தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாட்டின் பெயரை ‘தட்சிண பிரதேஷ்’ என மாற்றவும் அதிமுக - பாஜக கூட்டம் தயங்காது!

1 Apr 2026, 4:02 pm
தமிழ்நாட்டின் பெயரை ‘தட்சிண பிரதேஷ்’ என மாற்றவும் அதிமுக - பாஜக கூட்டம் தயங்காது!
<p><strong>தமிழ்நாட்டின் பெயரை &lsquo;தட்சிண பிரதேஷ்&rsquo; என மாற்றவும் அதிமுக - பாஜக கூட்டம் தயங்காது!</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, ஏப். 1 - &ldquo;ஒன்றிய ஆட்சியதிகாரத்தில் மீண்டும் என்.டி.ஏ. ஆட்சி அமைந் தால், தமிழ்நாட்டின் பெயரையே &lsquo;தட்சிண பிரதேஷ்&rsquo; என்று மாற்றவும் தயங்க மாட்டார்கள்&rdquo;, என்றும்; &ldquo;இந்த ஆபத்தைத் தடுக்க ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் பாஜக &ndash; அதிமுக கூட்டணிக்கு எதி ராக, ஓரணியில் இணைய வேண்டும்&rdquo; என தமிழக முத லமைச்சரும் தி.மு.க. தலைவரு மான மு.க. ஸ்டாலின், திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆத ரித்துப் பேசிய அவர், அதிமுக-வின் துரோகங்களையும் பாஜக -வின் தமிழக எதிர்ப்பு அரசிய லையும் கடுமையாகச் சாடினார். அதிமுகவை அடிமைக் &nbsp;கூட்டமாக்கிய பழனிசாமி! தனது உரையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழ னிசாமியைச் சாடிய முதலமைச் சர், &ldquo;தன்னுடைய ஊழல் புகார் கள் மற்றும் உறவினர்கள் வீடு களில் நடந்த ரெய்டுகளில் இருந்து தப்பிக்க, ஒட்டுமொத்தக் கட்சி யையும் பாஜகவிடம் பழனிசாமி அடகு வைத்துவிட்டார். மக்கள் வாக்களிக்காமலேயே எம்எல்ஏ-க்களை ஏலத்தில் எடுத்து ஒரு முறை முதலமைச்சரான கூவத் தூர் வரலாறு நமக்குத்தெரியும். மீண்டும் இவரிடம் ஆட்சி சென் றால் தமிழ்நாட்டை தில்லிக்கு விற்று விடுவார்&rdquo; எனச்சாடினார். மேலும், அதிமுக-வின் &nbsp;&lsquo;திராவிடம்&rsquo; குறித்த நிலைப் பாட்டை விமர்சித்த அவர், மதுரை யில் நடைபெற்ற கூட்டத்தில் தந்தை பெரியார் படத்தை அகற்ற சொன்ன பாஜக-வின் உத்தர வுக்குப் பணிந்த பழனிசாமிக்குச் சுயமரியாதை இல்லை என்றார். &ldquo;திராவிடம் என்றால் என்ன வென்றே தெரியாது என்று சொல்லும் பழனிசாமி, அதிமுக எனும் பேரியக்கத்தை அடிமைக் கூட்டமாகச் சீரழித்து விட்டார்&rdquo; என்று குற்றம் சாட்டினார். சி.ஏ.ஏ. துரோகம் &nbsp;ஒரு இரத்தக்கறை! குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) குறித்துப் பேசிய முத லமைச்சர், &ldquo;மாநிலங்களவை யில் அதிமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவால்தான் சி.ஏ.ஏ. சட்டம் நிறைவேறியது. அந்தச் சட்டத்தை ஆதரித்துவாக்களித்த துரோகத்தால், போராட்டங்களில் உயிரிழந்த 70 பேரின் இரத்தக்கறை அதிமுக மற்றும் அன்புமணி ராமதாஸ் கைகளில் இருக்கிறது. &nbsp;அப்போது &lsquo;யார் பாதிக்கப்பட்டார்?&rsquo; என்று கேட்ட பழனி சாமி, இப்போது தேர்தல் நாடகத்திற்காக அந்தச் சட்டத்தை &nbsp;எதிர்ப்பதாகப் பல்டி அடிக்கிறார்&rdquo; என விளாசினார். மேலும், பா.ஜ.க. அரசு கடந்த 11 ஆண்டுகளில் தமி ழகத்திற்கு ஒரு சிறப்புத் திட்டத்தைக் கூட வழங்க வில்லை என்று குறிப்பிட்ட அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, சென்னை மெட்ரோ ரயில் நிதி ஆகிய வற்றை முடக்கி வைத்துள்ளதாகச் சாடினார். மக்களைக் கவரும் புதிய திட்டங்கள்! திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று உள்ள முக்கிய அம்சங்களை விளக்கிய முதல மைச்சர், மகளிர் உரிமைத் தொகை 2,000 ரூபாயாக &nbsp;உயர்த்தப்படும் என்றும், &lsquo;இல்லத்தரசி&rsquo; திட்டத்தின் கீழ் &nbsp;வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும், கல்லூரி மாணவர்களுக்கு மாதாமாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை, விவசாயிகளுக்கு இலவச நவீன மின்சாரப் பம்பு செட்டுகள் மற்றும் நெல் &nbsp;கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 3,500 ரூபா யாக உயர்வு போன்ற அதிரடித் திட்டங்களையும் முன்வைத்தார். திருச்சி மாவட்ட வேட்பாளர்கள் திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பா ளர்களைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, திருச்சி மேற்குத் தொகுதியில் கழகத்தின் முதன்மைச் செய லாளர் கே.என். நேரு, திருச்சி கிழக்குத் தொகுதியில் இனிகோ இருதயராஜ், திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அதேபோல், லால்குடியில் பாரிவள்ளல், மண்ணச்சநல்லூரில் கதிரவன், திருவரங்கத்தில் எஸ். &nbsp;துரைராஜு, முசிறியில் கருணை ராஜா ஆகியோ ரும், மணப்பாறை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் அப்துல் சமது அவர்களும் உதயசூரியன் சின்னத்தில் களம் காணுகின்றனர். துறையூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு கை &nbsp;சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்குப் பெருவாரி யான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். &ldquo;இந்த ஜனநாயகப் போர் தி.மு.க.வின் வெற்றிக் காக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் தன்னுரிமையைக் காக்க நடக்கும் போர்&rdquo; எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.