விவசாயம் - கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு தனியாக நல வாரியம் அமைத்திடுக! விவசாயத் தொழிலாளர் சங்க மாநாடு கோரிக்கை
19 Jul 2026, 10:20 pm
<p><strong>விவசாயம் - கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு தனியாக நல வாரியம் அமைத்திடுக! விவசாயத் தொழிலாளர் சங்க மாநாடு கோரிக்கை</strong></p><p>நாகர்கோவில், ஜூலை 19- அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் இராஜாக்கமங்கலம் ஒன்றிய மாநாடு ஈத்தாமொழியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றிய தலைவர் எஸ்.மிக் கேல் நாயகி தலைமை வகித்தார். தங்கப்பன் வரவேற்றார். மாவட்ட தலைவர் என்.எஸ்.கண்ணன் துவக்கவுரையாற்றினார். ஒன்றிய செயலாளர் ஆர்.குமரேசன் அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட செயலாளர் மலை விளை பாசி நிறைவுரையாற்றினார். எம்.மாரியம்மாள் நன்றி கூறினார். இதில் விபிஜி ராம்ஜி திட்டத்தை வாபஸ் பெற வேண்டும். 100 நாள் வேலை உறுதி சட்டத்தை அமல்படுத்த வேண்டும். வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்.ஆண்டுக்கு 200 நாட்கள் வேலையும் தினக்கூலி ரூ.800 வழங்க வேண்டும். கண்விழிதிரை பதிவு செய்வதை நிறுத்த வேண்டும். நகர்ப்புற வேலை திட்டத்தை அனைத்து பேரூராட்சி கள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சியில் அமல்படுத்தி நகர்ப்புற ஏழை தொழிலா ளர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கிட வேண்டும். தென்னை மற்றும் மரம் ஏறும் தொழிலா ளர்களுக்கு தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும். விபத்தால் பாதிக்கப்படும் தொழி லாளர்களுக்கு மருத்துவ பாதுகாப்பு மற்றும் இழப்பீடு தொகை 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கு தனி யாக நலவாரியம் அமைத்திட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.</p>
