முந்தய பக்கம்

விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய மாநாடு

29 Jun 2026, 12:36 am
விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய மாநாடு
<p><strong>விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய மாநாடு</strong></p><p>அவிநாசி, ஜூன் 28- விவசாயத் தொழிலாளர் சங்க அவி நாசி ஒன்றிய மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்க திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றிய மாநாடு ஞாயிறன்று நடை பெற்றது. தோழர் ராமமூர்த்தி நினைவ கத்தில் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு, சங்கத்தின் ஒன்றியத் தலைவர் முரு கேஷ் தலைமை வகித்தார். ராஜேஷ் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் வசந்தா மணி துவக்கவுரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் சண்முகம் அறிக்கையை முன்வைத்தார். விவ சாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் முத் துரத்தினம், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், தேசிய ஊரக வேலை திட்டத் தொழிலாளர்களுக்கு கண் விழி ரேகை பதிவு செய்வதை கைவிட வேண்டும். விவசாயத் தொழி லாளர்களுக்கு தனித்துறையை உரு வாக்க வேண்டும். 60 வயதான விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.3000 வழங்க வேண்டும். தண்டு காரன்பாளையத்தில் சமுதாய நலக் கூடம் அமைத்து தர வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் ஒன்றியத் தலைவராக என்.கருப்புசாமி, செயலாளராக பி.ராஜேஷ், பொருளாள ராக வி.பி.முருகேசன், துணைத்தலை வர் ஏ.சண்முகம், துணைச்செயலாளர் எஸ்.மல்லப்பன் உட்பட 12 ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். மாவட்டச் செயலாளர் பஞ் சலிங்கம் நிறைவுரையாற்றினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram