இடையூறு செய்த அதிமுக கவுன்சிலர் ‘வெளுத்து வாங்கிய’ சிபிஎம் மாமன்ற உறுப்பினர்!
26 Feb 2026, 5:09 pm
<p><strong>இடையூறு செய்த அதிமுக கவுன்சிலர் ‘வெளுத்து வாங்கிய’ சிபிஎம் மாமன்ற உறுப்பினர்!</strong></p>
<p>கோவை, பிப். 26- கோவை மாநகராட்சி அவசரக் கூட்டத்தில், மக்கள் நலப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்து கொண்ட அதிமுக கவுன் சிலரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாமன்ற குழு தலைவர் வி.ராம மூர்த்தி கடுமையாகச் சாடிய சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியது. கோவை மாநகராட்சி அவசரக் கூட் டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. மாநக ராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாக ரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் தொடங்கிய இக் கூட்டத்தில், மறைந்த இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கும், மாநக ராட்சி கவுன்சிலர் சந்தோஷின் மறைந்த 6 வயது மகளுக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி யின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்பான 143 தீர்மானங்களை நிறை வேற்றுவதாக மேயர் அறிவித்தார். அப்போது, தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், விவா தமின்றி தீர்மானங்களை நிறைவேற்று வதாகக் கூறி அதிமுக கவுன்சிலர்கள் தேவையின்றி வாக்குவாதத்தில் ஈடு பட்டு இடையூறு செய்தனர். அப்போது எழுந்த சிபிஎம் குழு தலைவர் ராம மூர்த்தி, அதிமுகவினரின் அரசியல் நாடகத்தை அதிரடியாக முறியடித் தார். அவர் பேசுகையில்: “தேர்தல் நடத்தை விதிகள் அம லுக்கு வருவதற்கு முன்பாக, நிலுவை யில் உள்ள மக்கள் நலப் பணிகளுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டி யது அவசியம். அப்போதுதான் தேர்தல் முடிந்த கையோடு பணிகளைத் தொய் வின்றித் தொடர முடியும். இதை உணராமல் அதிமுகவினர் உள் நோக்கத்தோடு இடையூறு செய்கின்ற னர் என வாதிட்டார். இதனையடுத்து, அதிமுக கவுன் சிலர் பிரபாகரன் தொடர்ந்து கூச்ச லிட்டார். இதனால் ஆவேசமடைந்த வி. ராமமூர்த்தி மற்றும் திமுக, காங்கிரஸ் கூட்டணி கவுன்சிலர்கள், அதிமுக கவுன் சிலரைச் சூழ்ந்து கொண்டு மக்கள் பணி களைத் தடுக்க வேண்டாம் என எச்சரித்த தால் அவையில் பெரும் சலசலப்பு ஏற் பட்டது. ஆக்கப்பூர்வமான விவாதத்திற்குப் பதில் சொல்ல முடியாமல் திணறிய அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் இருவர் அவையை விட்டு பாதி யிலேயே வெளியேறினர். இதனைத் தொடர்ந்து பேசிய ராம மூர்த்தி, வளர்ச்சிப் பணிகளுக்கு முன் கூட்டியே ஒப்புதல் வழங்கிய நிர்வாகத் திற்கு நன்றி தெரிவித்ததுடன், அப்பணி களை விரைந்து முடிக்கவும் வலியுறுத் தினார். இறுதியில் 143 தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது.</p>
