தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அம்பேத்கர் நகருக்கு சாலை வசதி, மயான வசதி கேட்டு விவசாயத் தொழிலாளர் சங்கம் நடைபயணம்

19 Nov 2025, 3:33 pm
அம்பேத்கர் நகருக்கு சாலை வசதி, மயான வசதி கேட்டு விவசாயத் தொழிலாளர் சங்கம் நடைபயணம்
<p><strong>அம்பேத்கர் நகருக்கு சாலை வசதி, மயான வசதி கேட்டு விவசாயத் தொழிலாளர் சங்கம் நடைபயணம்</strong></p> <p>திருப்பூர், நவ.19- ஊத்துக்குளி வட்டம், ரெட்டிபா ளையம் ஊராட்சியில் பட்டியலின மக்கள் வசிக்கும் அம்பேத்கர் நக ருக்கு சாலை வசதி, மயான வசதி &nbsp;கேட்டு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் புத னன்று நடைபயணம் இயக்கம் நடைபெற்றது. &nbsp;ஊத்துக்குளி வட்டம் ரெட்டிபா ளையம் ஊராட்சி புல எண் 148/2பி &nbsp;என்ற இடத்தில் ஆதிதிராவிடர் நலத் துறை மூலம் 1995 ஆம் ஆண்டு 14 &nbsp;ஏக்கர் நிலம் எடுப்பு செய்து 380 வீட்டு &nbsp;மனைகள் பட்டியலின மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படாததால் பெருமளவு மக்கள் இன்னும் குடி யேறவில்லை. தற்போது 200 குடும் பங்கள் வசித்து வருகின்றனர். இந்த &nbsp;குடும்பங்களுக்கு முறையான சாலை வசதி இல்லாமல் இருப்புப் பாதை ஓரத்தில் சென்று ரயில்வே நுழைவு பாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது ரயில்வே &nbsp;துறையினர் இரும்பு தடுப்புகள் ஏற் படுத்தி ரயில்வே பகுதி வழித்த டத்தை மக்கள் பயன்படுத்த முடி யாத நிலையை ஏற்படுத்தி வரு கின்றனர். இதனால் பாதை வசதி இல்லாமல் இந்த பகுதி மக்கள் சிர மத்திற்குள்ளாகின்றனர். எனவே &nbsp;முறையான சாலை வசதி ஏற்படுத்த &nbsp;வேண்டும். ரயில்வே பாலத்திற்கு &nbsp;கீழ் கான்கிரீட் போட்டு தர வேண் டும். மயான வசதி ஏற்படுத்த வேண் டும். &nbsp;அனைத்து வீதிகளுக்கும் வீதி &nbsp;விளக்கு மற்றும் காங்கிரீட் சாலை, &nbsp;அங்கன்வாடி மையம் ஆகிய &nbsp;ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட &nbsp;கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம் சார்பில் அம்பேத்கர் நக ரில் இருந்து நடைபயணமாக வந்து &nbsp;ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய &nbsp;அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த இயக்கத் திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க தாலுகா தலை வர் ஆர்.மணியன் தலைமை வைத் தார். &nbsp;தமிழ்நாடு விவசாயிகள் சங்க &nbsp;மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் துவக்கி வைத்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.சண்முகம், தாலுகா செயலாளர் க.பிரகாஷ், பொருளாளர் எம்.பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் &nbsp;தாலுகா செயலாளர் கு.சரஸ்வதி, தாலுகா &nbsp;குழு உறுப்பினர்கள் கே.ஏ.சக்திவேல், வி.காமராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் எஸ்.கே. கொளந்தசாமி, மாதர் சங்க தாலுகா &nbsp;தலைவர் மா.சசிகலா, அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் நல சங்க தாலுகா கன்வீனர் ச.சசி குமார், கரைப்பாளையம் கட்சி கிளைச் செயலாளர் கே.எஸ்.கருப் புசாமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பாலமுரளி ஆகியோர் &nbsp;கோரிக்கைகளை விளக்கி பேசி னர். &nbsp;இதைதொடர்ந்து ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர் சரவண னிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட் டது. கோரிக்கையின் மீது கவனம் &nbsp;செலுத்தி ஒரு சில கோரிக்கைகளை &nbsp;உடனடியாக நிறைவேற்றுவதா கவும், இதர துறை கோரிக்கை களை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக வும் உறுதியளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.