விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
1 hour before

விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் அக். 2-ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வியாழனன்று வெப்படையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வெப்படை பேருந்து நிலையத்தில், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சுகாதாரமான கழிப்பறை கட்டடம் கட்டித் தர வேண்டும். சின்னார் பாளையம் ,எலந்த குட்டை, வெப்படை, காந்திநகர் பகுதிகளுக்கு காவிரி குடிநீர் வசதி செய்து தர வேண்டும். மேற்கண்ட பகுதி மக்கள் கடந்த எட்டு வருடங்களாக இலவச வீட்டு மனை நிலம் கேட்டு மனு வழங்கி வருகின்றனர். வீட்டுமனை இல்லாத மக்களுக்கு, நிலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வெப்படை நான்கு ரோடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் நடேசன் தலைமை

ஏற்றார். இதில், சிபிஎம் வடக்கு ஒன்றியச் செயலாளர் சந்திரமதி, ஒன்றி

யக்குழு உறுப்பினர் சேகர், விதொச ஒன்றியச் செயலாளர் கோவிந்தசாமி, மாவட்ட துணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.துரைசாமி உரையாற்றினார். பூ.மணி நன்றி கூறினார்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட துணைத் தலைவர் குருசாமி தலைமையில், வெள்ளியன்று குமாரபாளையம் வருவாய் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.