முந்தய பக்கம்

200 நாள் வேலை வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

10 Jul 2026, 9:31 pm
200 நாள் வேலை வழங்கக் கோரி  விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>200 நாள் வேலை வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>விழுப்புரம், ஜூலை 10- மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி நாட்களை 200 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தினர் கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் வட்டாரத் தலைவர் பி. மணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் கே.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். அப்போது, மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தைச் சீர்குலைப்ப தாக ஒன்றிய அரசு மீது குற்றம் சாட்டிய அவர்கள், வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்றும், கருவிழி ஸ்கேன் முறையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரினர். மேலும், தினக்கூலியை ரூ. 700 ஆக உயர்த்த வேண்டும், கெண்டியங்குப்பம், குயிலாப்பாளையம், தாண்டவமூர்த்தி குப்பம் ஆகிய கிராமங்களில் சாலை வசதி, எரிமேடை மற்றும் குடிநீர் வசதிகளைச் செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்க மிட்டனர். போராட்டத்தின் முடிவில், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளித்தனர். இந்த நிகழ்வில் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram