பாஜக கூட்டு தந்த பின்னடைவு: சோதனைக் காலத்தில் அதிமுக!
22 May 2026, 11:46 pm

பாஜக கூட்டு தந்த பின்னடைவு: சோதனைக் காலத்தில் அதிமுக!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகால ‘திமுக - அதிமுக’ என்ற இருமுனைப் போட்டியைத் தகர்த்து, தமி ழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உரு வெடுத்துள்ளது.

இக்கட்சி இடதுசாரிகள் மற்றும் விசிக ஆதரவுடன் ஆட்சிப் பொறுப் பேற்றுள்ளது.

இந்த அதிரடி அரசியல் மாற்றம், திமுகவை இரண்டாம் இடத்திற் கும், அரைநூற்றாண்டு காலப் பாரம்பரிய மிக்க அதிமுகவை வெறும் 47 இடங்களு டன் மூன்றாம் இடத்திற்கும் தள்ளிப் படு பாதாளத்தில் வீழ்த்தியுள்ளது.

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றது முதல் கட்சி தொடர் தோல்விகளைச் சந் தித்து வருகிறது.

குறிப்பாக, தேர்தல் களத் தில் அதிமுகவும் - பாஜகவும் மறைமுக மாகவும் நேரடியாகவும் வைத்திருந்த சேராத சேர்க்கை சாமானிய மக்களின் நம் பிக்கையை முற்றிலும் இழக்கச் செய்தன.

சிறுபான்மையினர் மற்றும் மதச்சார்பற்ற வாக்காளர்களின் ஒட்டுமொத்தப் புறக்க ணிப்புக்கு இந்த பாஜக கூட்டுதான் முக் கிய காரணியாக அமைந்தது.

மேற்கு மண்டலம் உள்ளிட்ட அதிமுகவின் பாரம் பரியக் கோட்டைகள் அனைத்தும் தரை மட்டமாகின.

செல்வாக்கு மிக்கப் பல மூத்த தலைவர்கள் தங்களது சொந்தத் தொகுதி களிலேயே படுதோல்வியைச் சந்தித்த னர்.

எடப்பாடி பழனிச்சாமியின் நிர்வாகத் திறமையின்மையே இந்த வரலாற்று சிறப்புமிக்க தோல்விக்கு காரணம் என முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 சட்ட மன்ற உறுப்பினர்கள் தனியாகப் பிரிந்து புதிய அணியாக செயல்படத் தொடங்கி யுள்ளனர். அவர்கள் புதிய அரசு அமைத் துள்ள தவெக-விற்கும் தங்களது ஆத ரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிச்சாமி, அவர்கள் அனைவரையும் கட்சிப் பொறுப் புகளில் இருந்து அதிரடியாக நீக்கினார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக அமைச்சராகவும், ஆளுமைமிக்கத் தலை வராகவும் வலம் வந்த முன்னாள் அமைச் சர் பி.தங்கமணி, தவெக வேட்பாளர் விஜய லட்சுமியிடம் சுமார் 8,000 வாக்குகள் வித்தி யாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந் தார்.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் பர மத்தி வேலூர் தவிர மீதமுள்ள 5 தொகுதி களிலும் தவெக வேட்பாளர்களே வென்ற னர்.

தோல்வி மனவருத்தத்தில் இருந்த தங்கமணி, எடப்பாடியின் தலைமை மீது அதிருப்தி கொண்டு வேலுமணி அணியில் இணைந்தார்.

இதையடுத்து, அவரது மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்த எடப்பாடி, தனக்கு நெருக்கமான கே.பி. பி.பாஸ்கரை புதிய மாவட்டச் செயலாள ராக நியமித்துள்ளார்.

மாவட்டச் செயலா ளர் மாற்றம் நாமக்கல் மாவட்ட அதிமுக வினரை ‘மதில் மேல் பூனை’ போன்ற இக் கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது.

இதுகுறித்து தங்களது வேதனையைப் பகிர்ந்து கொண்ட மாவட்ட நிர்வாகி ஒரு வர், இவ்வளவு காலம் எங்களை வழி நடத்திய தங்கமணியை விட்டுவிட்டுப் பாஸ் கரை ஏற்றால் அது துரோகமாகும்.

அதே சமயம், பாஸ்கருடன் இணைந்து பணி யாற்றாவிட்டால் தலைமை எங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்.

எடப்பாடி பழனிச்சாமி இதுவரை நீக்கிய எவருக்கும் மீண்டும் பொறுப்பு வழங்கியதாக சரித் திரம் இல்லை.

இதனால், ‘இரட்டை இலை’ சின்னம் எங்கே இருக்கிறதோ அதுதான் கட்சி என்ற அடிப்படையில், சிலர் தங்க ளின் வாழ்வாதாரத்தை காக்க மெல்ல மெல்ல தங்கமணி ஆதரவு நிலையிலி ருந்து விலகி செல்ல தொடங்கியுள்ள னர், என்றார்.

தற்போதைய சூழலில் அதிமுக மீண் டும் ஒன்று சேரும் அறிகுறி தென்பட வில்லை.

தற்போதைய தலைமை மீது அதிருப்தி கொண்டு, கட்சி செயல்பாடு களில் இருந்து விலகி நிற்கும் நிர்வாகி களிடம் விளக்கம் கேட்கப்பட்டு, விரைவில் அவர்கள் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.

பாஜகவுடன் வைத்த மறைமுக உறவால் தொடங்கி, தவெக-வின் எழுச்சி மற்றும் உட்கட்சிப் பிளவு வரை அதிமுக தன் வர லாற்றிலேயே மிகக் கடுமையான ஒரு சோத னையான காலத்தை எதிர்கொண்டு வரு கிறது என்பது மட்டும் திண்ணம். (நநி)