மோடி அரசே, ஏழைகளுக்கு எதிரான ‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தை ரத்து செய்! நாடு முழுவதும் விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்!
15 May 2026, 10:03 pm

மோடி அரசே, ஏழைகளுக்கு எதிரான ‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தை ரத்து செய்! நாடு முழுவதும் விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்!

தமிழ்நாட்டில் 500 ஊராட்சி ஒன்றியங்களில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு!!

சென்னை, மே 15 - கடந்த 20 ஆண்டுகளாக, கிராமப்புற ஏழை களுக்காக செயல்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதி அளிப்புச் சட்டத்தை ரத்து செய்துவிட்டு, ஒன்றிய பாஜக அரசானது, வேலைவாய்ப்பு உத்தரவாதமற்ற ‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தை ஜூலை 1 முதல் செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் எனவும், ஊரக வேலையுறுதி அளிப்புச் சட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திடவும் வலி யுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய அளவில், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட போராட்டம் வெள்ளியன்று (மே 15)நடைபெற்றது.

இடதுசாரிகளால் கிடைத்த திட்டம்

கிராமப்புற மக்களின் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இடதுசாரிகளின் நிர்பந்தத்தால் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வந்த ஊரக வேலையுறுதித் திட்டத்தை, ஒன்றிய பாஜக அரசு தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தால், கடந்த டிசம்பர் 17 அன்று ‘விபி ஜி ராம் ஜி’ என்ற பெயரில் மாற்றியுள்ளது.

படிப்படியாக சிதைத்த மோடி அரசு 2

005-ஆம் ஆண்டு ஊரக வேலை உறுதி யளிப்புச் சட்டம் நிறைவேற்றியதில் இருந்து உள்நாட்டு - வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளி கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலம் வரை நிதி ஒதுக்கீடும் ஓரளவுக்கு வேலையும் கிராமப்புற மக்களுக்கு உத்தரவாதம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஒன்றிய பாஜக அரசு திட்டத்தை முழுமையாக ஒழித்துக்கட்ட முயற்சி எடுத்தது. படிப்படியாக சிதைத்து சீரழித்து வந்தது.

முற்றிலுமாக ஒழித்துக் கட்டியுள்ளது

இந்நிலையில் தான், கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு அடிபணிந்து தற்போது ஊரகத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக ஊரக வேலையுறுதித் திட்டத்தையே ஒன்றிய பாஜக அரசு ரத்து செய்து விட்டது. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள புதிய திட்டத்தில் வேலை வாய்ப்புக்கு உத்தர வாதமற்ற நிலை உள்ளது. வேலை வழங்கு வதற்கு ஏராளமான சாத்தியமற்ற கட்டுப்பாடு களும், தொழில் நுட்ப நடவடிக்கைகளும் கொண்டு வரப்பட்டு உள்ளன.

கிராமப்புற ஏழை மக்களுக்குப் பாதிப்பு

இதனால் கிராமப்புற மக்களுக்கு கிடைத்து வந்த வேலை வாய்ப்பு மிகப் பெரிய அளவிற்கு கேள்விக்கு உள்ளாகியுள்ளது. நடப்பு நிதியாண்டு தொடங்கி ஒன்றரை மாத காலம் ஆகியும் 5 சதவிகித வேலைகள் கூட வழங்கவில்லை. இதனால் கிராமப்புற மக்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையிலேயே, புதிய திட்டத்தைஒன்றிய பாஜக அரசு உடனடியாக ரத்து செய்திட வேண்டும்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும்; தொழிலாளர்களின் கருவிழியை ஸ்கேன் செய்யும் நடைமுறை யைக் கைவிட வேண்டும்; அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக பணிகளைத் தொடங்கிட வேண்டும்; வேலை நாட்களை 200 ஆக உயர்த்திட வேண்டும்; தினக்கூலியை 700 ரூபாயாக உயர்த்த வேண்டும்; திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைந்தபட்சம் 2.50 லட்சம் கோடியாக உயர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு, வேலை நிறுத்தம், பேரணி, தொடர் முழக்கம் உள்ளிட்டப் போராட்டங்களை வெள்ளியன்று ( மே 15) நடத்தினர்.

ஒன்றிய அலுவலகங்கள் முன்பு போராட்டம்

தமிழ்நாட்டில், 500-க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு முன்பு தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநிலத் தலைவர் எம். சின்னத்துரை திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்திலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன், விதொச மாநிலப் பொதுச்செயலாளர் வீ. அமிர்தலிங்கம் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் ஒன்றியத்திலும், பொருளாளர் ஆ. பழனிச்சாமி கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திலும், மாநிலச் செயலாளர் வீ. மாரியப்பன் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்திலும் நடைபெற்ற தொடர் முழக்கப் போராட்டங்களில் கலந்து கொண்டனர்.

தொழில்நுட்பத்தின் பெயரால் வஞ்சனை தில்லி ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் குற்றச்சாட்டு

புதுதில்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்தில் சிஐடியு பொதுச்செயலாளர் எளமரம் கரீம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி. வெங்கட் மற்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மூத்த தலைவர் ஹன்னன் முல்லா ஆகியோர் உரையாற்றினர். அவர்கள் பேசுகையில், “மத்திய அரசு வேலை உறுதிச் சட்டத்தைப் பலப்படுத்து வதற்குப் பதிலாக, அதைச் சீர்குலைத்து ஊரகத் தொழிலாளர்களைக் கார்ப்பரேட் நிறு வனங்களுக்குக் குறைந்த விலைக் கூலிகளாக மாற்றச் சதி செய்கிறது. ‘வி பி ஜி ராம் ஜி’ என்பது வேலைக்கான உரிமையை மிதிக்கும் ஒரு ஆபத்தானத் திட்டம். இது வேலைவாய்ப்புச் சட்டம் அல்ல; மாறாக வேலையில்லாத் திண்டாட்டம், பசி, இடப்பெயர்வு மற்றும் மரணத்தை உறுதி செய்யும் ஒரு ஏற்பாடாகும்” என்று ஆவேசமாகத் தெரிவித்தனர். ஏற்கெனவே வேலைநாட்கள் குறைப்பு மற்றும் நீண்டகால ஊதிய நிலுவை காரணமாக, ‘ஊரக இந்தியா’ கடும் வேலைவாய்ப்பு நெருக்கடியில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய தலைவர்கள், டிஜிட்டல் மயமாக்கல் என்ற பெயரில் ஏழைத் தொழிலாளர்கள் அவமதிக்கப்படுவதைக் கண்டித்தனர். “ஆதார் இணைப்பு, ஒரு நாளைக்கு இருமுறை டிஜிட்டல் வருகைப் பதிவு, வேலை செய்யும் இடத்தில் புகைப்படம் எடுத்துப் பதி வேற்றுவது போன்ற கட்டாய நடவடிக்கைகள் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திட்டமிட்டு வேலையிலிருந்து புறக்கணிக்கப் படுகிறார்கள். இது மனிதாபிமானமற்ற மற்றும் தொழிலாளர் விரோதச் செயலாகும்” என்றும் அவர்கள் சாடினர். விவசாயத் தொழிலாளர் சங்க இணைச்செய லாளர் விக்ரம் சிங் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்த்தில் சிஐடியு அகில இந்திய தலைவர் சுதீப் தத்தா, செயலாளர் ஆர். கருமலையான், எம். சாய்பாபா, ஆந்திராவைச் சேர்ந்த நர்சிங் ராவ், பேபி ராணி மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த சுக்கா ராமுலு, பாலடுகு பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிதி ஆயோக்கின் ‘சூன்ய’ பரிந்துரை

நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்க வேண்டிய நிதி ஆயோக், அபத்தமான ஒரு பரிந்துரையை மோடி அரசுக்கு வழங்கியுள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் காரணம் காட்டி, அனைத்து அரசு கட்டுமானப் பணிகளையும் இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கச் சொல்லியிருக்கிறது. மேற்கு ஆசிய நெருக்கடியைச் சரியாகக் கையாளத் தெரியாத மோடி அரசின் வெளியுறவுக் கொள்கைத் தோல்வியே இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு முக்கியக் காரணம். தில்லியில் உள்ள சாஸ்திரி பவன், நிர்மான் பவன் உள்ளிட்ட கட்டிடங்களின் புனரமைப்புப் பணிகளே முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. நாடு முழுவதும் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டால், அதை நம்பி யிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் என்னவாகும்? வேலைவாய்ப்பை உரு வாக்குவதற்குப் பதில், இருக்கும் வேலைகளை யும் பறிக்கும் நிதி ஆயோக்கின் இந்தப் பரிந்துரை, மோடி அரசின் பொருளாதாரச் சீரழிவையே பறைசாற்றுகிறது.