விவசாயத் தொழிலாளர் சங்க அரூர் வட்ட மாநாடு
31 Dec 2025, 3:37 pm
<p><strong>விவசாயத் தொழிலாளர் சங்க அரூர் வட்ட மாநாடு</strong></p>
<p>தருமபுரி, டிச.31- விவசாயத் தொழிலாளர் சங்க அரூர் வட்ட மாநாட் டில் நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டனர். அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கத் தின் தருமபுரி மாவட்டம், அரூர் வட்ட மாநாடு, இட்லப் பட்டியில் புதனன்று வட்டத் தலைவர் கே.குமரேசன் தலைமையில் நடை பெற்றது. சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநில துணைத்தலைவர் ஜி.கணபதி, மாவட்டச் செயலாளர் எம்.முத்து ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இம்மாநாட்டில், நிலமற்ற விவசா யத் தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் நிலம் இல வசமாக வழங்க வேண்டும். வீட்டு மனை யற்ற மக்களுக்கு மனைப்பட்டா, பல்வேறு புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகால மாக வீடுகட்டி குடியிருக்கும் ஏழை மக்க ளுக்கு நிபந்தனையின்றி பட்டா வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 200 நாள் வேலை, தினக்கூலி யாக ரூ.600 வழங்க வேண்டும். இத்திட் டத்தை அரூர் நகராட்சிக்கு விரிவுபடுத்த வேண்டும். அரசு கட்டிக்கொடுக்கும் வீட்டிற்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் அரூர் வட்டக்குழு இரண்டு ஒன்றியங்களாக பிரிக் கப்பட்டன. அதன்படி, அரூர் கிழக்கு ஒன்றி யத் தலைவராக ராமன், செயலாளராக குமரே சன், பொருளாளராக தங்கவேல் உட்பட 15 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய் யப்பட்டனர். மேற்கு ஒன்றியத் தலைவராக ஜெயகாந்தன், செயலாளராக வீரப்பன், பொருளாளராக தேசிங்கு ராஜா உட்பட 15 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய் யப்பட்டனர்.</p>
<p> </p>
