தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய மாநாடுகள்

21 Dec 2025, 3:21 pm
விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய மாநாடுகள்
<p><strong>விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய மாநாடுகள்</strong></p> <p>திருப்பூர், டிச.21- விவசாயத் தொழிலாளர் சங்க திருப்பூர் வடக்கு ஒன் றிய, ஊத்துக்குளி மற்றும் மொடக்குறிச்சி தாலுகா மாநாடுகளில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க திருப்பூர் &nbsp;வடக்கு ஒன்றிய மாநாடு, பெரு மாநல்லூரில் ஞாயிறன்று &nbsp;ஒன்றியத் தலைவர் பரணி &nbsp;ஆர்.சீனிவாசன் தலைமை யில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் கே.சுப்பிரமணி, அறிக்கையை முன்வைத் தார். மாவட்டத் தலைவர் &nbsp;எ.சண்முகம் துவக்கவுரை யாற்றினார். தமிழ்நாடு விவ சாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் எஸ்.அப்புசாமி, தலை வர் கே.ரங்கசாமி, பனியன் &nbsp;சங்க நிர்வாகி பி.கே.கருப்பு சாமி, ஓய்வூதியர் சங்கத்தின் ஜி.சண்முகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், விவ சாயத் தொழிலாளர்களுக்கு தேசிய அள வில் ஒருங்கிணைந்த சட்டம் உருவாக்க வேண்டும். தமிழகத்தில் விவசாயத் தொழி லாளருக்கு தனித்துறையை உருவாக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட் டத்தை ஒழிக்கும் நோக்கத்தில் ஒன்றிய பாஜக &nbsp;அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்தி ருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் &nbsp;உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் ஒன்றியத் &nbsp;தலைவராக கே.சுப்பிரமணியம், துணைத் தலைவராக பரணி சீனிவாசன், செயலாள ராக ஆர்.சந்திரன், துணைச்செயலாளராக கே.சி.குமரன், பொருளாளராக ப.கிருஷ்ண சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளர் எ.பஞ்சலிங்கம் நிறை வுரையாற்றினார். ஆர்.செந்தில் நன்றி கூறி னார். ஊத்துக்குளி இதேபோன்று, விவசாயத் தொழிலாளர் சங்க ஊத்துக்குளி 10 ஆவது தாலுகா மாநாடு, &nbsp;ஞாயிறன்று நடைபெற்றது. சங்கத்தின் கொடியை வேலுச்சாமி ஏற்றி வைத்தார். தாலுகா தலைவர் ஆர்.மணியன் தலைமை &nbsp;ஏற்றார். மாவட்டச் செயலாளர் ஏ.பஞ்சலிங் கம், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் ஆர்.குமார் ஆகியோர் உரையாற்றினர். சிபிஎம் தாலுகா செயலாளர் கே.சரஸ்வதி மற்றும் கே.ஏ.சக்திவேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதைத்தொடர்ந்து, தாலுகா தலைவராக ஆர்.மணியன், செயலா ளராக க.பிரகாஷ், பொருளாளராக எம். பழனிச்சாமி, துணைத்தலைவராக கே.எஸ். ராமசாமி, துணைச்செயலாளராக செ.நந்த குமார் உட்பட கமிட்டி உறுப்பினர்களாக 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பா.வசந்தாமணி நிறைவுரையாற்றினார். சே.நந்தகுமார் நன்றி &nbsp;கூறினார். மொடக்குறிச்சி விவசாயத் தொழிலாளர் சங்க ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா 4 ஆவது &nbsp;மாநாடு, மொடக்குறிச்சி சமுதாயக் கூடத் தில் நடைபெற்றது. கே.கண்ணுசாமி கொடி யேற்றினார். எம்.சசி துவக்கவுரையாற்றி னார். மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராக வன் சிறப்புரையாற்றினார். சிபிஎம் மாவட்ட &nbsp;செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன் வாழ்த் திப் பேசினார். இதைத்தொடர்ந்து, சங்கத்தின் தாலுகா தலைவராக எம்.அண்ணாதுரை, செயலாளராக டி.தங்கவேல், பொருளாள ராக வி.முத்துசாமி உட்பட கமிட்டி உறுப்பி னர்களாக 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலப் பொருளாளர் அ.பழநிசாமி நிறை வுரையாற்றினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.