கட்டுப்பாடின்றி கட்டிடங்களுக்கு அனுமதி தீவிர நிலநடுக்க அபாயத்தில் அகமதாபாத்
14 Dec 2025, 3:45 pm
<p><strong>கட்டுப்பாடின்றி கட்டிடங்களுக்கு அனுமதி தீவிர நிலநடுக்க அபாயத்தில் அகமதாபாத்</strong></p>
<p>அகமதாபாத் 2001ஆம் ஆண்டு ஜன வரி 26 மறக்க முடி யாத நாள். அன் றைய நாள் குஜராத் மாநிலம் அக மதாபாத்தில் 7.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியின் மேற்பரப்பிலிருந்து 23 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஹிரோஷிமா - நாகசாகி (ஜப்பான்) மீது வீசப்பட்ட 400 அணுகுண்டுகளுக் குச் சமம் என்று மதிப்பிடப்பட்டுள் ளது. இந்த கொடூர நிலநடுக்கத் தால் 13,000 பேர் மாய்ந்து போயினர். இந்நிலையில், வரும் காலங்களில் அகமதாபாத்தில் தீவிர நிலநடுக்கம் ஏற்படும் என இந்திய தரநிலைகள் பணியகம் (பிஐஎஸ் - Bureau of Indian Standards - BIS) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக பிஐஎஸ் வெளியிட்டுள்ள அறிக் கையில்,”அகமதாபாத் நக ரில் கட்டுப்பாடின்றி கட்டிடங்க ளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருவதால், அப்பகுதி நில அதிர்வு மண்டலம் III (3) இலி ருந்து மிகவும் ஆபத்தான மண்ட லம் IV (4)க்கு நகர்கிறது. இந்த மாற்றம் மே 3, 2026 முதல் அம லுக்கு வருகிறது. அதன்பிறகு அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு புதிய கட்டிடமும் கடுமையான நில அதிர்வு வடிவமைப்பு விதி களைப் பின்பற்ற வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது. இந் திய தரநிலைகள் பணியகத்தின் அதிர்ச்சி அளிக்கும் உத்தரவு, குஜராத் மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ரியல் எஸ்டேட், கட்டிட தொழில் முடங்கும் நாட்டில் முக்கிய தொழில் துறை நகரங்களில் ஒன்று அகம தாபாத் ஆகும். சென்னை, பெங்க ளூரு, தில்லி, மும்பை, கொல் கத்தா போன்று மின்னல் வேக நகர வளர்ச்சியில் உள்ளது. இத் தகைய சூழலில் இந்திய தரநிலை கள் பணியகம் தீவிர நிலநடுக்க அபாய எச்சரிக்கை விடுத்துள்ள தால், இனி அகமதாபாத்தில் வீட்டு மனை, தொழில்சார்ந்த மனை வாங்க மக்கள் அச்சம் கொள்வார்கள். இதனால் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டிட தொழில் முடங்கும் அபாயம் ஏற் பட்டுள்ளது. குறிப்பாக அடுத் தாண்டு மே மாதம் முதல் அம லுக்கு வரும் இந்திய தரநிலை கள் பணியகத்தின் புதிய விதி களால் கட்டுமானப் பொருட்க ளின் பயன்பாடு அதிகரிக்கும். திட்டச் செலவுகள் கடுமையாக உயரும் என தொழில்துறை ஆய் வாளர்கள் கணித்துள்ளனர்.</p>
