பாஜக-வால் திருப்பூரில் வீழ்ச்சியை சந்திக்கும் அதிமுக
5 Mar 2026, 3:59 pm
<p>பாஜக-வால் திருப்பூரில் வீழ்ச்சியை சந்திக்கு- லிவின் - திருப்பூர், மார்ச் 5- தொழில் நகரமான திருப் பூரில் உள்ள தொழில் துறை பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், பிர தான எதிர் கட்சியான அதிமுக வாய் மூடி மெளனம் காப்பது இப்பகுதியில் கடும் அதிர்ப்த் தியை ஏற்படுத்தியுள்ளது. இத னால் தனது செல்வாக்கை இழக் கும் நிலைக்கு அதிமுக தள்ளப் பட்டுள்ளது. பின்னலாடை ஏற்றுமதியில் முன்னணியில் விளங்கும் திருப் பூர் மாவட்டம், தற்போது கடும் தொழில்சார் சவால்களை எதிர் கொண்டு வருகிறது. திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவி நாசி உள்ளிட்ட தொகுதிகள் ஆயி ரக்கணக்கான பனியன் நிறுவனங் கள், விசைத்தறி மையங்கள் மற் றும் ஏராளமான சிறு, குறு தொழில் களின் இருப்பிடமாக உள்ளது. இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் 60 சதவீதத்திற்கும் மேல் இங்கிருந்தே செல்கிறது. ஆனால், மத்தியில் பாஜக தலை மையிலான அரசு பொறுப்பேற்ற தில் இருந்து இத்தொழில் துறை பல்வேறு நெருக்கடிகளை சந் தித்து வருகிறது. வெளியுறவுக் கொள்கை, பொருளாதார முடிவு கள், சட்டத் திருத்தங்கள் மற்றும் மானியங்கள் நிறுத்தம் போன்ற காரணிகள் ஏற்றுமதியை வெகு வாகப் பாதித்துள்ளன. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறு வனங்கள் (எம்எஸ்எம்இ) கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. மேலும், ஒன்றிய அரசு கொண்டு வந்த தொழிலாளர் சட்டத் தொகுப்பு திருத்தங்கள், தொழி லாளர்களின் நலன்களைப் பாதிக்கும் வகையில் அமைந்துள் ளதாக தொழிற் சங்கத்தினர் கடும் போராட்டங்களை முன்னெடுத்த னர். இத்தகைய சூழலில், தமி ழகத்தின் முக்கிய எதிர்க்கட்சி யான அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இந்தப் பிரச்சினைகளில் தலையிடாமல் அமைதி காத்து வருகிறது. திருப் பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதி களில் 5 தொகுதிகளை அதிமுக வென்றுள்ளது. இருப்பினும் தொழில் நகர் சந்தித்து வரும் நெருக்கடிகள் குறித்து வாய் திருக்காமல் இருப்பது தொழில் துறையினர் மற்றும் தொழிலாளர் கள் மத்தியில் பெரும் அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது. பிப். 1 ஆம் தேதி நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள் ளது. குறிப்பாக தொழில் துறைக் கான சிறப்புச் சலுகைகள் மானி யங்கள் எதுவும் அறிவிக்கப்பட வில்லை. இத்தகைய சூழலில் அதி முக பட்ஜெட்டை வரவேற்று அமைதி காத்தது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட மறுநாளே, திருப்பூர் தொழில்துறையின் முக் கிய மூலப்பொருளான நூலின் விலை கிலோவுக்கு ரூ.7 வரை உயர்ந்தது. இந்நிலையில், தொழில்துறையினருக்கு ஆதர வாக தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத் தன. முன்னதாக, அமெரிக்கா வரி விதித்தபோதும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணித் கட்சிகள் திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தமிழ்நாடு முதல்வர் இப்பிரச்சினைகள் குறித்து பிரத மருக்கு கடிதம் எழுதியது, திருப் பூர் தொழில்துறையினரை நேரில் சந்தித்து கோரிக்கைகளையும் கேட்டறிந்தது என பல்வேறு முன் னெடுப்புகளை எடுத்தார். இதற்கு மாறாக, இந்த பகுதி களில் அதிக இடங்களை வென்ற அதிமுக இந்த விவகாரங்களில் பாஜகவுக்கு ஆதரவான நிலைப் பாட்டையே கடைபிடித்து வருகி றது. தொழில் மற்றும் தொழிலா ளர் நலன்களை காக்க வேண்டிய முக்கிய எதிர்க்கட்சி, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அமைதி காப்பது திருப்பூர் மாவட்ட தொழில் துறையினர் மற்றும் லட்சக்கணக்கான தொழி லாளர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. ஏற் கனவே மின் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணமாகச் சொல்லப் படும் உதய் (உஜ்வால் டிஸ்காம் அசூரன்ஸ் யோஜனா) திட்டத்தில் 2017 ஆம் ஆண்டு அதிமுக அரசு எந்தவித சமரசமும் இன்றி கையெழுத்திட்டு, திட்டத்தை ஏற்றுக்கொண்டது முதல், தற் போது அதன் பாதிப்புகளை எதிர் கொள்ள மறுப்பது வரை அதிமுக வின் நிலைப்பாடு மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தொழில்துறையி னருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனால் இந்த மாவட்டத்தில் உள்ள தனது செல் வாக்கை இழக்கும் நிலைக்கு அதி முக தள்ளப்படுள்ளது.ம் அதிமுக</p>
<p> </p>
