தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

29 Mar 2026, 3:34 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

மார்ச் 31 முதல் முதலமைச்சர் தேர்தல் பரப்புரை

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள இருக்கும் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரப் பயணம் குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில் மார்ச் 31 அன்று மாலை 5  மணியளவில் தெற்கு ரத வீதியில் பிரச்சாரம் தொடங்கி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி தொகுதிகளில் வாக்கு சேகரிக்கும் விதமாக நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 1 அன்று திருச்சி உழவர் சந்தையில் காலை 9  மணிக்கும், கரூர் ராயனூர் பகுதியில் மாலை 5 மணிக்கும்  பொதுக்கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. ஏப்ரல் 2 அன்று ஈரோடு சித்தோடு பகுதியில் காலை 9 மணிக்கும், கோவை  கொடிசியா திடலில் மாலை 5 மணிக்கும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. முன்னதாக, ஏப்ரல் 2 ஆம் தேதி தேர்தல் பரப்புரை துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது  அதில் மாற்றம் செய்து முன்கூட்டியே தேர்தல் பரப்பு ரையை மேற்கொள்கிறார். கழகத் தோழர்கள் வழியில் எந்தவிதமான நிகழ்ச்சி களையும் ஏற்பாடு செய்ய வேண்டாமென கண்டிப்புடன்  கேட்டுக் கொள்ளவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக இறுதிக்கட்ட  வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 167 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, ஏற்கெனவே இரு கட்டங்களில் 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறி வித்திருந்தது. மீதமுள்ள 17 தொகுதிகளுக்கான இறுதிக் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர்  எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வ மாக வெளியிட்டுள்ளார். இப்பட்டியலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியி டும் கொளத்தூர் தொகுதியில் சந்தானகிருஷ்ணன் அறிமுக மாக களமிறக்கப்பட்டுள்ளார். ஆயிரம் விளக்கு தொகுதி யில் பா.வளர்மதி, அண்ணா நகரில் கோகுல இந்திரா, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் ஆதிராஜாராம் உட்பட சென்னையின் பல முக்கிய தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருச்சுழியில் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், ஆலங்குடி யில் தன.விமல், திட்டக்குடிக்கு என்.முருகுமாறன், திரு.வி.க  நகர் (தனி) தொகுதியில் கொலை செய்யப்பட்ட பாஜக  மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி ஏ.பொற்கொடி,  எழும்பூர் (தனி) தொகுதியில் அபிஷேக் ரங்கசாமி ஆகி யோரும் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விஜய் இரு தொகுதிகளில் போட்டி

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ் நாட்டின் அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள  ஒரு நட்சத்திர விடுதியில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.  கட்சியின் தலைவர் ஜோசப் விஜய், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். விஜய் தானே பெரம்பூர் மற்றும் திருச்சி வடக்கு என  இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

அதிமுகவிலிருந்து தாவியோருக்கு வாய்ப்பு

அதிமுகவிலிருந்து தவெகவிற்கு தாவிய பலருக்கும் தேர்தல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச் சர்கள் செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் வி.எஸ்.பாபு, தூசி மோகன், ஜேசிடி பிரபாகர், கருப்பையா ஆகியோரும், முன்னாள் எம்.பி., சத்ய பாமா, லோகேஷ் தனபால், சிடிஆர் நிர்மல்குமார் உட்பட பலரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தவெகவில் இணைந்த அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தூசி மோகனை எடப்பாடி பழனி சாமி கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.

சமயபுரம் கோவிலில் மேற்கூரை  இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கடந்த நான்கு வாரங்களாக நடைபெற்று வருகிறது. மார்ச் 29 அன்று 4 ஆவது பூச்சொரிதல் விழா நடைபெற்றது.  இதற்காக திருவையாறு, செபாஸ்தியார் கோவில் தெரு வைச் சேர்ந்த மோகன் மனைவி நதியா (32), அவரது உறவினர்கள் தஞ்சாவூர், கள்ளப்பெரம்பூர், மாதாக்கோவில்  தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மனைவி ரஞ்சனி (35),  இவரது மகள் பப்பிக்ஷா (14) ஆகியோர் சனிக்கிழமை இரவு  கோவில் சன்னதி வீதியில் உள்ள நுழைவு வாயில் மண்ட பத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நதியா  உள்ளிட்ட மூன்று பெண்கள் மீது மண்டபத்தின் கான்கிரீட் மேற் கூரை சுவர் இடிந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே நதியா பரிதாபமாக உயிரிழந்தார். ரஞ்சனி, பாபிக்ஷா பலத்த  காயமடைந்தனர்.

சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்குக!

கேட்டரிங் உரிமையாளர்கள் கோரிக்கை சென்னை, மார்ச் 29-  தடை இல்லாமல் கேஸ் சிலிண்டர் கிடைப்பதை ஒன்றிய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டரிங் உரிமை யாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  கேஸ் தட்டுப்பாட்டால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் தொழிற்சாலை களின் ஊழியர்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல்  எழுந்துள்ளது. சுமார் 12 லட்சம் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு உணவு  வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  சிலிண்டர் தட்டுப்பாட் டைப் போக்க தமிழ்நாடு கேட்டரிங் சர்வீஸ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வேட்பு மனுத் தாக்கல் இன்று துவங்குகிறது சென்னை,  மார்ச் 29- தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் திங்கட்கிழமை (மார்ச் 30)  துவங்கி, ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது. 8 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டி ருந்தா லும், மார்ச் 31 மகாவீரர் ஜெயந்தி, ஏப்.3 புனித  வெள்ளி, ஏப்.4 சனிக் கிழமை, ஏப்.5 ஞாயிற்றுக் கிழமை விடுமுறைகள் காரணமாக, நடைமுறை யில் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணி கட்சித்  தலைவர்களுக்கு  இன்று தேநீர் விருந்து சென்னை,  மார்ச் 29- திமுக கூட்டணி கட்சித்  தலைவர்களுக்கு திங்கட் கிழமை (மார்ச் 30) முத லமைச்சர் மு.க.ஸ்டா லின் தேநீர் விருந்து அளிக்கிறார். மார்ச் 31 முதல் பரப்புரையை முதல் வர் தொடங்கவுள்ள நிலை யில் கூட்டணி கட்சித் தலை வர்களுக்கு தேநீர் விருந்து வைக்கிறார். தேர்தல் பரப்புரை மற்றும் தேர்தல் பணிகள் குறித்து  கூட்டணி கட்சித் தலை வர்களுடன் முதல மைச்சர் ஸ்டாலின் திங்கட் கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார். எஸ்டிபிஐ வேட்பாளர் அறிவிப்பு  சென்னை,  மார்ச் 29- திமுக தலைமையி லான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சிக்கு நன்னிலம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில், முக மது முபராக் போட்டியிடு வார் என்று அந்தக் கட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த கட்சி  உதயசூரியன் சின்னத் தில் போட்டியிடுகிறது. எடப்பாடி பழனிசாமி  வாகனத்தில்  சோதனை நாகர்கோவில், மார்ச் 29- நாகர்கோவிலில் கூட்டணி கட்சி வேட்பாளர் களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள வந்த போது, ஒழுகின சேரி பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக னத்தில்  தேர்தல் பறக்கு படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.