ஒரு வருடமாகியும் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 9% குடும்பங்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை
21 Jun 2026, 9:11 pm

ஒரு வருடமாகியும் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 9% குடும்பங்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை

கஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான ஏஐ-171 விமானம் 2025 ஜூன் 12 அன்று மதியம் 1:39 மணியளவில் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த விபத்து நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைந்த சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இழப்பீடு, உடமைகளை ஒப்படைக்கும் பணிகள் இன்னும் முழுமையடைய வில்லை என செய்திகள் வெளியாகி யுள்ளன.

டாடா சன்ஸ் நிறுவனம் (ஏர் இந்தியா தலைமை நிறுவனம்) வழங்கும் தலா ரூ.1 கோடி இறுதி நிதியுதவியை சுமார் 9% குடும்பங்களும், ஏர் இந்தியா வழங்கும் ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணத்தை 4% குடும்பங்களும் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. முழு மையற்ற ஆவணங்கள், குடும்ப வாரிசுரி மைத் தகராறுகள், எதிர்காலத்தில் கூடு தல் இழப்பீடு கோரி வழக்குத் தொடர மாட்டோம் என்ற உறுதிமொழிப் படி வத்தில் கையெழுத்திட குடும்பத்தினர் மறுப்பதே இந்தத் தாமதத்திற்குக் காரண மாகக் கூறப்படுகிறது.

ஆனால் ஒரு வரு டம் ஆன பின்பும் இந்த விவகாரம் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், பாதிக்கப்பட்ட 96% குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமும், 91% குடும்பங்களுக்கு இறுதி நிதியுதவியும் வழங்கப்பட்டுவிட்ட தாக ஏர் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், தரையில் (விமானம் விழுந்த இடத்தில்) காயமடைந்த 94% பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 6% பேருக்கு இன்னும் வழங்கவில்லை. உடைமைகள் விபத்து நடந்த இடத்திலிருந்து 22,000-க்கும் மேற்பட்ட தனிப்பட்ட உட மைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதுவரை பெரும்பாலான உடமைகள் ஒப்படைக் கப்பட்டுள்ள நிலையில், மீட்கப்பட்ட 25 டிஜிட்டல் சாதனங்களில் 16 சாத னங்கள் மட்டுமே பாதுகாப்புச் சோத னைக்குப் பின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 15 குடும்பங்கள் தங்களது சாதனங்க ளுக்காகக் காத்திருக்கின்றன. இதற்கி டையே, உயிரிழந்த 15 பயணிகளின் குடும்பத்தினர் தங்களது உறவினர்களின் உடமைகளைத் திரும்பப் பெறத் திட்ட வட்டமாக மறுத்துவிட்டதாகவும் கூறப் படுகிறது.