முந்தய பக்கம்

வேளாண் சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும்!

9 Apr 2026, 5:30 am
வேளாண் சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும்!

வேளாண் சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும்!

தருமபுரி, ஏப்.9- பாலக்கோடு தொகுதியை மேம்படுத்தி வேளாண் சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும் என திமுக வேட்பாளர் செந்தில் குமார் வாக்குறுதியளித்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பி.என்.பி.செந்தில்குமார், காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட அண்ணாமலை நகர், குரும்பர் கொட்டாய், மாட்லம்பட்டி, கரகஅள்ளி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் செவ்வாயன்று தேர்தலில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் 25 ஆண்டுகளாகச் சட்டமன்ற உறுப்பினராக உள்ள அதிமுக கே.பி.அன்பழகன், இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்குள்ள இளைஞர்கள் வேலை தேடி ஓசூர், பெங்களூருவிற்கு செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. எனவே, பாலக்கோடு தொகுதியில் வேளாண்மை சார்ந்த தொழிற்சாலை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவேன், என உறுதியளித்தார்.

இந்நிகழ்வில், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பி.என்.பி.இளங்கோவன், ஒன்றியச் செயலாளர்கள் சரவணன், கண்ணபெருமான், இளைஞரணி துணை அமைப்பாளர் மகேஷ், தொமுச மாவட்டத் தலைவர் அறிவழகன், சிபிஎம் நிர்வாகிகள் ஜி.அர்ஜுனன், பி.முருகன், மனோகரன், தேமுதிக நிர்வாகிகள் முருகன், மணிகண்டன், விசிக நிர்வாகி பிரகாஷ், கொமதேக நிர்வாகி சிற்றரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram