தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதிய திட்டத்தை ரத்து செய்து 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்தக்கோரி விவசாயத்தொழிலாளர்கள் போராட்டம்

19 May 2026, 10:03 pm
புதிய திட்டத்தை ரத்து செய்து  100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்தக்கோரி விவசாயத்தொழிலாளர்கள் போராட்டம்
<p><strong>புதிய திட்டத்தை ரத்து செய்து 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்தக்கோரி விவசாயத்தொழிலாளர்கள் போராட்டம்</strong></p><p>அருமனை, மே 19- கிராமப்புற விவசாயத் தொழி லாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை, ஒன்றிய பாஜக அரசு, திடீரென ரத்து செய்தது. அதற்குப் பதி லாக விபிஜி-ராம்ஜி என்ற புதிய திட்டத்தை கடந்த ஏப்ரல் 1 முதல் அமல்படுத்துவதாக அறிவித்தது. ஆனால் கடந்த ஒரு மாத மாக நாடு முழுவதும் முறையாக 100 நாள் வேலை நடைபெற வில்லை. இதனால் கிராமப்புற மக்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பயனாளிகளின் கருவிழியைப் படம் பிடித்தல் போன்ற புதிய நடை முறைகளால் தொழிலாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக் கப்பட்டுள்ளனர். எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். வி.பி.ஜி ராம்-ஜி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முழுக்கோடு ஊராட்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் முழுக்கோடு ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டப் பணியா ளர்கள் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்பராட்டத்திற்கு சங்கத்தின் அருமனை வட்டார துணைத் தலைவர் சைலஸ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் பி. சசிகுமார் துவக்கி வைத்து உரையாற்றினார். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மரிய செல்வி விலாசினி ஆதரித்துப் பேசினார். மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் அருமனை வட்டாரச் செயலாளர் சசிகுமார் நிறைவுரையாற்றினார். போராட்டத்தில் வட்டாரத் தலைவர் சோபா உட்பட ஏராளமான விவ சாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.