விவசாயத்தொழிலாளர் சங்க களியல் வட்டார மாநாடு
30 Sept 2026, 9:25 pm
<p><strong>விவசாயத்தொழிலாளர் சங்க களியல் வட்டார மாநாடு</strong></p><p>நாகர்கோவில், செப். 30-அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் களியல் வட்டார மாநாடு காரோடு பகுதியில் நடைபெற்றது.மாநாட்டிற்கு ரெஜின்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன் துவக்கி வைத்துப்பேசினார். செயலாளர் சுனிதா வேலையறிக்கை சமர்ப்பித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ராஜதாஸ் வாழ்த்திபேசினார். மாவட்டத்தலைவர் என்.எஸ்.கண்ணன் நிறைவுரையாற்றினார். மாநாட்டில் தலைவராக முரளிதரன், செயலாளராக ரெஜின்ராஜ், பொருளாளராக சுனிதா மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அருமனை- பனச்சமூடு சாலையை சீரமைக்கவேண்டும். நகர்ப்புறவேலை உறுதித்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.</p>
