விபிஜி ராம்ஜி திட்டத்தை ரத்து செய்க! விவசாயத் தொழிலாளர்கள் இன்று போராட்டம்
29 Jun 2026, 9:07 pm
<p><strong>விபிஜி ராம்ஜி திட்டத்தை ரத்து செய்க! விவசாயத் தொழிலாளர்கள் இன்று போராட்டம்</strong></p><p>நாகர்கோவில், ஜூன் 29 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ரத்து செய்து, விபி ஜி ராம்ஜி திட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்த கோரி ஜூன் 30 ஆம் தேதி தேசம் தழுவிய போராட்டம் நடத்துவது என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்க குமரி மாவட்டச் செயலாளர் மலைவிளை பாசி மற்றும் மாவட்டத் தலைவர் என்.எஸ்.கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “ஒன்றிய பாஜக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை ரத்து செய்துவிட்டு விபி ஜி ராம்ஜி என்ற பெயரில் புதிய திட்டத்தை ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான தொகையை ஒன்றிய அரசு முழுமையாக ஒதுக்கீடு செய்ததை மாற்றி, தற்போது புதிய திட்டத்தின் 60 சதவீதம் ஒன்றிய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசு 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, 200 நாள் வேலையும், 600 ரூபாய் தினக்கூலியும் உழைப்பாளிகள் எதிர்பார்க்கும் நேரத்தில், நடப்பாண்டில் ஒன்றிய அரசு நிதி தொகை யை குறைத்து 60 ஆயிரம் ரூபாய் கோடி மட்டும் ஒதுக்கியுள்ளது. இது ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பதாகும். அதன் அடிப்படையில் குமரி மாவட் டத்தில் ராஜாக்கமங்கலம், வாழையத்து வயல், மஞ்சா லுமூடு, அடைக்காக்குழி உள்ளிட்ட ஊராட்சிகளில் “விபி ஜி ராம்ஜி திட்டம் வேண்டாம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி சட்டம் வேண்டும்” என்று கேட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஏழை-எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய அரசு, பழைய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.</p>
