விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்
25 Feb 2026, 3:22 pm
<p><strong>விவசாயத் தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்</strong></p>
<p>மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் பெயரை மாற்றித் திட்டத்தை ஒழித்துக் கட்டும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்தும், ஆண்டுக்கு 200 நாள் வேலையும் தினக்கூலியாக 700 ரூபாயும் வழங்கிட வேண்டும், அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்து வரும் அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், மின் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாவட்டத் தலைவர் எம். குமார் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.கோரிக்கைகளை விளக்கிச் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் சி. சங்கர், செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் எஸ். ரவி, மாவட்டப் பொருளாளர் பி. சண்முகம், காட்டாங்குளத்தூர் பகுதிச் செயலாளர் என். அருணாச்சலம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி. ஹரிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் வாசுதேவன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். தாட்சாயணி, மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு பகுதிச் செயலாளர் கே. வேலன் உள்ளிட்ட பலர் பேசினர்.</p>
