விபிஜி ராம்ஜி சட்டத்தை ரத்து செய்ய விவசாயத் தொழிலாளர்கள் கோரிக்கை
27 May 2026, 9:18 pm
<p><strong>விபிஜி ராம்ஜி சட்டத்தை ரத்து செய்ய விவசாயத் தொழிலாளர்கள் கோரிக்கை</strong></p><p>பொன்னமராவதி, மே 27 - விபிஜி ராம்ஜி சட்டத்தை ரத்து செய்யவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு சட்டத்தை அமல் படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் கே ஆர்.பழனியப்பன் தலைமை வகித்தார். சங்கத் தின் மாவட்டச் செயலாளர் டி.சலோமி, தலைவர் கே. சண்முகம், பொருளாளர் எஸ்.நல்லதம்பி, ஒன்றிய நிர்வாகிகள் பி.இராமசாமி, டி.சிவசுப்பிரமணியன், சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் என்.பக்ருதீன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். சங்கத் தின் மாநிலத் தலைவர் எம். சின்னத்துரை உரையாற்றி னார்.</p>
