முந்தய பக்கம்

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் இந்தியாவில் 50,000 ஐடி ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம்

11 Jul 2026, 8:40 pm
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் இந்தியாவில் 50,000 ஐடி ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம்
<p><strong>செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் இந்தியாவில் 50,000 ஐடி ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம்</strong> </p><p>செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியால், இந்தியா வின் தகவல் தொழில்நுட்ப துறையில் (ஐடி) பணிபுரியும் முறையில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. டீம்லீஸ் (TeamLease) மற்றும் சிஐஇஎல் (CIEL) போன்ற நிறுவனங்க ளின் தரவுகளின்படி, செயற்கை நுண்ண றிவு காரணமாக இந்த ஆண்டு சுமார் 43,000 முதல் 50,000 ஐடி ஊழியர்கள் வரை வேலை இழக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. டீம்லீஸ் வெளியிட்டுள்ள தரவுக ளின்படி, கடந்த மே மாதம் வரை 10,000 முதல் 15,000 ஊழியர்கள் தங்களின் வேலைகளை இழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை நடப்பு முழு ஆண்டின் இறுதியில் 25,000 முதல் 35,000 ஆக உயரும் என அதில் எச்சரிக்கப் பட்டுள்ளது. அதே போல சிஐஇஎல் வெளி யிட்ட புள்ளிவிவரத்தின்படி, மே மாதம் வரை சுமார் 12,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முழு ஆண்டின் கணிப்பின்படி இந்த எண்ணிக்கை 18,000 முதல் 21,000 ஆக அதிகரிக்கும் என்றும், நடப்பு முழு ஆண்டின் இறுதியில் 20,000 முதல் 25,000 வரை வேலையிழப்பு ஏற்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram