தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் கார்ப்பரேட் லாபவெறியும் உழைக்கும் மக்களின் எதிர்காலமும் - என். குணசேகரன்

9 Nov 2026, 8:28 pm
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் கார்ப்பரேட் லாபவெறியும் உழைக்கும் மக்களின் எதிர்காலமும் - என். குணசேகரன்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் கார்ப்பரேட் லாபவெறியும் உழைக்கும் மக்களின் எதிர்காலமும் - என். குணசேகரன்

அறிவியல் வளர்ச்சியின் மகத்தான கண்டுபிடிப்பாகச் செயற்கை நுண்ணறிவு திகழ்கிறது. இன்று இது மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் ஊடுருவியுள்ளது. நிர்வாகம், நிதி, சுகாதாரம் மற்றும் அன்றாட நுகர்வு

வரை அனைத்துத் துறைகளிலும் ஏஐ நீக்கமற நிறைந்துள்ளது. மொத்த செயல்பாடுகளில் ஏஐ பயன்பாடு தற்போது 34 சதவீதம் உள்ளது; இது 2030-க்குள் 54%-ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவியல் வளர்ச்சியால் மக்கள் அனைவரும் பயனடைய வேண்டும். ஆனால், முதலாளித்துவச் சமூகத்தில் ஏஐ என்பது உலகின் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மேலும் அதிக செல்வம் சேர்க்கும் கருவியாகவே பயன்படுத்தப்படுகிறது.

‘ராக்வெல் ஆட்டோமேஷன்’ எனும் நிறுவனம் 17 நாடுகளில் நடத்திய கணக்கெடுப்பில், ஆசிய-பசிபிக் உற்பத்தியாளர்களில் 95% பேர் சந்தைப் போட்டியில் நிலைத்து நிற்க டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிச் செல்வதாகக் குறிப்பிட்டனர். அதாவது, கார்ப்பரேட் லாபவெறிதான் முதன்மைக் குறிக் கோள் என அவர்கள் கருதுகின்றனர்.

“சமூகத்தைச் சீர்குலைக்கும்” லாபவெறி

ஏஐ பல சிக்கலான செயல்பாடுகளை எளிதானதாக மாற்றினாலும், அந்நிறுவனங்களில் உழைக்கும் ஊழியர்கள் இதனால் பயனடைவதில்லை. உலகப் பெரும் கோடீஸ்வரர்களின் செல்வம் 2025-இல் ₹1,352.4 லட்சம் கோடியாக இருந்தது; அது 2026-இல் ₹1,688.4 லட்சம் கோடியாக உயர்ந்தது. அதாவது ஒரே ஆண்டில் சுமார் ₹336 லட்சம் கோடி அதிகரித்துள் ளது. இதற்கு ஏஐ மூலமான மூலதனக் குவிப்பே முக்கியப்பங்காற்றியுள்ளது.

கடந்த ஓராண்டில், ஏஐ சார்ந்த சொத்துக் குவிப்பினால் 45 புதிய நபர்கள் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகப் பணக்காரர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் ஏஐ நிறுவன கோடீஸ்வரர்களின் மொத்த செல்வம் சுமார் ₹277.87 லட்சம் கோடி அளவிற்கு அதிகரித்துள்ளது. இது பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரத்தை விடப் பெரியது.

என்விடியா (NVIDIA) நிறுவனம் கிராபிக்ஸ் பிராசசிங் யூனிட்களையும், சாட்ஜிபிடி போன்ற ஏஐ கருவிகளுக்கான கணினிச் சில்லுகளையும் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ₹250 லட்சம் கோடி ஆகும். பிரம்மாண்டமான இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியால் நிறுவனங்கள் ஈட்டுகிற மிக அதிகமான லாபம், உழைக்கும் சாதாரண தொழிலாளர்களைச் சென்றடைவதில்லை. இதனால்தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அளவிற்கு அதிகமான செல்வக் குவிப்பு “சமூகத்தைச் சீர்குலைக்கும்” அபாயம் கொண்டதுஎன்று ஆந்த்ரோபிக் (Anthropic) தலைமை நிர்வாகி டேரியோ அமோடேய் இந்த உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் பெருவீக்கம்

செயற்கை நுண்ணறிவின் பெருவளர்ச்சி என்பது ஓர் ஊகக் குமிழி (Speculative Bubble) ஆகும். அது வெடித்துச் சிதறுவது இயல்பு; இது நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்லாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவாறு, 2025-இல் அமெரிக்க வணிக நிறுவனங்கள் அநேகமாக 1.5 டிரில்லியன் டாலர்களை தகவல் தொழில்நுட்ப சாதனங்களிலும், மென்பொருள்களிலும் முதலீடு செய்துள்ளன. “டாட் காம் குமிழி வெடிப்பு” நிகழ்ந்தபோது இருந்த 829 பில்லியன் டாலர் வணிகம் என்ற உச்ச அளவைக் காட்டிலும் இது இரண்டு மடங்குகள் அதிகமாகும். நான்கு பெரும் நிறுவனங்கள் மட்டுமே — ஆல்பபெட், அமேசான், மெட்டா, மைக்ரோசாப்ட் — 2026-இல் 725பில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளன. 2025-இல்உலகச் செயற்கை நுண்ணறிவு ஆதாரக் கட்டு மானங்களுக்கு 400 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் குவிமொத்த செலவினம் 2030-இல் 5 முதல் 7 டிரில்லியன் டாலர்களாக இருக்கும்.

ஸ்டாண்டர்ட் அண்ட் பூவர் - 500 (S&P 500) நிறுவனப் பங்குச்சந்தை கணக்கீடுகளின்படி பார்த்தால், செயற்கை நுண்ணறிவு பங்குகள் மொத்த சந்தை மூலதனத்தில் 40% ஆக இருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு முதலீடுகள் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் அநேகமாக 50% ஆகும். அதே நேரத்தில் கார்ப்பரேட் லாபங்கள் 4.3 டிரில்லியன் டாலர், அதாவது ஒவ்வொரு ஆண்டும் 23 சதவீதம் வளர்ச்சியைக் கண்டுள்ளன. இந்த அதீத உயர்வு மிகச்சில பெருநிறுவனங்கள் வசம் குவிந்துள்ளது. இதனை அவர்கள் சுற்று நிதி (Circular Financing) மற்றும் அதீத மதிப்பு கணக்கீடுகள் (Inflated Accounting) வாயிலாகச் சாத்தியமாக்கியுள்ளனர். ஆகவே, இதிலிருந்து வருவாய்கள் ஈட்டப்படுவது தவறினாலோ அல்லது நிலைமைகள் இறுக்கமடைந்தாலோ, வணிகக் குமிழிகள் வெடித்துச்சிதறிப் பங்குச்சந்தையையும் தன்னோடு சேர்த்துச் சரித்துவிடும்.

முக்கியமாக, இந்தப் பெருவீக்கமானது அடிநீரோட்டமாக உள்ள தேக்கத்திற்கு முகமூடியிட்டு மறைக்கும்; தொழிலாளர் ஊதியத்தைச் சரிக்கும். லாபம் உற்பத்தித் திறன் வாயிலாக அமைவதைக் காட்டிலும் வரிச் சலுகைகள் வாயிலாகவே அதி கரிக்கும். இதன் பொருள், இதன் வீழ்ச்சிப் போக்கானது நம்மைப் பொருளாதார நெருக்கடியை நோக்கி உந்தித் தள்ளிவிடும்.

பங்குச்சந்தை லாபமும் ஆசிய சந்தையும்

ஏஐ தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் பெரிய லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பங்குச்சந்தையில் நிறுவனங்களின் மதிப்பு உயர்ந்து, முதலீட்டாளர்கள் ஏற்கனவே லாபம் சம்பாதித்து விட்டனர். ஆசியாவில் தொழில்துறை, வர்த்தகம் மற்றும் நிறுவனசெயல்பாடுகளில் ஏஐ பயன்பாடு அதிகரிக்கிறது. ஆசிய-பசிபிக் ஏஐ சந்தை 2024-ல் சுமார் ₹6,036.51 கோடியிலிருந்து₹6,611.42 கோடி வரை இருந்தது; 2025-ல் ₹9,773.40 கோடியாக வளர்ந்தது; 2030-க்குள் இது ₹70,425.97 கோடியை எட்டும்எனக் கணிக்கப்பட்டுள்ளது.உலகளாவிய ஏஐ மென்பொருள் வருவாயில் ஆசியாவின் பங்கு 2030-க்குள் 33%-லிருந்து 47%-ஆக உயரும்.ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் ஸ்மார்ட்-ஃபேக்டரி ஒருங்கி ணைப்பில் சீனாவும், ரோபோட்டிக்ஸில் ஜப்பான் மற்றும் தென்கொரியாவும் முன்னணியில் உள்ளன; இந்தியா ஏஐ-ஆல் இயக்கப்படும் விநியோகச் சங்கிலி மற்றும் தரக் கட்டுப்பாட்டு தானியங்கி முறையில் கவனம்செலுத்துகிறது.

வேலைவாய்ப்புச் சிக்கல்களும் உழைப்புச் சுரண்டலும்

வெகு வேகமாக ஏஐ வளர்ச்சி ஏற்பட்டாலும், அந்த வளர்ச்சி வேலைவாய்ப்புச் சிக்கல்களையும் கடுமை

யான வாழ்வாதாரப் பிரச்சனைகளையும் தீவிரப் படுத்தியுள்ளது. வேலை இழப்புகள் அதிகரித்து வருவது முக்கியப்பிரச்சனையாகியுள்ளது. கிக் (Gig) தொழிலாளர்களைப் பொறுத்தவரை, அல்கா ரிதம்களே ஊதியத்தை நிர்ணயிக்கின்றன; பணிகளைஒதுக்குகின்றன; செயல்திறனைக் கண்காணிக் கின்றன. ஒருவர் தொடர்ந்து பணியாற்ற முடியுமா இல்லையாஎன்பதை இயந்திரத்தனமான அல்காரிதம்களே தீர்மானிக்கின்றன.

உயர்-தொழில்நுட்ப அல்காரிதம்களுக்குப் பின்னால், வழக்கமான உள்ளடக்கம் மற்றும் தரவுப் பணிகளைக் கையாளும் குறைந்த ஊதியம் பெறும்ஒரு மிகப்பெரிய உழைக்கும் வர்க்கமே இயங்கி வருகிறது. 2026-இன் தொடக்கத்தில், அதிக ஏஐ பயன்பாடு கொண்ட துறைகளில் வேலைகள் குறைந்துவருவதாகத் தொழிலாளர் இழப்பீட்டுக்கான தேசிய கவுன்சிலின் (NCCI) ஆய்வு தெரிவிக்கிறது.

2022-இல் சாட்ஜிபிடி அறிமுகப்படுத்தப்பட்டதி லிருந்து, மென்பொருள் மேம்பாடு மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்ற ஏஐ-பயன் படுத்தப்படும் தொழில்களில் வேலைவாய்ப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்தன. அமெரிக்காவில் பட்டதாரிகளிடையே வேலையின்மை விகிதம்2026-இன் தொடக்கத்தில் 5.6%-ஐ எட்டியது. இது மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட 1.6 சதவீதம் அதிகம்.ஏஐ பயன்பாடு வேகமாக உள்ள நிதி மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில், 2026-ல் மாதத்திற்கு சுமார் 28,000வேலைகள் குறைந்து வருகின்றன.

எதிர்கால வேலைவாய்ப்பில் ஏஐ-யின் தாக்கம் குறித்த கணிப்புகள் கவலையளிப்பதாகவே உள்ளன. 50% வெள்ளை-காலர் பணியிடங்களை ஏஐ அழிக்கக்கூடும் என்று ஆந்த்ரோபிக் தலைமைநிர்வாகி டேரியோ அமோடேய் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால், இதற்கான தீர்வு பற்றிய முதலாளிகளின்கருத்துகள் முதலாளிகளின் நலன் காப்பதாகவே அமையும்.

இதற்கு மாறாக, உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) ‘எதிர்கால வேலைகள் அறிக்கை 2025’, உலகளவில் 7.8 கோடியே நிகர வேலைகள் 2030-க்குள் உருவாகலாம் எனக் கணிக்கிறது. அதாவது 9.2 கோடி பணிகள் நீக்கப்பட்டு, 17 கோடி புதியபணிகள் உருவாக்கப்படும். ஆனால் மொத்த எண்ணிக்கை உயர்வினைக் கருதி திருப்தி அடைய இயலாது. வேலையிழந்த தொழிலாளர்களி டம் புதிதாக உருவாக்கப்படும் பணிகளுக்குத் தேவையான திறன்கள் இல்லாத சூழலில் அவர்களுக்கு வாழ்வாதார நெருக்கடி தீவிரமாகிறது. இதுதான் இந்த முதலாளித்துவ வளர்ச்சி ஏற்படுத்துகிற வரலாற்று அவலம். இந்த “மறுதிறன் இடைவெளியை” (Reskilling gap)நிரப்புவதுதான் மிகப் பெரிய சவால் ஆகும்.

தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமையும், போராட்டங்களும்

ஏஐ புகுத்தப்படுவதால் ஏற்படுகிற எதிர்மறைப் பாதிப்புகளைத் தவிர்க்க வெறும் அரசுத் தலையீடு மட்டும் போதாது; உழைக்கும் மக்களின் பலமான நிர்பந்தம் தேவைப்படுகிறது. தென் கொரியாவின் ‘ஏஐ அடிப்படைச் சட்டம்’ ஜனவரி 2026-இல் நடைமுறைக்கு வந்தது; சீனா பல கட்டாய ஏஐ நடை முறைகளைச் செயல்படுத்துகிறது. ஜூன் 2026-இல், சர்வதேச தொழிலாளர் மாநாடு உருவாக்கிய பிளாட்பார்ம் பொருளாதாரத்திற்கான - அதாவது இணைய தள வழிபொருளாதாரத்திற்கான பணிச்சட்டம் முக்கிய மைல்கல்லாகத் திகழ்கிறது.

இந்திய டெலிவரி தொழிலாளர்களின் தொடர் போராட்டங்கள் அளித்த நிர்பந்தத்தினால், 10 நிமிடத்தில் டெலிவரி என்ற ஆபத்தான நடைமுறைகளை ஓரளவு கட்டுப்படுத்த முடிந்துள்ளது. ஏஐ தொழில்நுட்பம்மக்கள் நலன் சார்ந்ததாக மாறவேண்டுமானால், இந்தத் துறையில் லாப வேட்டையாடும் கார்ப்பரேட் ஆதிக்கத்தைஎதிர்த்து உழைக்கும் தொழிலாளர்களின் அமைப்புரீதியான வர்க்கப் போராட்டம் அவசியமாகும்.ஐரோப்பாவில் பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், சுகாதாரம், உற்பத்தி, கல்வி மற்றும் பல பொதுத் துறைகளில் சுமார் 42 லட்சம் தொழிலாளர்களின் நலன் காக்க,கூட்டுப்பேச்சுவார்த்தைகள் நடந்து 47 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதில் தொழிலாளர் நலன் காக்கும் ஏஐ விதிகள் இடம்பெற்றுள்ளன.

ஐரோப்பாவில் தொழிலாளர்கள் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், ஆசியாவில் தற்போதுதான் 8 கோடி தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஏஐ தாக்கம் குறித்த கூட்டுப் பேச்சுவார்த்தை மற்றும் சட்டக் கோரிக்கைகள்எழுப்பும் நடவடிக்கைகள் முன்னெ டுக்கப்படுகின்றன.தென் கொரியாவில், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சங்கங்கள் பிரம்மாண்டப் பேரணிகளை நடத்தின. ஏஐகுறைக்கடத்தி (Semiconductor) தயாரிப்பால் கிடைத்த கூடுதல் லாபத்தைக் கடை நிலை ஊழியர்களுக்கும்நியாயமாகப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும், பணியிடங்களில் ஏஐ தானி யங்கி முறைகளைஅறிமுகப்படுத்துவதற்கு முன் ஊழியர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் அவை வலியுறுத்தின.

ஹூண்டாய் மோட்டார் தொழிலாளர் சங்கம் ஊதியம் மற்றும் ஏஐ-தானியங்கி முறைக்கு எதிரான கட்டாயப் பாதுகாப்புகளை வலியுறுத்தி முழு அள விலான வேலைநிறுத்தங்களை மேற்கொண்டது. பிலிப்பைன்ஸில், வாடிக்கையாளர் சேவை மற்றும் அலுவலக வேலைகளில் உற்பத்தித் திறன் கொண்ட ஏஐ (Generative AI) பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொழில்நுட்பத் துறை தொழிலாளர்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது. பணிநீக்கத்திற்குப் பதிலாக மறுபயிற்சி உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் அதற்கான விதிகள் உருவாக்கப்படவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஏஐ, நாடுகளின் பொருளாதாரத்தை மறுவடி வமைப்பு செய்து வருகிறது; தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனிதக் கௌரவத்தைப் பழிவாங்குவதாக இருக்கக் கூடாது. தொழிலாளர் பாதுகாப்பையும், உழைப்புக்கு ஏற்ற நியாயமான செல்வப் பங்கீட்டையும் உறுதி செய்வதே டிஜிட்டல் எதிர்கா லத்துக்கானசரியான பார்வையாக இருக்க முடியும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.