தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செயற்கை நுண்ணறிவு செலவுகள் : திகைக்கும் நிறுவனங்கள்

8 Jul 2026, 8:38 pm
செயற்கை நுண்ணறிவு செலவுகள் : திகைக்கும் நிறுவனங்கள்

செயற்கை நுண்ணறிவு செலவுகள் : திகைக்கும் நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட் பத்தில் மிக வேகமாக முதலீடு செய்து வருகின்றன. தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துவிட்டு இத்தொழில் நுட்பம் மூலமாக பணிகளை முடிப்பது, லாபத்தை அதிகரிப்பது, பணியிடங்களில் மனிதர் கள் மற்றும் ரோபோக்கள் இணைந்து பணி யாற்றும் சூழலை உருவாக்குதல் ஆகிய வற்றுக்காக நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவில் முதலீடுகளைச் செய் கின்றன.

இதே நேரத்தில் பல நிறுவனங்க ளின் இயக்குநர்கள் குழு (Boards), செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் தில் செய்யப்படும் முதலீடுகளுக்கான வருவாய் (ROI) மற்றும் அதில் உள்ள அபாயங்கள் குறித்துக் கவலை எழுப்ப துவங்கியுள்ளனர்.

அதாவது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் ஏற்படும் தவறான முடிவுகள், தரவு மீறல்கள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் (Hallu cinations) போன்ற அபாயங்கள் நிறுவ னங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த லாம் என கவலை தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

பல நிறுவனங்கள் தங்கள் வருவா யில் 0.8 சதவீதத்திலிருந்து சுமார் 1.7 சத வீதம் வரை செயற்கை நுண்ணறிவில் முதலீட்டை இரட்டிப்பாக்கத் திட்ட மிட்டுள்ளன.தற்போது, பெரும்பாலான ஐடி சேவை நிறுவனங்கள் ‘டோக்கன் மேக்ஸிங்’ (Tokenmaxing) எனப்படும் அதிகப்படியான செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டினால் நிதி அழுத்தத்தைச் சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு தற்போது வணிகத்தின் மையமாக மாறி வந்தாலும், அதன் பயன்பாட்டினால் ஏற்படும் செலவுகள் மற்றும் நிறுவனங்க ளின் பட்ஜெட்டில் ஏற்படும் தாக்கங்கள் காரணமாக நிறுவனங்கள் மிகவும் கவனமாகச் செயல்படுவதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.