பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரத்தூர், வானூரில் விதொச ஆர்ப்பாட்டம்
1 Jul 2026, 12:34 am

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரத்தூர், வானூரில் விதொச ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், ஜூன் 30 - விழுப்புரம் மாவட்டம், ஒரத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் திருச்சிற்றம்பலத்தில் உள்ள வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒரத்தூர் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள வி.பி. ஸ்ரீராம் ஸ்ரீ திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைத் தொடர்ந்து முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் பி. கலியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கே. சுந்தரமூர்த்தி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். இதில் ஒன்றியத் தலைவர் எம். சேகர், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். அமுதா, நகரத் தலைவர் பி. பால்ராஜ், இ. சுந்தர், எஸ். நாகலிங்கம், பி. சண்முகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

வானூர், திருச்சிற்றம்பலம் ஆர்ப்பாட்டம்

வானூர் வட்டம், திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, சங்கத்தின் வட்டத் தலைவர் ஐ. சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே மீண்டும் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி. அர்ச்சுணன், வட்டச் செயலாளர் வி. சுந்தரமூர்த்தி, கட்சி வட்டச் செயலாளர் எஸ். பாலமுருகன், மாவட்டக் குழு உறுப்பினர் எம். கே. முருகன், வட்டப் பொருளாளர் எஸ். வடிவேல் மற்றும் நிர்வாகிகள் டி. கிருஷ்ணன், எஸ். பெருமாள், பி. குப்பம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.