தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாநில உரிமைகளை அடகு வைக்கும் அதிமுக - பாஜக கூட்டணி

13 Feb 2026, 5:58 pm
மாநில உரிமைகளை அடகு வைக்கும் அதிமுக - பாஜக கூட்டணி
<p><strong>மாநில உரிமைகளை அடகு வைக்கும் அதிமுக - பாஜக கூட்டணி</strong></p> <p>சேலத்தில் கே. பாலபாரதி சாடல் சேலம், பிப். 13 - விடுதலை இந்தியாவில் 1950-இல் நிலம், வேலை, சமத்துவம் கேட்டுப் போராடி சேலம் சிறையில் அடைக்கப் பட்டு, அங்கு சிறைக்குள்ளேயே நடத்தப்பட்ட அரச பயங்கரவாத அடக்குமுறையில் சுட்டுப் படு கொலை செய்யப்பட்ட 22 தியாகி களின் நினைவு தினப் பொதுக் கூட்டம் சேலம் சாமிநாதபுரத்தில் நடை பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப் பினர் கே. பாலபாரதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், தமிழ கத்தின் வாழ்வாதாரத்தைக் கெடுக்கும் பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்திருப்பது தமிழக மக்களுக்குச் செய்யும் துரோகம் எனச் சாடினார். தன் மீதான வழக்குகளுக்குப் பயந்தே அதிமுக இக்கூட்டணியை அமைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மாநிலத்திற்கு வரவேண்டிய 40 சதவீத வரிப் பகிர்வு, இடர் மேலாண்மை நிதி மற்றும் கல்வி நிதியை வழங்காமல் மோடி அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். சிலிண்டர் மானியம் முதல் மகளிருக்கான நலத்திட்டங்கள் வரை அனைத்திலும் பாஜகவும் அதிமுகவும் மக்களை ஏமாற்றி வருவதாகச் சாடிய அவர், ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துவதையும், நூறு நாள் வேலைத் திட்ட நிதியை முடக்குவதையும் விமர்சித்தார். தமிழகத்தின் சுய ஆட்சியைப் பாதுகாக்கவும் மதவெறி அரசியலை முறியடிக்கவும் திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்தப் பொதுக் கூட்டத்தில் சிபிஎம் வடக்கு மாநகரச் செயலாளர் என். பிரவீன் குமார் தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில், மாநிலச் செயற்குழு உறுப்பினர் செ.முத்துக் கண்ணன், மாவட்டச் செயலாளர் ஏ. ராமமூர்த்தி, மாநகரச் செயலாளர்கள் பி. கணேசன், ஏ. சுந்தரம், மற்றும் டி. ராஜேஷ்குமார், எ. கலியபெருமாள், கே.ராஜாத்தி, எம். கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுத் தியாகி களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.