தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதிமுக தேர்தல் அறிக்கை : முரண்பாடுகளின் மூட்டை - மதுரை சொக்கன்

26 Mar 2026, 2:46 pm
அதிமுக தேர்தல் அறிக்கை : முரண்பாடுகளின் மூட்டை - மதுரை சொக்கன்

அதிமுக தேர்தல் அறிக்கை : முரண்பாடுகளின் மூட்டை

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (இன்னமும் அதிகாரப்பூர்வமாக கட்சிப் பெயர் மாற்றப்படவில்லை), 54 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற என்டிஏ பொதுக்கூட்ட முகப்பில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார், அண்ணா படங்கள் நீக்கப் பட்டன. திருச்சியில் பிரதமர் பங்கேற்ற  என்டிஏ பொதுக்கூட்டத்தில் எடப்பாடி  பழனிசாமியின் படம் கூட இடம்பெற வில்லை. ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா புகழ் பாடப்பட்டுள்ளது. அநேகமாக அமித் ஷாவிடம் அனுமதி வாங்கிவிட்டார்கள் போலிருக்கிறது.  எதிரிகளும் துரோகிகளும் ஜெயலலிதா தன்னுடைய கடைசித் தேர்தலில் மோடியா, லேடியா என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால் அதிமுக  தேர்தல் அறிக்கையில் “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்று  அவர் கூறியதை மேற்கோள் காட்டி யுள்ளனர்.  “அம்மாவின் திடீர் மறைவுக்குப் பின்பு எதிரிகளும், துரோகிகளும் கொக்கரித்த நிலையில், கடைக்கோடி தொண்டனாகிய நான் முதலமைச்சர் பதவியை ஏற்று கழகத்தை கட்டிக் காத்தேன்” என்று எடப்பாடி தன்னடக்க மாகக் கூறுகிறார். ஆனால் அன்றைக்கு எடப்பாடி யாரை திட்டித் தீர்த்த தினகரனை அருகில் வைத்துக் கொண்டே ‘எதிரி களும், துரோகிகளும்’ கொக்கரித் தார்கள் என்று கூறுகிறார்.  நிரம்பி வழியும் இலவச அறிவிப்புகள் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்கிற தைரியத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை மையினால் அல்ல,  பொய்யினால் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களது கூட்டணிக்கு தலைமை தாங்கும் பிரதமர் மோடிக்கு இலவசம் என்றாலே எட்டிக்காயாக கசக்கும். “அரசியல் கட்சிகள் வாக்குகளைப் பெறுவதற்காக இலவசங்களை ‘ரேவடி’ (வடஇந்திய இனிப்புவகை) போல வாரி வழங்கு கிறார்கள்;  இதை முற்றிலும் ஒழிக்க வேண்டும்; இலவசங்களை லஞ்சம் கொடுக்கும் கலாச்சாரமாக இளைஞர் கள் பார்க்க வேண்டும்; சொந்த நல னுக்காக நாட்டின் எதிர்காலத்தை அடகு வைக்கும் கட்சிகளை மக்கள் அடை யாளம் காண வேண்டும்” என்றெல் லாம் நீட்டி முழக்கியவர் பிரதமர். ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் ரெப்ரிஜிரேட்டர், சமை யல் எரிவாயு சிலிண்டர், ஆண்களுக் கும் இலவச பஸ் பயணம், விலை யில்லா பருப்பு, சமையல் எண்ணெய் என ஏகத்துக்கும் இலவச அறிவிப்புகள் நிரம்பி வழிகின்றன. இவர்களது கூட்டணியின் தலைவர் இலவசத்திற்கு எதிராக அனல் கக்குகிறபோது, இவர்கள் எப்படி இலவசத் திட்டங்களை நிறைவேற்றப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. முதல்வராக இருந்த ஜெயலலிதா கையெழுத்திட மறுத்த உதய் மின் திட்டம் எடப்பாடி ஆட்சியில் தான் கையெழுத்திடப்பட்டது. இந்தத் திட்டத் தால் மின்துறை மாநிலங்களிடமிருந்து பறிபோகும் அபாயம் உள்ளது.

இந்தத் துறையை தனியாருக்கு முற்றாக தாரைவார்க்கும் வகையில் மின்சார சட்ட மசோதாவை மோடி அரசு தாக்கல்  செய்தது. ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் விலையில்லா மின்சா ரத்தை உயர்த்தப்போவதாக அள்ளி விடுகிறது.  நீட் ரத்து என்னாச்சு? மத்திய, மாநில உறவுகள் பற்றி  பேசும் தேர்தல் அறிக்கை, கல்வி  மற்றும் மருத்துவத்தை பொதுப்பட்டி யலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்கிறது. ஆனால்  இந்த துறைகள் கொஞ்சம் கொஞ்ச மாக ஒன்றிய பட்டியலுக்கு மாற்றப்பட்டு விட்டது குறித்து அறிக்கை மவுனம் சாதிக்கிறது. அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இந்தத் தேர்வை நீக்க வேண்டுமென்று அதிமுக ஆட்சியிலும் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு அனுப்பப்பட்டது. ஆனால் மோடி அரசு அதை கண்டுகொள்ளவில்லை. அதிமுகவின் இந்த தேர்தல் அறிக்கை யில் நீட் தேர்வு ரத்து குறித்து மூச்சு கூட விடவில்லை.

மாநிலங்களுக்கான நிதி ஆதாரங் களை முறையாக வழங்க வேண்டும் என்கிறது அதிமுக அறிக்கை. ஆனால் பாஜக ஆட்சியில் மாநிலங்களின் நிதி ஆதாரம் ஒன்றிய அரசினால் முற்றாக உறிஞ்சப்படுவதை தடுக்கும் திட்டம் எதுவும் கூறப்படவில்லை.  தமிழ் தேவையில்லை என்று சொன்னவர்கள் தானே! தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு75சதவீதத்தை கட்டாய மாக்க சட்டம் இயற்றப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, அதிமுக ஆட்சியில் இருந்தபோது தான் தமிழக அரசுப் பணித் தேர்வுகளை தமிழ் தெரியாதவர்கள் கூட எழுதலாம் என அரசாணை வெளியிடப்பட்டது. பிறகு திமுக ஆட்சிக்கு வந்தபிறகுதான் தமிழ் மொழித் தேர்வு எழுதினால் தான் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வு என இந்தப் பிழை நேர் செய்யப் பட்டது.

மாநில அரசுப் பணிக்கே தமிழ் தேவையில்லை என சட்டமியற்றி யவர்கள் இப்போது தனியார் நிறு வனங்களின் தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்களின் வேலைவாய்ப்புக்கு 75சத வீத ஒதுக்கீடு என்பது அப்பட்டமான ஏமாற்று வேலை அல்லவா? ஒன்றிய பாஜக கூட்டணி அரசு நூறு நாள் வேலைத்திட்டத்திலிருந்து மகாத்மாவின் பெயரைத் தூக்கி யுள்ளதோடு, அந்தத் திட்டத்திற்கும் வேட்டு வைத்துள்ளது. இதை மறைக்க நூறு நாள் வேலையை 125 நாட்களாக மாற்றியுள்ளோம் என மாய்மாலம் செய்கிறது. அந்தத் திட்டத்திற்கான நிதிச்சுமையையும் மாநில அரசுகளின் பக்கம் மடைமாற்றம் செய்கிறது. ஆனால் இந்தத் திட்டத்திற்கான பணி நாட்களை 150 நாட்களாக உயர்த்து வோம் என்கிறது அதிமுகவின் தேர்தல் அறிக்கை.  தொய்வு ஏற்படுத்துவது யார்? கீழடி அகழாய்விலிருந்து ஒன்றிய அரசு விலகிக் கொண்டது. ஒன்றிய அகழாய்வுத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கையைக் கூட வெளியிட மறுக் கிறது.

ஆதிச்சநல்லூர் ஆய்வு தொடர் பான அறிக்கையும் வெளியாக வில்லை. ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கை இதையெல்லாம் மூடி மறைத்து அகழாய்வுப் பணிகள் தொய்வின்றித் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தொய்வு ஏற்படுத்துவதே ஒன்றிய அரசு தான். பிறகு எப்படி இவர்கள் அந்தப் பணியை செய்வார்கள் என்று கூறப்பட வில்லை. ஒன்றிய மோடி அரசு மொழித் திணிப்பில் ஊக்கம் காட்டுகிறது. இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பில் தொடர்ந்து தீவிரமாக உள்ளது. தமிழ்நாட்டில் ரயில் நிலையங்களில் கூட இந்திப் பெயர்கள்தான் காணப்படு கின்றன. திருச்சியில் இவ்வாறு எழுதப் பட்ட போது அதிமுக வாய்திறக்காமல் மிக்சர் சாப்பிட்டிக் கொண்டிருந்தது.

ஆனால் தேர்தல் அறிக்கையில் ஒன்றிய ஆட்சி மொழியாக தமிழ்  உள்ளிட்ட மொழிகளை கொண்டு வருவோம் என்று அள்ளிவிடுகிறார்கள்.  எப்படி நம்புவது? ஒன்றிய அரசின் கல்விக் கொள்கை மாநில அரசிடமிருந்து கல்வித்துறையை பறிக்கிறது. கல்வி யை காவிமயமாக, கார்ப்பரேட்மயமாக மாற்றுகிறது. அதிமுக தேர்தல் அறிக்கையால் கூட இதனை மூடி மறைக்க முடியவில்லை. இருமொழிக் கொள்கையே எங்கள் கொள்கை; ஒன்றிய அரசு கல்விக்கொள்கையில் ஏற்க முடியாத பகுதிகள் உள்ளன என் றெல்லாம் கூறப்பட்டுள்ளது. கூட்டணி யின் போதே நீட்டிய இடமெல்லாம் கையெழுத்து போட்டவர் எடப்பாடி பழனிசாமி. தன்னுடைய பிரச்சார வாகனத்தின் முகப்பில் கூட மோடியின் படத்தையே வைத்திருக்கிறார். இவர் கல்வித்துறையை தமிழ்நாட்டின் நலனை பாதுகாப்பார் என்று எப்படி நம்ப முடியும்? சிறுபான்மை மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற முயல்கிறது ஒன்றிய பாஜக கூட்டணி அரசு.

குடியுரி மை திருத்தச் சட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்த போது ஆதரித்து சிறு பான்மை மக்களுக்கு துரோகம் செய்தது அதிமுக. ஆனால் சிறு பான்மை மக்களை ஏமாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையில் சில வாக்குறுதிகளை வழங்கியிருக் கிறார்கள். ஆனால் சிறுபான்மை மக்கள் இவர்களை நம்பப் போவதில்லை. அதிமுக தேர்தல் அறிக்கையில் கடைசிப் பகுதியில் தெருவில் சுற்றித்  திரியும் வாயில்லா ஜீவன்களுக்கு உலகத் தரத்தில் காப்பகம் அமைக் கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகாரப் பசி மயக்கத்தில் மதவெறி இந்துத்துவா சக்திகளிடம் மாட்டிக் கொண்ட சில கட்சிகளும் கூட வாயில்லா ஜீவன்களாகத்தான் மாறிக் கொண்டிருக்கின்றன. அடுத்த தேர்தலில் வாக்குறுதி வழங்கும் உரிமை கூட இவர்களுக்கு இருக்குமா என்பதே கேள்விக்குறிதான்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.