தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

25 Mar 2026, 5:29 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஈரோடு, மார்ச் 25- பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க உறுதியான நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்டத் தில் கோரிக்கை அட்டை அணிந்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதை கைவிட  வேண்டும். குறைந்தபட்ச ஊதியம், இபிஎப், இஎஸ்ஐ உள் ளிட்ட சமூக நலத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். தொழி லாளர் விரோத நான்கு தொகுப்புச் சட்டங்களை ரத்து செய்ய  வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க உறுதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கோரிக்கை அட்டைகளை அணிந்து ஈரோடு நகரம், பவானி  மற்றும் பெருந்துறையில் பிஎஸ்என்எல் சங்கங்களின் ஒருங் கிணைப்புக்குழுவினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங் கிணைப்புக்குழு தலைவர் எம்.நடராஜன் தலைமை வகித் தார். இதில் கன்வீனர் எஸ்.பாலு, ஓய்வூதியர் சங்க மாவட்ட  துணைச்செயலாளர் வி.மணியன், ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.தம்பிகலையான் உட்பட  பலர் கலந்து கொண்டனர். பவானி தொலைபேசி நிலைய அலுவலகம் முன்பு ஓய்வூதி யர் சங்க மாவட்ட உதவிச்செயலாளர் எல்.பழனிச்சாமி, பெருந்துறையில் ஓய்வூதியர் சங்க கிளைச் செயலாளர் மயில் சாமி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற் றன. இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில துணைத்தலை வர் கே.கிட்டுச்சாமி, ஓய்வூதியர் சங்க மாநில உதவிச் செயலாளர் எல்.பரமேஸ்வரன், மாவட்டத் தலைவர் பி.சின்ன சாமி, ஒப்பந்த ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எம் சையத்  இத்ரீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலையில் உலாவிய சிறுத்தையால் அச்சம் ஈரோடு, மார்ச் 25- ஆசனூர் - கேர்மாளம் சாலையில் பகல் நேரத்தில் உலவிய  சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கோடை காலம் துவங்கிய நிலையில், ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் வனப்பகுதி பசுமை இழந்து வருகிறது. இத னால், விலங்குகள் உணவுத் தேடி குடியிருப்புப் பகுதிகளில்  நுழைந்து வருகின்றன. இந்நிலையில், ஆசனூர் - கேர்மாளம்  சாலையில் திங்களன்று பகல் நேரத்தில் சிறுத்தை ஒன்று  உலவியது. இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்து  வாகனங்களை நிறுத்தினர். சிலர் வாகனங்களை முன் னோக்கி இயக்கியதுடன், ஒலி எழுப்பினர். இதனால் சிறுத்தை  தாக்க முற்பட்டது. ஆனால், யாருக்கும் தொந்தரவு  செய்யாமல் சிறிது நேரத்துக்குப் பின் வனத்துக்குள் சென்றது.  சிறுத்தை உலவியதை வீடியோ எடுத்த சிலர், அதை சமூக  வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ  காட்சிகள் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து ஆசனூர்  வனத்துறையினர் கூறுகையில், ஆசனூர் - கேர்மாளம் சாலை யில் கடந்த சில நாள்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. வாகனங்களில் பயணிக்கும் மக்கள் பாதுகாப்பாகச் செல்ல  வேண்டும். சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளைக் கண்டால்  ஒலி எழுப்பி அதை தொந்தரவு செய்யக்கூடாது. அதிக  சப்தத்தால் ஆத்திரமடையும் விலங்குகள் தாக்கக்கூடும்.  மேலும், வாகனங்களை விட்டு இறங்கி, விலங்குகளை படம் பிடிக்கவோ, உணவு வழங்கவோ கூடாது, என்றனர்.

யானை தாக்கி முதியவர் பலி? கோவை, மார்ச் 25– ஆனைகட்டி வனப்பகுதிக்குள் கேரளம் மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், யானை  தாக்கியதில் அவர் உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையி னர் தெரிவிக்கின்றனர். கேரளம் மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்த மயிலன் (56)  என்பவர், ஆனைகட்டியில் தங்கிப் படித்து வரும் தனது மகன்  மணிகண்டனை (25) பார்ப்பதற்காக கடந்த 15 ஆம் தேதி யன்று கோவை வந்துள்ளார். அதன் பிறகு அவர் திடீரென  காணாமல் போயுள்ளார். அவர் நீண்ட நாட்களாகியும் வீடு  திரும்பாததால் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்த னர். இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி ஆனைகட்டி வடக்கு  சுற்றுக்குட்பட்ட கோழிக்கண்டி வனப்பகுதியில் வனத்துறை யினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு  அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு  காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ  இடத்திற்கு வந்த போலீசார் மணிகண்டனுக்கு தகவல் தெரி வித்தனர். அப்போது அங்கு வந்த மணிகண்டன், சடலத்தின்  சட்டையை வைத்து அது தனது தந்தை மயிலன் தான் என்பதை  உறுதிப்படுத்தினார். வனப்பாதை வழியாகச் சென்றபோது எதிர்பாராத விதமாக காட்டுயானை தாக்கியதில் மயிலன் உயி ரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து தடாகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு  செய்து, கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோ தனைக்குப் பிறகு உடலை உறவினர்களிடம் ஒப்படைத்த னர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது.

ரூ.31.97 லட்சம் பொருட்கள், பணம் பறிமுதல்

கோவை, மார்ச் 25- கோவை மாவட்டத்தில் ரூ. 31.97 லட் சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத் தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள்  மிகவும் தீவிரமாக நடைமுறைப்படுத் தப்பட்டு வருகின்றன. இதன்ஒருபகுதி யாக, கடந்த 24 மணி நேரத்தில் (மார்ச்  24 காலை முதல் மார்ச் 25 காலை வரை) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் மற்றும் கண் காணிப்புக் குழுவினர் அதிரடி சோத னைகளை மேற்கொண்டனர். இந்த  சோதனையில், உரிய ஆவணங்க ளின்றி கொண்டு செல்லப்பட்ட மொத் தம் 31 லட்சத்து 97 ஆயிரத்து 240 ரூபாய்  மதிப்பிலான ரொக்கப் பணம் மற்றும்  பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள் ளன. தொகுதி வாரியாகப் பார்க்கும் போது, தொண்டாமுத்தூர் தொகுதியில்  5 லட்சம் ரூபாயும், கோவை தெற்கு  தொகுதியில் 9 லட்சத்து 71 ஆயிரம்  ரூபாயும், கிணத்துக்கடவு தொகுதியில்  சுமார் 6 லட்சம் ரூபாயும் அதிகாரிகளால்  கைப்பற்றப்பட்டது. இவை தவிர பொள் ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலூர், சிங்காநல்லூர் மற்றும் வால்பாறை ஆகிய பகுதிகளிலும் கணிசமான அளவு  ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. பணம் மட்டுமின்றி, கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு விநி யோகிக்க கொண்டு செல்லப்பட்ட தாக கருதப்படும் 16 டேபிள் ஃபேன் களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், மாவட்டம் முழு வதும் நடத்தப்பட்ட சோதனையில் 107  லிட்டர் மதுபானங்களும், சுமார் 66  ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களும் பிடிபட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் இந்த அதி ரடி நடவடிக்கைகள் மாவட்டத்தின் 10  சட்டமன்ற தொகுதிகளிலும் தொடர்ந்து  நடைபெற்று வருகின்றன.

பள்ளி மாணவி உயிரிழப்பு: போலீசார் விசாரணை தருமபுரி, மார்ச் 25- தருமபுரி அருகே 10 ஆம் வகுப்பு மாணவி விஷம்  குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து காவல்  துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பச்சினம்பட்டியை சேர்ந்த ராஜா என்ப வரின் மகள் பிரபா (15). இவர், கடகத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், திங்களன்று வீட்டில் இருந்தபோது மாணவி விஷம் குடித்த தாக கூறப்படுகிறது. இதையடுத்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே மாணவி உயிரிழந்தார். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல், அவ ரது உடலை குடும்பத்தினர் எரியூட்டியுள்ளனர். இதுகுறித்து  ஏ.ரெட்டிஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் பாலமுரளி அளித்த  புகாரின் பேரில், தருமபுரி நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.

ஓடும் ரயிலில் ஏற முயன்ற மாணவர் கீழே விழுந்து பலி: உறவினர்கள் சாலை மறியல் திருப்பூர், மார்ச் 25 - திருப்பூர் குமாரனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த வேத ராஜன்  (18), கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்  முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் செவ்வாயன்று திருப் பூரில் இருந்து கோவையில் உள்ள கல்லூரிக்கு செல்ல திருப் பூர் ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது ஈரோட்டில் இருந்து பாலக்காடு நோக்கிச் செல்லும் பயணிகள் ரயில் ஓடிச்  சென்று ஏற முயன்றுள்ளார். அப்போது கால் தவறி கீழே விழுந்த வேதராஜன், ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி படுகாயமடைந்தார். இதைப் கண்ட சக பயணி கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் புதனன்று, சிகிச்சை  பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இதையடுத்து மாண வன் உயிரிழந்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மற்றும்  அவருடன் பயிலும் சக கல்லூரி மாணவர்கள் அரசு மருத்துவ மனையில் மாணவனுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக் கப்படவில்லை என கூறி மருத்துவமனை முன்பு சாலை  மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை யினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரி மாணவர்கள் போராட் டத்தை கைவிட மறுத்ததை அடுத்து, மாணவர்களை போலீ சார் கைது செய்தனர்.

நீர் ஆவியாவதை தடுக்க வைக்கோல், தென்னை நார் கழிவில் நிலப்போர்வை அமைக்க வேளாண் துறையினர் ஆலோசனை

உடுமலை, மார்ச் 25- சாகுபடியில் உள்ள பயிர்களுக்கு  இடைப்பட்ட பகுதிகளில் வைக்கோல்  அல்லது தென்னை நார் கழிவு போன்ற வற்றை நிலப்போர்வையாகப் பயன்ப டுத்தி நீர் ஆவியாவதைத் தடுக்கலாம்  என வேளாண் துறையினர் ஆலோ சனை வழங்கியுள்ளனர். இது குறித்து வேளாண் துறையினர்  வெளியிட்ட அறிக்கையில் தெரிவித் துள்ளதாவது: சாகுபடியில் உள்ள பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் வைக்கோல் அல்லது தென்னை நார் கழிவு போன்றவற்றை  நிலப்போர்வையாக இருக்குமாறு  நன்கு தூவிவிட்டு, சூரிய ஒளிக்கதிர்கள்  நேரடியாகப் பூமியில் படுவதைத் தடுக் கலாம். இம்முறையில் நீர் பாய்ச்சப் பட்ட நிலங்களில் நீர் ஆவியாவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், களை வளர் வதையும் கட்டுப்படுத்தலாம். சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம், பயிறு வகைகளில் மூடாக்கு போடுவதாலும்,  நீர் தேவை அறிந்து நீர் பாய்ச்சுவதாலும்,  மகசூல் இழப்பைக் குறைக்கலாம்.  மேலும், மாலை நேரங்களில் நீர் பாய்ச் சும் பணியினைச் செய்து, நீண்ட நேரம்  வரை மண் ஈரத்தைக் காத்து, வறண்ட  சூழலிலிருந்து பயிரைக் காக்கலாம். நிலச்சரிவிற்குக் குறுக்கே ஆழச்சால் அகலப்பாத்தி முறையினைக் கடைப் பிடித்துச் சாகுபடி மேற்கொள்ளலாம்.  மழை கிடைக்கும் போது, சரிவிற்குக்  குறுக்கே மழைநீரை வழிந்தோடச்  செய்வதன் மூலம் நிலத்தின் ஈரத்தன் மையை அதிகப்படுத்தலாம். மேலும், நீர் பாய்ச்சும்போது கூட மண் ஈரம் நீண்ட  நேரம் காத்திட இம்முறை மிகவும் ஏற்ற தாக இருக்கும்.  நீர்ப்பாசன முறைகள்: குறைந்த நீரைக் கொண்டு மரப்பயிர்களைக் காக்கவும், சாகுபடி செய்யப்பட்ட கரும்பு போன்ற  பயிர்களைக் காக்கவும் சொட்டு நீர்ப் பாசனம், தெளிப்பு நீர்ப்பாசன முறை களைக் கடைப்பிடிக்கும் போது, வறட் சியிலிருந்து விடுபட ஏதுவாக இருக் கும். ஆழச்சால் அகலப்பாத்தியில் நீர்  பாய்ச்சும் போது, ஒரு வரப்பு விட்டு மறு  வரப்பிற்கு நீர் பாய்ச்சும் முறையில், நீர்  பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வறட் சியை ஓரளவு சமாளிக்கலாம். முருங்கை சாகுபடியில் ஊடுபயிராக  நிலக்கடலை, உளுந்து அல்லது வெங் காயம் போன்ற பயிர்களைச் சாகுபடி  செய்வதில் உள்ள நீர் மேலாண்மை யால் இரட்டிப்பு வருமானம் கிடைக் கும். வரப்புப் பயிராக ஆமணக்குப்  பயிரிடலாம். சாகுபடியில் உள்ள பயிர்க ளுக்கு இலைவழித் தெளிப்பு உரம்  மற்றும் சொட்டு நீர்ப்பாசனத்தில்  நீரில் கரையும் உரப் பயன்பாடு கடைப்பி டிப்பதால் நல்ல பயன் கிடைக்கும். பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாலை நேரத்தில் கடைப்பிடிப்பது நல் லது. காலையில் வெயில் தாழும் வரை யிலும், மாலை வெயிலின் தாக்கம்  குறைந்த நேரத்திலும் விவசாயப் பணி களாகிய களை எடுத்தல், மருந்து  தெளித்தல், உரமிடுதல் போன்ற பணி களை மேற்கொள்வதால், விவசாயிகள்  உடல் ஆரோக்கியத்தைக் காக்கவும்,  நேரடி சூரிய கதிர்வீச்சுத் தாக்குதலைத் தவிர்க்கவும் முடியும். மேலும் இது  தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு,  விவசாயிகள் வட்டார வேளாண் உதவி  இயக்குநர் அலுவலகத்தை அணுக லாம் என வேளாண் துறையினர் தெரி வித்துள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமல் 156 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

திருப்பூர், மார்ச்  தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத் தப்பட்டதை தொடர்ந்து, திருப்பூரில் 156 பேர் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை  முன்னிட்டு, அமைதியைப் பேணவும், அசம் பாவிதங்களைத் தவிர்க்கவும் தற்காப்புக் காக துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அருகி லுள்ள காவல் நிலையங்களில் தங்களது துப் பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என தேர் தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில், திருப்பூர் மாநகர பகுதி யைச் சேர்ந்த 156 பேர் தங்களது துப்பாக் கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத் துள்ளனர். வங்கி பாதுகாப்புப் பணிக்காக  பயன்படுத்தப்படும் 66 துப்பாக்கிகளுக்கு  மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் துப்பாக்கிகளை ஒப்படைக்காத  உரிமையாளர்களைக் கண்டறிந்து உடனடி யாக ஒப்படைக்க வைப்பதற்கான நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். தவறும்பட்சத் தில் சம்பந்தப்பட்டவர்களின் துப்பாக்கிக் கான உரிமம் ரத்து செய்யப்படும் எனவும்  காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

மது விற்பனை: 3 பேர் கைது திருப்பூர், மார்ச் 25- திருப்பூர் வஞ்சிபாளை யம் -மங்கலம் சாலை, நொய் யல் ஆறு அருகே சட்டவிரோ தமாக மது விற்பனை செய்த சிரில் (26), ஆபேத் (23), விஜய் (26) ஆகியோரைக்  காவல்துறையினர் செவ்வா யன்று கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 240 மது பாட்டிகள், ரூ.2,980 ரொக்கம் பறிமுதல் செய்யப் பட்டது.

நீர் ஆவியாவதை தடுக்க வைக்கோல், தென்னை நார் கழிவில் நிலப்போர்வை அமைக்க வேளாண் துறையினர் ஆலோசனை

உடுமலை, மார்ச் 25- சாகுபடியில் உள்ள பயிர்களுக்கு  இடைப்பட்ட பகுதிகளில் வைக்கோல்  அல்லது தென்னை நார் கழிவு போன்ற வற்றை நிலப்போர்வையாகப் பயன்ப டுத்தி நீர் ஆவியாவதைத் தடுக்கலாம்  என வேளாண் துறையினர் ஆலோ சனை வழங்கியுள்ளனர். இது குறித்து வேளாண் துறையினர்  வெளியிட்ட அறிக்கையில் தெரிவித் துள்ளதாவது: சாகுபடியில் உள்ள பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் வைக்கோல் அல்லது தென்னை நார் கழிவு போன்றவற்றை  நிலப்போர்வையாக இருக்குமாறு  நன்கு தூவிவிட்டு, சூரிய ஒளிக்கதிர்கள்  நேரடியாகப் பூமியில் படுவதைத் தடுக் கலாம். இம்முறையில் நீர் பாய்ச்சப் பட்ட நிலங்களில் நீர் ஆவியாவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், களை வளர் வதையும் கட்டுப்படுத்தலாம். சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம், பயிறு வகைகளில் மூடாக்கு போடுவதாலும்,  நீர் தேவை அறிந்து நீர் பாய்ச்சுவதாலும்,  மகசூல் இழப்பைக் குறைக்கலாம்.  மேலும், மாலை நேரங்களில் நீர் பாய்ச் சும் பணியினைச் செய்து, நீண்ட நேரம்  வரை மண் ஈரத்தைக் காத்து, வறண்ட  சூழலிலிருந்து பயிரைக் காக்கலாம். நிலச்சரிவிற்குக் குறுக்கே ஆழச்சால் அகலப்பாத்தி முறையினைக் கடைப் பிடித்துச் சாகுபடி மேற்கொள்ளலாம்.  மழை கிடைக்கும் போது, சரிவிற்குக்  குறுக்கே மழைநீரை வழிந்தோடச்  செய்வதன் மூலம் நிலத்தின் ஈரத்தன் மையை அதிகப்படுத்தலாம். மேலும், நீர் பாய்ச்சும்போது கூட மண் ஈரம் நீண்ட  நேரம் காத்திட இம்முறை மிகவும் ஏற்ற தாக இருக்கும்.  நீர்ப்பாசன முறைகள்: குறைந்த நீரைக் கொண்டு மரப்பயிர்களைக் காக்கவும், சாகுபடி செய்யப்பட்ட கரும்பு போன்ற  பயிர்களைக் காக்கவும் சொட்டு நீர்ப் பாசனம், தெளிப்பு நீர்ப்பாசன முறை களைக் கடைப்பிடிக்கும் போது, வறட் சியிலிருந்து விடுபட ஏதுவாக இருக் கும். ஆழச்சால் அகலப்பாத்தியில் நீர்  பாய்ச்சும் போது, ஒரு வரப்பு விட்டு மறு  வரப்பிற்கு நீர் பாய்ச்சும் முறையில், நீர்  பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வறட் சியை ஓரளவு சமாளிக்கலாம். முருங்கை சாகுபடியில் ஊடுபயிராக  நிலக்கடலை, உளுந்து அல்லது வெங் காயம் போன்ற பயிர்களைச் சாகுபடி  செய்வதில் உள்ள நீர் மேலாண்மை யால் இரட்டிப்பு வருமானம் கிடைக் கும். வரப்புப் பயிராக ஆமணக்குப்  பயிரிடலாம். சாகுபடியில் உள்ள பயிர்க ளுக்கு இலைவழித் தெளிப்பு உரம்  மற்றும் சொட்டு நீர்ப்பாசனத்தில்  நீரில் கரையும் உரப் பயன்பாடு கடைப்பி டிப்பதால் நல்ல பயன் கிடைக்கும். பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாலை நேரத்தில் கடைப்பிடிப்பது நல் லது. காலையில் வெயில் தாழும் வரை யிலும், மாலை வெயிலின் தாக்கம்  குறைந்த நேரத்திலும் விவசாயப் பணி களாகிய களை எடுத்தல், மருந்து  தெளித்தல், உரமிடுதல் போன்ற பணி களை மேற்கொள்வதால், விவசாயிகள்  உடல் ஆரோக்கியத்தைக் காக்கவும்,  நேரடி சூரிய கதிர்வீச்சுத் தாக்குதலைத் தவிர்க்கவும் முடியும். மேலும் இது  தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு,  விவசாயிகள் வட்டார வேளாண் உதவி  இயக்குநர் அலுவலகத்தை அணுக லாம் என வேளாண் துறையினர் தெரி வித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.