தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் ₹700 குறைந்தபட்ச ஊதியம் வழங்க விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் முழக்கம்

2 Jul 2026, 10:11 pm
‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் ₹700 குறைந்தபட்ச ஊதியம் வழங்க விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் முழக்கம்

‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் ₹700 குறைந்தபட்ச ஊதியம் வழங்க விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் முழக்கம்

புதுதில்லி, ஜூலை 2 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை ரத்து செய்து விட்டு, ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய ‘விபி ஜி ராம் ஜி’ (VB-GRAM-G) சட்ட விதிகளுக்கு எதி ராகவும், ₹700 குறைந்தபட்ச தினக்கூலி கோரியும் அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் மற்றும் ‘என்ஆர்இ ஜிஏ சங்கர்ஷ் மோர்ச்சா’ ஆகியவற்றின் கூட்டு அழைப்பில் நாடு தழுவிய அளவில் பிரம்மாண்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

லட்சக்கணக்கான விவசாய மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்கள் திரண்டு பஞ்சாயத்து அலுவலகங்கள் மற்றும் மாவட்ட தலைமையகங்கள் முன்பாக ஆவேச ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். கேரளா, திரிபுரா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள்திரண்டனர். ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் புதிய விதிமுறை நகல்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங் களில் கண்டன மனுக்கள் அளிக்கப்பட்டன. ராஜஸ்தானில் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்குள் புகுந்து தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

வேலை உரிமையைப் பறிக்கும் சூழ்ச்சி

இதுகுறித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ. விஜயராகவன், பொதுச்செயலாளர் பி. வெங்கட் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய சட்டம் வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் அடிப்படைத் தன்மையையே சிதைத்துவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். தொழிலாளர்களின் கோரிக்கை அடிப்படையில் வேலை வழங்கும் முறை மாற்றப்பட்டு, அதிகாரிகள் விருப்பப்படி வழங்கும் முறையாக இது மாற்றப் பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத் திணிப்புகள் மூலம் ஏழைத் தொழிலா ளர்கள் திட்டத்திலிருந்து புறக்கணிக்கப் படுகின்றனர். திட்டக் குழுக்களில் தொழி லாளர் பிரதிநிதித்துவம் திட்டமிட்டே மறுக்கப் பட்டு, ஒட்டுமொத்த நிர்வாகமும் அதிகார மயமாக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சாடியுள்ளனர்.

விலைவாசி உயர்வும், ஏமாற்றும் ஊதிய உயர்வும்

ஒன்றிய அரசு அறிவித்துள்ள 2026-27 ஆம் ஆண்டிற்கான ஊதிய உயர்வு, கிராமப்புற மக்களின் வாழ்வாதா ரத்தைக் கேலிக்குள்ளாக்கும் வகையில் உள்ளது. நுகர்வுச் செலவினக் கணக் கெடுப்பின்படி, கிராமப்புறக் குடும்பம் ஒன்றின் அடிப்படைத் தேவைகளுக்கு மாதத்திற்கு ₹16,500 முதல் ₹18,000 வரை தேவைப்படுகிறது. ஆனால், தற்போதைய மிகக் குறைந்த ஊதியம் மற்றும் 125 நாள் வேலை வரம்பின் மூலம் கிடைக்கும் வருமானம் இதற்கு எள்ளளவும் ஈடாகாது. சமையல் எரிவாயு உருளை விலை ₹900-ஐத் தாண்டியுள்ள சூழலில், சமையல் எண்ணெய், தக்காளி மற்றும் வெங்காய விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இத்தகைய விலைவாசி உயர்வுக்கு மத்தியில், தெலுங்கானாவில் தினக்கூலி வெறும் 1 ரூபாய் மட்டுமே (₹307-லிருந்து ₹308 ஆக) உயர்த்தப் பட்டுள்ளது தொழிலாளர்களை அப்பட்ட மாக அவமதிக்கும் செயலாகும்.

மாநில அரசுகள் நிர்ணயித்துள்ள சட்டப்பூர்வ விவசாயக் கூலியை விட விபி ஜி ராம் ஜி ஊதியம் குறைவாக உள்ளது. கேரளா போன்ற மாநிலங்களில் கடின மான மண் தோண்டும் பணிகளுக்கு ₹800-க்கும் மேல் கூலி வழங்கப்படும் நிலையில், ஒன்றிய அரசு வாழ்வாதார ஊதியத்தைக் கூட மறுக்கிறது. பெரு நிறுவனங்களுக்குப் பல லட்சம் கோடி வரிச்சலுகை அளிக்கும் மோடி அரசு, ஏழை விவசாயத் தொழிலாளர் களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்க மறுப்பது அதன் வர்க்கப் பாசத்தையே காட்டுகிறது எனவும் சாடியுள்ளனர்.

முதன்மையான கோரிக்கைகள்

• விபி ஜி ராம் ஜி (ஜி) புதிய விதிகளையும் சட்டத்தையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

• ரத்து செய்யப்பட்டுள்ள மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

• நாடு முழுவதும் அனைத்து மாநிலங் களிலும் தடையின்றி தினசரி குறைந்த பட்ச ஊதியமாக ₹700 வழங்கப்பட வேண்டும்.

கிராமப்புற ஏழை எளிய மக்களின் வேலை உரிமை மற்றும் வாழ்வாதா ரத்தை மீட்டெடுக்கும் வரை இந்தத் தொடர் போராட்டங்கள் ஓயாது என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.