மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டப் பெயர் மாற்றத்திற்கு விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கடும் கண்டனம்!
15 Dec 2025, 2:48 pm
<p><strong>மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டப் பெயர் மாற்றத்திற்கு விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கடும் கண்டனம்!</strong></p>
<p>புதுதில்லி/சென்னை, டிச.15 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (MGNREGA) ‘விக்சித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத் திட்டம் (கிராமப் புறம்): VB-G Ram G (விக்சித் பாரத்—ஜி ராம் ஜி) 2025’ எனப் பெயர் மாற்றி ஒன்றிய பாஜக அரசு அறிமுகப்படுத்தவுள்ள நட வடிக்கைக்கு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் (AIAWU) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் ஏ.விஜயராகவன் மற்றும் பொதுச் செயலாளர் பி.வெங்கட் ஆகியோர் வெளியிட் டுள்ள அறிக்கையில், இந்த புதிய மசோதா, இந்தியாவின் கடின உழைப்பால் பெறப்பட்ட வேலை செய்வதற்கான உரிமை யான மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிதைப்பதற்கான ஒரு ஆபத்தான முயற்சி என்று குற்றம் சாட்டி யுள்ளனர். சட்டப்பூர்வ உரிமை பறிப்பு மற்றும் மாநிலங்கள் மீது சுமை மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டம் என்பது தேவைக்கேற்ப செயல்படுத்தப்படும் ஒரு சட்டப்பூர்வ உரி மையாகும். ஆனால், முன்மொழியப்பட்டுள்ள புதிய மசோதா அந்த உரிமையை விருப்பத்தின் பேரில் செயல்படுத்தப்படும் திட்டமாக மாற்றுவதன் மூலம் அதன் அடிப்படைக் கொள் கையையே தலைகீழாக மாற்ற முயல்கிறது. மேலும், நிதி மற்றும் நிர்வாகச் சுமையை மாநில அரசுகளின் மீது மாற்று வது இதன் முக்கியமான அம்சமாகும். முன்பு 75:25 (மத்திய: மாநிலம்) என இருந்த திட்டத்தின் செலவின விகிதத்தை, தற்போது 60:40 என மாற்றுவதன் மூலம் மாநிலங்கள் மீது கடும் சுமை ஏற்றப்படுகிறது. வேலைவாய்ப்பைக் குறைக்கும் விதிகள் மசோதாவின் பிரிவு 6, விவசாய வேலை காலங்களில் தொழிலாளர்களின் இருப்பை எளிதாக்குகிறது என்ற சாக்கில், உச்ச கட்ட விவசாயப் பருவங்களில் இந்தச் சட்டத்தின் கீழ் எந்த வேலையும் தொடங்கப்படவோ அல்லது செயல்படுத்தப்படவோ கூடாது என்று குறிப்பிடுகிறது. இந்த விதி கிராமப்புறத் தொழி லாளர்களுக்கான வேலைவாய்ப்புகளை நேரடியாகக் குறைத்து, ஊதிய வேலைவாய்ப்பு உத்தரவாதத்தின் நோக்கத்தையே பல வீனப்படுத்துகிறது. நிதியளிப்புக்கு ஒன்றிய அரசுக்குக் கடமை இல்லை மகாத்மா காந்தி ஊரக வேலைவ உறுதித் திட்டத்தில் நிதி தேவைக்கேற்ப வழங்கப்பட்டது. ஆனால், புதிய மசோதா வானது ஒன்றிய அரசு மாநிலங்களுக்கான ‘சாதாரண ஒதுக்கீட்டை’ மட்டுமே நிர்ணயிக்க அதிகாரம் அளிக்கிறது. இந்த வரம்புக்கு அப்பாற்பட்ட எந்தவொரு செலவும் மாநில அரசுகளின் பொறுப்பாகும். இதன் விளைவாக, தேவை அதிகரித்தாலும், கூடுதல் நிதியை வழங்க ஒன்றிய அரசுக்கு இனி சட்டப்பூர்வக் கடமை இருக்காது. தொழில்நுட்பம் மூலம் திட்டம் தகர்ப்பு தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பயோமெட்ரிக் அங்கீகாரம், பரிவர்த்தனைகளை டிஜிட்டல் மயமாக்குதல், மொபைல் செயலி அடிப்படையிலான கண்காணிப்பு போன்ற சர்ச்சைக்குரிய மற்றும் பாகுபாடு காட்டும் அனைத்து தொழில்நுட்ப வழிமுறைகளையும் அரசாங்கம் இந்த மசோதா மூலம் சட்டப்பூர்வமாக்கி, நிறுவனமயமாக்கியுள்ளதாக விவ சாயத் தொழிலாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. 125 நாட்கள் வேலை என்பது ஏமாற்றுப் பேச்சு இந்த மசோதாவைச் சுற்றிப் பேசப்படும் ஒரே சாதகமான அம்சம், உத்தரவாதமான வேலை நாட்களை 125 நாட்களாக அதிகரிப்பது என்ற கூற்றுதான். பெரும்பாலான மாநிலங்களில் சராசரி வேலை நாட்களின் எண்ணிக்கை 50-க்கும் குறைவாகவே இருந்த நிலையில், தற்போதைய கட்டுப்பாடான விதிகளின் கீழ் களத்தில் உண்மையான வேலை நாட்களின் எண்ணிக் கையை அதிகரிப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று விவசாயத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த உழைப்பாளர் விரோத, பெருநிறுவன ஆதரவுச் சட்டத்தை எதிர்த்து மாபெரும் போராட்டங்களை ஏற்பாடு செய்யு மாறும், மசோதாவின் பிரதிகளைத் தீயிட்டு எரிக்க வேண்டும் என்றும் சங்கம் தனது பிரிவுகளுக்கு அறைகூவல் விடுத்து உள்ளது. தமிழ்நாடு மாநிலக் குழு கண்டனம் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழுவும் இந்த நடவடிக் கைக்கு வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநிலத் தலைவர் எம். சின்னதுரை எம்எல்ஏ மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக் கையில், ஊதிய பாக்கிகளை வழங்காமல் சண்டித்தனம் செய்தது உட்பட கடந்த 11 ஆண்டுகளாக ஒன்றிய அரசு இந்தத் திட்டத்தை சிதைத்ததன் நோக்கம் தற்போது வெளிப் பட்டுள்ளது என்றும், இந்த அராஜக நடவடிக்கையை எதிர்த்து தீவிரமாகப் போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.</p>
<p> </p>
