வீழும் அதிமுகவும், வலுவடையும் திமுகவும்!
2 Apr 2026, 3:50 pm
<p><strong>வீழும் அதிமுகவும், வலுவடையும் திமுகவும்!</strong></p>
<p>தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக் கட்ட வெப்பத்தை எட்டியுள்ள நிலை யில், ஒட்டுமொத்த மாநிலத்தின் பார்வை யும் கோவை மாவட்டத்தின் மீதே பதிந் துள்ளது. கடந்த 2021 தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தாலும், கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கூட் டணி வென்றது. இதில், எஸ்.பி.வேலு மணி வென்ற தொண்டாமுத்தூர் தொகு தியை தவிற பிற தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே திமுக தோல்வியை தழுவியது. ஆனால், ஐந்து ஆண்டுகள் கழித்து இன்று நிலைமை தலைகீழாக மாறியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். 2021-ல் கோவையில் ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் கூட பெற முடியாத திமுக, அதன்பின் ஆக்கப்பூர்வமான காய்களை நகர்த்தியது. முத்துசாமி, சக்கரபாணி, ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்கள் கோவையை கவனித்து வந்த நிலையில், செந்தில் பாலாஜியின் வருகை மாவட்ட அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்ப டுத்தியது. இதன் பலனாக, நகர்ப்புற உள் ளாட்சித் தேர்தலில் 100 வார்டுகளில் 96-ஐ திமுக கூட்டணி கைப்பற்றி சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளை திமுக தக்கவைத்துக்கொண்டது. தற் போது முதலமைச்சர் நேரடியாக செந்தில் பாலாஜியை கோவை தெற்கு தொகுதி யில் களமிறக்கியிருப்பது, ”கோவையை மீட்டெடுப்போம்” என்ற திமுகவின் உறுதி பாட்டை வெளிப்படுத்துகிறது. விரிசலில் விழுந்த பலவீனங்கள் அதிமுக மீண்டும் தொகுதிகளை தக்கவைக்க போராடினாலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்பட்டுள்ள உட் கட்சிப் பூசல்கள் அவர்களுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. கோவையில் குறைந்தது மூன்று தொகுதி களை அண்ணாமலை தரப்பு எதிர்பார்த்த நிலையில், அதிமுக தரப்பில் ‘கோவை வடக்கு’ என்ற ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதுவும் தற்போதைய எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கே மீண்டும் வழங்கப்படும், அண்ணாமலை ஆதரவா ளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தனக்கு சீட் ஒதுக்கப்படாததால் அதி ருப்தியடைந்த அண்ணாமலை, கோவைக்கு வருகை தந்த பிரதமரை வரவேற்கக் கூடச் செல்லாமல் தவிர்த்தது, தொண்டர்களி டையே பிளவை அதிகரித்துள்ளது. ஒரு தொகுதிக்காக நடக்கும் இந்த ’கோஷ்டிப் போர்’, பாஜகவின் அடிப்படை வாக்குகளை சிதறடிக்கும் என்பது உறுதியாகியுள்ளது. தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதி களில் எஸ்.பி. வேலுமணி தனிப்பட்ட செல் வாக்கைப் பெற்றிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பு இல்லாமை அவருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. வாக்குச் சிதறலும் தவெக காரணியும் தமிழக அரசியலில் புதிய வரவான தவெக இத்தேர்தலில் பிரிக்கும் வாக்குகள், யாருடைய வெற்றியைப் பாதிக்கும் என்பது விவாதத்திற்குரியது. அரசியல் நோக்கர் களின் கூற்றுப்படி, அதிமுகவின் அதிருப்தி வாக்குகள் தவெக அறுவடை செய்யக் கூடும். இது மறைமுகமாக திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தும் ஒரு கார ணியாக அமைந்துள்ளது. செந்தில் பாலாஜியின் களப்பணி, உட் கட்சி பூசலால் நிலைகுலைந்துள்ள பாஜக, மற்றும் தவெக-வால் ஏற்படும் வாக்குச் சிதறல் ஆகிய அனைத்தும் திமுக விற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி யுள்ளன. கடந்த முறை 10-0 என வெற்றி பெற்ற அதிமுக, இந்த முறை ஒரு தொகுதி யைக்கூட தக்கவைக்க போராட வேண் டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. -கவி</p>
