தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தூய்மைப் பணியாளரை தாக்கிய அதிமுக நிர்வாகி சக பணியாளர்கள் சாலை மறியல்

6 Jan 2026, 4:23 pm
தூய்மைப் பணியாளரை தாக்கிய அதிமுக நிர்வாகி சக பணியாளர்கள் சாலை மறியல்
<p><strong>தூய்மைப் பணியாளரை தாக்கிய அதிமுக நிர்வாகி சக பணியாளர்கள் சாலை மறியல்</strong></p> <p>திருப்பூர், ஜன.6 - பூ மார்க்கெட்டில் தூய்மைப் பணியாளர்களை தாக்கிய &nbsp;அதிமுக நிர்வா கியை கண்டித்து செவ்வா யன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி பெருமாள் கோவில் அருகே &nbsp; மாநகராட்சி பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன. இப்பகுதியில் தினந் தோறும் தூய்மைப் பணியாளர்கள் பூ மார்க் கெட்டில் சேகரமாகும் குப்பைகளை தூய்மை &nbsp;செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் &nbsp;தலைவர் நல்லசாமி என்பவருக்கு சொந்த மான பூக்கடை இங்கு உள்ளது. செவ்வா யன்று அந்த கடையில் சேகரமாகும் குப் பையை கடைக்கு எதிரே நடைபாதையில் கொட்டி விட்டு சென்றுள்ளார். தூய்மைப் பணி யாளர்கள் இங்கு கொட்டக்கூடாது, அதற் கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மக்கும் குப்பை &nbsp;மற்றும் மக்காத குப்பை என பிரித்து கொட்ட &nbsp;வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நல்லுசாமி &nbsp;தூய்மைப் பணியாளருடன் வாக்குவாதத் தில் ஈடுபட்டதோடு, கடையில் இருந்த பூக்கள் வைக்கக்கூடிய டிப்பரை வைத்து லட்சுமி &nbsp;என்ற தூய்மைப் பணியாளரை தாக்கிய தாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சக &nbsp;தூய்மை பணியாளர்கள் 50க்கும் மேற்பட் டோர் அப்பகுதியில் திரண்டு கடையை முற்று கையிட்டு பெருமாள் கோவில் வீதியில் சாலை &nbsp;மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து தெற்கு போலீசார் அதிமுக நிர்வா கியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.