விண்ணப்பித்த அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் குடிமனை பட்டா விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்
8 Feb 2026, 3:55 pm
<p><strong>விண்ணப்பித்த அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் குடிமனை பட்டா விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்</strong></p>
<p>திருக்கழுக்குன்றம், பிப். 8- குடிமனை பட்டா கேட்டு விண்ணப் பித்துள்ள அனைத்து விவசாய தொழிலா ளர்களுக்கும் அரசு உடனடியாக குடிமனை பட்டா வழங்க வேண்டுமான அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட 9வது மாநாடு ஞாயிறன்று (பிப்.8) திருக்கழு குன்றத்தில் மாவட்ட தலைவர் பி. சண்முகம் தலைமையில் நடைபெற்றது, சிறுபான்மை மக்கள் நல குழு மாவட்ட செயலாளர் பி.கே.ரபிக் வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில குழுஉறுப்பினர் கோத ண்டம் பேசினார். மாவட்ட அமைப்பாளர் எஸ்.ரவி வேலை அறிக்கையை சமர்ப்பிதார். தீர்மானங்களை முன்மொழிந்து எம்.குமார், வி.சசிகுமார், டி.விஜயகாந்த், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.வாசுதேவன், சிஐடியு மாவட்ட துணை செயலாளர் சி.செல்வகுமார் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். மாநாட்டை நிறைவு செய்து மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம் பேசினார். பி.ராமமூர்த்தி நன்றி கூறினார். தீர்மானங்கள் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை முடக்குவதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும், ஆண்டுக்கு 200 நாள் வேலையும், தினக்கூலி நாள் ஒன்றுக்கு ரூ, 600 வழங்க வேண்டும், வேலையை தொடர்ந்து வழங்க வேண்டும், அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்து வரும் அனைவருக்கும் வீட்டு மனை பட்டா வழங்கி மின் இணைப்பு இல்லா வீடு களுக்கு மின் இணைப் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது. விதொச செங்கல்பட்டு மாவட்ட தலைவராக எம்.குமார், செயலாளராக எஸ்.ரவி, பொருளாளராக பி.சண்முகம் உள்ளி ட்டோர் அடங்கிய 19 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.</p>
