நிலமற்றவர்களாக, வேலையற்றவர்களாக, வாக்கற்றவர்களாக ஆக்க விடமாட்டோம்! - பி.வெங்கட்
5 Nov 2026, 9:02 pm

நிலமற்றவர்களாக, வேலையற்றவர்களாக, வாக்கற்றவர்களாக ஆக்க விடமாட்டோம்! - பி.வெங்கட்

நாட்டின் செல்வத்தை உருவாக்குவது உழைக்கும் மக்கள். ஆனால் அந்தச்செல்வத்தை அதானி, அம்பானி போன்றபெருநிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு, உழைப்பாளிகளைப் பசி, கடன், வேலையின்மைக்குள் தள்ளுகிறது மோடி அரசு. இந்தியாவைக் கோடீஸ்வரர்களின் சொர்க்கமாகவும், கோடிக்கணக்கான உழைப்பாளிகளின் வறுமைப் பூமியாகவும் மாற்றுகிறது பாஜக ஆட்சி. உழைப்பாளிகள் உருவாக்கும் செல்வம் உழைபபாளிகளுக்கே சொந்தம். ஏழைகளின் வாயிலிருந்து உணவைப் பறித்துக் கார்ப்பரேட் கஜானாவை நிரப்பும் அரசை,வலுவான ஒன்றுபட்ட போராட்டங்களால் எதிர்கொள்ள வேண்டும்.

பறிக்கப்பட்ட வேலை உறுதி

நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம், வேலை, குறைந்தபட்சக் கூலி அனைத்தும் மறுக்கப்படுகின்றன. நில உடைமை குவிகிறது; சுரண்டல் தீவிரமடைகிறது; வேலைவாய்ப்பு சுருங்குகிறது; விலைவாசி இடைவிடாமல் உயர்கிறது. போராடிப் பெற்ற மகாத்மா காந்தி தேசியஊரக வேலை உறுதிச் சட்டத்தைச் சிதைத்து, ‘விபி-ஜி ராம் ஜி’ என்ற புதிய திட்டமாக அதை மாற்றியதன் மூலம், கோடிக்கணக்கான கிராமப்புறத் தொழிலாளர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. டிஜிட்டல் வருகைப் பதிவு, இ-கேஒய்சி, கட்டாய அடையாளச் சான்றுஎன்ற பெயரில் ஏழைகளை வேலையிலிருந்து வெளியேற்றுவது வேலை உரிமை மீதான கொடூரத் தாக்குதல்.

ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மீட்டு வலுப்படுத்த வேண்டும்; ஆண்டுக்கு 200 நாள் வேலை, நாள் கூலி ₹700, ₹2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு வேண்டும்; திட்டம்நகர்ப்புறங்களுக்கும் விரிவாக்கப்பட வேண்டும். நிலமற்ற ஏழைகளுக்கு நிலம், விவசாயத் தொழிலாளர்களுக்குவிரிவான மத்தியச் சட்டம், ஓய்வூதியம், அனைவருக்குமான சமூகப் பாதுகாப்பு ஆகியவையும் நமது கோரிக்கைகள்.

50 ஆண்டுகளில் இல்லாத வறட்சி

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சியில் நாட்டின் பாதிப் பகுதி தவிக்கிறது. எல் நினோ ஓரளவு காரணம் என்றாலும், அரசுகளின் அலட்சியமும் தவறான கொள்கைகளும் நிலைமையை மோசமாக்கியுள்ளன. பயிர்கள் கருகுகின்றன; வேலைமறைகிறது; பிழைப்புக்காக மக்கள் இடம் பெயர்கின்றனர். அரசுகளோ வேடிக்கை பார்க்கின்றன. முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கை எடுக்காமல், உழைப்பாளிகளைப் பசிக்கும் இடப்பெயர்வுக்கும் கைவிடுவது ஆளும் அரசுகளின் வர்க்கச் சார்பையே அம்பலப்படுத்துகிறது.

இதற்கிடையே விவசாயிகளுக்கான மானியங்களை ஒன்றிய அரசு படிப்படியாகப் பறிக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன் ₹2.95 லட்சம் கோடியாக இருந்த உரமானியம் இன்று ₹1.90 லட்சம் கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறை முழுவதையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும்முயற்சி நடக்கிறது.

கிடங்குகள் நிரம்பியும் பசி வாட்டுகிறதே!

விலை உயர்வுக்கு உற்பத்திக் குறைவு என்பது காரணமல்ல. நான்கு ஆண்டுகளுக்கு முன் 28 கோடிடன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி, இன்று 34–35 கோடி டன்என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. இந்திய உணவுக்கழகக்கிடங்குகளில், தேவையான 3 கோடி டன் இருப்பைவிட இருமடங்காக 6 கோடிடன் தானியம் உள்ளது. ஆனாலும் தெலுங்கானாவில் கிலோ₹60 ஆக இருந்த அரிசி ₹95க்குவிற்கிறது; பல அத்தியாவசியப் பொருட்களின்விலை 200 முதல் 300 சதவீதம் உயர்ந்துள்ளது. வணிகர்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் ஒன்றிய, மாநில அரசுகள் வெளிப்படையாகத் துணை போவதேகாரணம்.

நாட்டின் பல பகுதிகளில் வறட்சி நிவாரணத்துக்கு உடனடியாக ₹2 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும்; பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் வேலைகள் தொடங்க வேண்டும்; வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்களுக்குச் சிறப்பு இழப்பீடு, குடிநீர்,கால்நடைத் தீவனம், மருத்துவ வசதிகள் வழங்கவேண்டும்; ரேஷனில் நபருக்கு 5 கிலோ அரிசியை10 கிலோவாக உயர்த்த வேண்டும்; கள்ளச்சந்தைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும். இல்லையெனில் டிசம்பரில் ‘கிடங்குகளை நோக்கிப் பேரணி’நடத்துவோம்; கிடங்குகளைத் திறந்து தானியங்களை மக்களுக்கு வழங்குவோம். நிலம், வாழ்வாதாரம், வேலை, உணவு ஆகியவை மக்களின் உரிமைகள்; ஆளும் வர்க்கம் வழங்கும் தர்மம் அல்ல.

ஏழைகளின் நிலம் கார்ப்பரேட்டுக்கு!

வளர்ச்சியின் பெயரால் நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் ஏக்கர் ஒப்படைப்பு நிலங்களும் ஏழைகளின் பிற நிலங்களும் செல்வந்தர்களுக்கும் நிறுவனங்களுக்கும் திருப்பிவிடப்பட்டுள்ளன. ஆந்திரத்தில் சுமார் 10 லட்சம் ஏக்கர் ஒப்படைப்பு நிலங்கள்,தடை செய்யப்பட்ட சொத்துக்களுக்கான பிரிவு 22-ஏ பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு ஏலம் விடப்படுகின்றன.விடுதலைக்குப் பின் வழங்கப்பட்ட நிலங்களின் முழு விவரத்தைக் கிராம சபைகளில் வெளியிட வேண்டும்.முழுமையான நில மறுவிநியோகமும், ஒப்படைப்பு நிலங்களின் பாதுகாப்பும் இல்லாமல் வறுமையை ஒழிக்கமுடியாது.

வாக்குரிமையைப் பறிக்க விடமாட்டோம்

நாடு முழுவதும் எஸ்ஐஆர் மூலம் சுமார் 13 கோடி வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் விவசாயத் தொழிலாளர்கள், தலித்துகள், ஆதிவாசிகள், புலம்பெயர் தொழிலாளர்கள், முஸ்லிம்கள். அவர்களில் எத்தனை பேர்உண்மையில் வெளிநாட்டு ஊடுருவலாளர்கள், எத்தனை பேர் நாடு கடத்தப்பட்டனர் என்பதை ஒன்றியஉள்துறை அமைச்சகம் விளக்க வேண்டும். இருப்பிடமாற்றம் மட்டுமே வாக்குரிமையை ரத்து செய்யக் காரணமாகாது என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்வெளிப்படையாக மீறப்படுகிறது. தன் அதிகார வரம்பைத் தாண்டிப் படிவம் 6ஐ ஆணையம் மாற்றுவதும்முறையற்றது.

ஆளும் வர்க்கம் ஏழைகளை நிலமற்றவர்களாக, வேலையற்றவர்களாக, இறுதியில் வாக்கற்றவர்க

ளாகவும் வைத்திருக்க விரும்புகிறது. மக்கள் ஆதரவு சரிவதால், ஜனநாயக வழியில் வெல்ல முடியாது என்றஅச்சத்தில்தான் பாஜக வாக்காளர்களை நீக்கச் சதி செய்கிறது. ஆயிரக்கணக்கான அமைப்புகளும்தனிநபர்களும் இணைந்த ‘எஸ்ஐஆருக்கு எதிரான மக்கள்’ மேடை முன்வைக்கும் கோரிக்கைகளை முழுமையாகஆதரிக்கிறோம்: எஸ்ஐஆரை ரத்து செய்ய வேண்டும்; தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும்; நீக்கப்பட்ட 13 கோடி வாக்குகளையும் மீண்டும் சேர்க்கவேண்டும்; விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தல் சீர்திருத்தம் வேண்டும். தில்லிஜந்தர் மந்தரில் நடந்த ஜனநாயகப் பாதுகாப்புப் போராட்டத்தின் உணர்வை ஒவ்வொரு கிராமத்துக்கும் கொண்டுசெல்வோம்.

பிரேசில் தரும் செய்தி

அக்டோபர் 25 அன்று நடந்த பிரேசில் ஜனாதிபதித் தேர்தலின் இறுதிச் சுற்றில், தொழிலாளர் கட்சித் தலைவர் லூலா டா சில்வா நான்காவது முறையாக வென்றுள்ளார். டிரம்ப்பின் கூட்டாளியான முன்னாள் ஜனாதிபதி ஜெயிர் பொல்சனாரோவின் மகனும், தீவிரவலதுசாரி வேட்பாளருமான ஃபிளாவியோ பொல்சனாரோவை அவர் தோற்கடித்தார். பிற்போக்குச் சக்திகள் வெல்ல முடியாதவை அல்ல; உழைக்கும்மக்கள் ஒன்றுபட்டுக் களமிறங்கினால் வரலாற்றின் போக்கையே மாற்ற முடியும் என்பதே பிரேசில் தரும் செய்தி.

பெங்களூரு மாநாடு: போராட்டத்தின் மைல்கல்

மத்தியில் பாஜக அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தோடு, மாநிலங்களிலும் மக்கள் விரோதக்கொள்கைகளுக்கு எதிராக சுயேச்சையான போராட்டங்கள் தேவை. மதவெறியைப் பயன்படுத்தி உழைப்பாளிகளைப் பிரிக்கும் கார்ப்பரேட்–வகுப்புவாதக் கூட்டை, விவசாயிகள்,விவசாயத்தொழிலாளர்கள், தொழிலாளர்களின் ஒன்றுபட்ட வர்க்கப் போராட்டங்களால் முறியடிப்போம். கிராமப்பொருளாதாரம், நிலம், இயந்திரமயமாக்கல் அனைத்தையும் 20 சதவீத வசதிபடைத்தோர் கட்டுப்படுத்த, மீதமுள்ள 80 சதவீத விவசாயிகளும் தொழிலாளர்களும் கடும் துயரில் உள்ளனர். அந்த 80 சதவீதத்தை ஒன்றுதிரட்டும் நோக்கில், பெங்களூரு நகரப் பல்கலைக்கழகவளாகத்தில் உள்ள ஞானஜோதி அரங்கில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 11வது அகில இந்திய மாநாடு 2027பிப்ரவரி 14 முதல்17 வரை எழுச்சியுடன் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 1,000 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். எழுத்தாளர் பரகூரு ராமச்சந்திரப்பா தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாறிவரும் வேளாண் உறவுகள், விவசாயத்தில் முதலாளித்துவ வளர்ச்சி, இந்துத்துவ மதவெறி, மோடி ஆட்சியின் நவபாசிசத் தாக்குதல் ஆகியவற்றை மாநாடு மார்க்சியக் கண்ணோட்டத்தில் மதிப்பிட்டு, வரும் காலப் போராட்டங்களுக்குத் திசை காட்டும். ஒரு கோடி உறுப்பினர் இலக்கை எட்டவும், பெண் விவசாயத் தொழிலாளர்களைப் பெருமளவில் திரட்டவும் உறுதியேற்போம். ஒவ்வொரு கிராமமும் மாநாட்டின் அடித்தளமாகட்டும்;ஒவ்வொருகுடும்பமும் இயக்கத்தின் தூணாகட்டும்!