அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு 38 பேரின் மரண தண்டனையை உறுதி செய்த குஜராத் உயர்நீதிமன்றம்!
59 minutes before
<p><strong>அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு 38 பேரின் மரண தண்டனையை உறுதி செய்த குஜராத் உயர்நீதிமன்றம்!</strong></p><p>2008ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட 20 இடங்களில் நடத்தப்பட்ட 21 தொடர் குண்டுவெடிப்புகளில் 56 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த அகமதா பாத் சிறப்பு நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 2022இல் 49 பேரைக் குற்றவாளிகளாக அறிவித்து, அதில் 38 பேருக்கு மரண தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்ட னையும் விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் தாக் கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக் கள் செவ்வாயன்று குஜராத் உயர்நீதிமன் றத்தில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.ஒய்.கோக்ஜே மற்றும் சமீர் தேவ் அமர்வு, ”மனுதாரர் களின் மனுக்களை தள்ளுபடி செய்து, 38 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்ட னையையும், 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் இந்த நீதி மன்றம் உறுதி செய்கிறது. மேலும் குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பங் களுக்கு தலா ரூ. 10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் இழப்பீடாக குஜராத் அரசு வழங்க வேண்டும். இந்தத் தொகையை மார்ச் 31, 2027-க்குள் வழங்க வேண்டும்” என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.</p>
