் செய்து விட்டு, தன்னை ஏமாற்றி மோசடி செய்து  ரூ.98,955ம் பணத்தை எடுத்து சென்ற நபரை கண்டுபிடித்து பணத்தை மீட்டு  கொடுக்க கோரி வடக்கு காவல்நிலை யத்தில் முத்து புகார் அளித்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வளர்மதி வழக்குப் பதிவு செய்து விசா ரணை செய்து வருகிறார்.

ஆத்தூர் தொகுதியில் 9 ஆவது முறையாக ஐ.பெரியசாமி போட்டி

சின்னாளபட்டி, மார்ச் 29- ஆத்தூர் தொகுதியில் 9 ஆவது முறையாக அமைச் சர் ஐ.பெரியசாமி திமுக சார்பில் போட்டியிடுவதாக சனிக்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலை யில் சின்னாளபட்டியில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். சின்னாளபட்டி கீழக்கோட்டை தேவர் சிலை அருகே பேரூராட்சி 3-வது வார்டை சேர்ந்த பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஆனந்திபாரதிராஜா தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் 15 ஆவது வார்டு திமுக வார்டு உறுப்பினர் பூஞ்சோலை ராஜூ, ஒன்றிய பிரதிநிதி வடக்கு தெரு  சந்திரன், 3-வது வார்டு அவைத் தலைவர் தங்கமாயன்,  பிரதிநிதி வீரபாண்டி, வார்டு செயலாளர் மகுடீஸ்வரன்,  பொருளாளர் அருணகிரி, இளைஞரணி அமைப்பா ளர்கள் வினோத், கார்த்திக், மாணவரணி அமைப்பாளர் கோகுல், முன்னாள் வார்டு செயலாளர் சோலை முருகன்  உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முதுகுளத்தூரில்  ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் போட்டி

இராமநாதபுரம், மார்ச் 29- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் திமுக சட்ட மன்ற வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தமிழ் நாட்டின் தற்போதைய வனத்துறை, கதர் மற்றும் கிராமத்  தொழில்கள் துறை அமைச்சராவார். பல வருட அரசியல்  அனுபவம் கொண்ட இவர், போக்குவரத்து மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை போன்ற முக்கிய அமைச்சகங்களையும் நிர்வகித்துள்ளார்.

மதுரையில் 10 தொகுதிகளுக்கான தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு மதுரை, மார்ச் 29- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக  வெற்றிக் கழகத்தின் சார்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பா ளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் விஜய் ஞாயிற்

றுக்கிழமை வெளியிட்டார். அதன்படி, மதுரை திருப்பரங்குன்றம் – சி.டி.ஆர்.நிர்மல் குமார், மதுரை வடக்கு – விஜயன்பன் கல்லணை, மதுரை மேற்கு – எஸ். ஆர்.தங்கப்பாண்டி, மதுரை மேலூர் – மதுரை வீரன், மதுரை கிழக்கு – கார்த்திகேயன், மதுரை சோழவந்தான் – கருப்பையா, மதுரை தெற்கு – ஜே.ஜோ.பீட்டர், மதுரை மத்திய தொகுதி – முஸ்தபா, மதுரை திருமங்கலம் – சதீஷ்குமார், மதுரை உசிலம்பட்டி – விஜய் மகாலிங்கம் என மதுரை மாவட்டத்தின் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தவெக முதல்முறையாக மதுரை மாவட்டத்தில் முழுமையான போட்டியுடன் களம் இறங்கும் நிலையில் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதிய தமிழகம் கட்சி மதுரையில் வேட்பாளர்கள் அறிவிப்பு

மதுரை, மார்ச் 29- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 களம் தீவிரம டைந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து அறிவித்து வரு கின்றன. இந்நிலையில், கடந்த தேர்தலில் பாஜக–அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம் கட்சி, இம்முறை எந்த கூட்டணியிலும் சேராமல் தனித்து போட்டி யிடும் முடிவை எடுத்துள்ளது. கூட்டணியில் சேர அழைப்பு வராத காரணத்தால், தங்களது செல்வாக்கு மிக்க பகுதிகளில் நேரடியாக போட்டியிடுவதாக கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை புதிய  தமிழகம் கட்சி சார்பில் மதுரை மேலூர் – ம. பன்னீர்செல்வம்; திருமங்கலம் – வை.புண்ணியவதி; உசிலம்பட்டி – முருகேஸ்வரி; சோழவந்தான் – கி.ரகு மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். தமிழக அரசியல் சூழலில் தினந்தோறும் பரபரப்பு அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்சிகளின் வேட்பாளர் அறிவிப்புகள் தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளன.

அனுமதி நேரத்தை தாண்டி பிரச்சாரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது வழக்குப் பதிவு

இராஜபாளையம், மார்ச் 29- இராஜபாளையத்தை அடுத்த சுந்தரராஜபுரம் கிரா மத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் பிரச்சாரம் செய்தார். அவருக்கு மாலை 4 மணி முதல் 6 மணி வரை அனு மதி வழங்கப்பட்ட நிலையில், 6 மணி கடந்தும் பிரச்சா ரத்தை தொடர்ந்துள்ளார். இதனை தேர்தல் கண்காணிப்பு  குழுவினர் அவரிடம் நிறுத்திக் கொள்ள அறிவுறுத்தியும், தொடர்ந்து பிரச்சாரத்தை தொடர்ந்துள்ளார். இதுகுறித்து வீடியோ சர்வே லென்ஸ் குழுவைச் சேர்ந்த ராமன்(57) சேத்தூர் ஊரக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புகையிலை பறிமுதல்; ஒருவர் கைது இராஜபாளையம்,

மார்ச் 29- இராஜபாளையத்தை அடுத்த ரெங்கப்பநாயக் கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன்  கெளதம் சஞ்சய்(19). இவர் பானாங்குளம் சுடுகாடு  அருகே உள்ள தனது தாத்தா தங்கவேலு என்பவ ரின் வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை  பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சார்பு ஆய்வாளர் அப்துல் காதர் போலீசாருடன் சென்று சுமார் 28 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை கைப்பற்றி கெளதம் சஞ்சயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நிலக்கோட்டையில் பெண் வேட்பாளர்

சின்னாளப்பட்டி,  மார்ச் 29- திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை  (தனி) தொகுதி திமுக வேட்பாளராக எஸ். நாகஜோதி (41) போட்டியிடுகிறார். இவரது  கணவர் சக்திவேல். இவருக்கு ஒரு மகள் உள்ளார். இவர் வத்தலக்குண்டு ஒன்றியம் விருவீடு அருகில் உள்ள வி.பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்தவர். பட்டதாரி ஆவார். பல தேர்தலுக்குப் பின் அதிமுக வேட்பாளர் தேன்மொழி சேகருக்கு போட்டியாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நாகஜோதி என்பவர் பெண் வேட்பாளராக களம் காண்கிறார்.

தேனி மாவட்டத்தில் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

தேனி, மார்ச் 29- திமுக சார்பில் போட்டியிடும் வேட்பா ளர்கள் குறித்த பட்டியலை தலைமைக்கழ கம் வெளியிட்டது. இதன்படி தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், ஆண்டிபட்டி தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் குறித்த விவரம் வருமாறு: போடி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (75) இங்கு வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். கல்வித்தகுதி: பிஏ. அதிமுக சார்பில் இத்தொகுதியில் இவர் 2011, 2016, 2021-ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி  பெற்றுள்ளார். அதிமுகவில் நகர எம்.ஜி.ஆர் அணி  துணை செயலாளர் பதவி யில் தொடங்கி பெரியகுளம் நகராட்சி தலை வர், எம்எல்ஏ, அமைச்சர் என்று அடுத்த டுத்து முதல்வர் பதவி வகித்துள்ளார். அதி முகவில் இருந்து பிரிந்து கடந்த மாதம் திமுகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி தற்போதைய எம்எல்ஏவான ஆ.மகா ராஜன்(72) மீண்டும் இங்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஒப்பந்தப்பணி, கட்டுமான தொழில் மற்றும் விவசாயம் செய்து வருகிறார். 1980-ம் ஆண்டு முதல் திமுகவில் அடிப்படை உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர், ஆண்டிபட்டி ஒன்றிய பெருந்தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். கடந்த 2 தேர்தல்களிலும் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ள இவர் 3ஆம் முறை யாக களம் காண்கிறார். கம்பம் தெற்கு மாவட்டச் செயலாளரான கம்பம் என்.ராமகிருஷ்ணன்(77) இத்தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். விவசாயம் செய்து வருவதுடன் கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். முதுகலை பட்டதாரி. பெரியாறு அணை  உள்ளிட்ட பல்வேறு நூல்களை வெளி யிட்டுள்ளார்  இத்தொகுதியில் 4முறை எம்எல்ஏ.வாக அங்கம் வகித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர்கள் மீண்டும் போட்டியிடுகிறார்கள்

அருப்புக்கோட்டை, மார்ச் 29- விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் கள் மீண்டும் சட்டமன்ற பொதுத் தேர்தலில்  களம் காண்கிறார்கள். அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி யில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் சாத்தூர் தொகுதியில் கடந்த 1977, 1980, 1985 இல் நடைபெற்ற தேர்தல்  களில் தொடர்ந்து வெற்றி பெற்றவர். அப்போதைய தமிழக அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வந்தார். 1989இல் விளாத்திகுளம்  தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும், 1997 இல் திமுகவில் இணைந்தார். அவ ருக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்பு சாத்தூர் தொகு தியில் போட்டியிட்டு 2001, 2006 நடை பெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து 2016,2021இல் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டி யிட்டு வெற்றி பெற்றார். வருவாய்த்துறை, கைத்தறி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை,மக்கள் நல்வாழ்வுத்துறை என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். திருச்சுழியில் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்ட மன்றத் தொகுதியில் அமைச்சர் தங்கம் தென்னரசு மீண்டும் போட்டியிடுகிறார். 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடப்பட்டார். இதில், திருச்சுழி தொகு தியில் விருதுநகர் வடக்கு மாவட்டச் செய லாளரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே 5 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி  பெற்றுள்ளார்.  அருப்புக்கோட்டை தொகுதியில் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்த லிலும், 2006 ஆம் ஆண்டு அருப்புக் கோட்டை தொகுதியிலும் வெற்றி பெற்றார்.  அதன்பின்னர தொகுதி சீரமைக்கப்பட்ட பின்பு, திருச்சுழி தொகுதியில் கடந்த 2011, 2016 மற்றும் 2021 ஆண்டுகளில் நடை பெற்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று  வருகிறார். சாத்தூர்  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுகவின் வேட்பாளராக அ.கடற்கரைராஜ் போட்டி யிடுகிறார். இவர் மாவட்ட ஊராட்சி தலை வராக பொறுப்பு வகித்தவர். இவரது தந்தை பெயர் அழகர்சாமி, தாயார் லிங்கம்மாள், இவரது மனைவி நிர்மலா கடற்கரைராஜ் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவராக பொறுப்பு வகித்தவர். 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். 40 வருடங்கள் முழுநேர அரசியல் பணி மேற்கொண்டுள்ளார். திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ஆவார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.