முந்தய பக்கம்

வேளாண் சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும்!

9 Apr 2026, 5:30 am
வேளாண் சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும்!
<p><strong>வேளாண் சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும்!</strong></p><p>தருமபுரி, ஏப்.9- பாலக்கோடு தொகுதியை மேம்படுத்தி வேளாண் சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும் என திமுக வேட்பாளர் செந்தில்குமார் வாக்குறுதியளித்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பி.என்.பி.இன்பசேகரன், காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>அப்போது அவர் பேசுகையில், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் 25 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள அதிமுக கே.பி.அன்பழகன், இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்குள்ள இளைஞர்கள் வேலை தேடி ஓசூர், பெங்களூருவிற்கு செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. எனவே, பாலக்கோடு தொகுதியில் வேளாண் சார்ந்த தொழிற்சாலை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவேன், என உறுதி அளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram