முந்தய பக்கம்

அகமதாபாத் தேர்வு மையத்தில் ஹிஜாப் சர்ச்சை

23 Jun 2026, 9:07 pm
அகமதாபாத் தேர்வு மையத்தில் ஹிஜாப் சர்ச்சை
<p><strong>அகமதாபாத் தேர்வு மையத்தில் ஹிஜாப் சர்ச்சை</strong></p><p>குஜராத் மாநிலம் அகமதா பாத்தில் நீட் தேர்வுக்கு முந்தைய சோதனையின் போது, முஸ்லிம் மாணவியின் ஹிஜாப்பை தேர்வு கண்காணிப்பாளர் கள் அகற்றினர். இதற்கு மாணவியின் தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் தனது மகள் சிறுவயதில் இருந்தே ஹிஜாப் அணிந்து வருகிறார். அதனால் ஹிஜாப் அணிந்தே தேர்வெழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தேர்வு மையத்தின் கல்லூரி முதல்வர், தேர்வுப் பணியாளர்கள், காவல்துறை யினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை யைத் தொடர்ந்து, மாணவி ஹிஜாப் அணிந்து தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்த முடிவுக்கு சம்பவ இடத்தில் இருந்த பஜ்ரங் தளம் குண்டர்கள், “தேர்வு விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படவில்லை. கையில் கட்டும் புனிதக் கயிறு, மாலை கள், வளையல்கள் போன்ற இந்து மத அடையாளங்களை அணிந்திருந்த மாண வர்களைச் சோதனையின் போது அவற்றை அகற்றுமாறு கூறப்பட்டது. இது ன்?” என கேள்வி எழுப்பி போராட்டம் நடத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram