அரசு வழக்கறிஞர் நியமனத்தில் குளறுபடி? அதிமுக வழக்கறிஞர் குற்றச்சாட்டு!
6 Jul 2026, 10:26 pm
<p>அரசு வழக்கறிஞர் நியமனத்தில் குளறுபடி? அதிமுக வழக்கறிஞர் குற்றச்சாட்டு!</p><p>சென்னை, ஜூலை 6 - புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான தவெக அரசின் நடவடிக்கைகளால் நீதித்துறை செயல்பாடுகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கோவையைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: ஆட்சி மாற்றம் ஏற்படும்போது புதிய வழக்கறிஞர் களை நியமிக்கும் உரிமை அரசுக்கு உள்ளது என்றாலும், புதிய அரசு வழக்கறிஞர் பொறுப்பேற்கும் வரை ஏற்கெனவே பணியாற்றும் வழக்கறிஞர்களுக்குக் கால நீட்டிப்பு வழங்குவது வழக்கம். கடந்த திமுக ஆட்சியில் புதிய வழக்கறிஞர்களை நியமிக்க 6 மாதங்கள் ஆனபோதும் அதுவரை அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆனால் தவெக அரசு பழைய வழக்கறிஞர்களுக்குக் கால நீட்டிப்பும் வழங்காமல், மாற்று ஏற்பாடும் செய்யாததால், அரசு வழக்கறி ஞர்களே இல்லாமல் நீதிமன்றங்கள் இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளன. இதனால் பிணை வழங்குதல், வழக்கு நடத்துதல் போன்ற நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதிதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கான அதிகாரப்பூர்வ நியமன ஆணை இன்னும் வராத நிலையில், ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொலை பேசி மூலம் 24 வழக்கறிஞர்களை நியமித்துப் பதவியேற்குமாறு கூறப்பட்டுள்ளது. நியமன ஆணை இல்லாமல் பதவியேற்பது சட்டவிரோதம். எனவே, இதுதொடர்பாக மாவட்ட நீதிபதியை சந்தித்துப் புகார் மனு அளிக்கப்படும்.</p>
