தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றிய பாஜக அரசே ‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தை திரும்பப் பெறு! ஊரக வேலை உறுதித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்து!! விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

30 Jun 2026, 9:06 pm
ஒன்றிய பாஜக அரசே ‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தை திரும்பப் பெறு! ஊரக வேலை உறுதித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்து!!  விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

ஒன்றிய பாஜக அரசே ‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தை திரும்பப் பெறு! ஊரக வேலை உறுதித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்து!! விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

சென்னை, ஜூன் 30 - மகாத்மா காந்தி ஊரக நூறு நாள் வேலையுறுதித் திட்டத்திற்கு மாற்று என்ற பெயரில் கொண்டுவரப் பட்டுள்ள ‘விபி ஜி ராம் ஜி’ எனப்படும் மோசடித் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டும் என்று வலி யுறுத்தி, நாடு முழுவதும் விவ சாயத் தொழிலாளர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

‘விபி ஜி ராம் ஜி’ எனப்படும் ஒன்றிய பாஜக அரசின் இந்த ஏழை கள் விரோத திட்டத்திற்கு எதிராக அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் கடந்த 2025 டிசம்பர் முதலே தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறது.

எனினும், நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக, விவசாயத் தொழிலாளர்களின் எதிர்ப்பை புறந்தள்ளி, ‘விபி ஜி ராம் ஜி’ திட்டம், இன்று முதல் (ஜூலை 1) அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது.

இந்தப் பின்னணியிலேயே, நாடு தழுவிய “கிராமப்புற போராட்டத் திற்கு” அறைகூவல் விடுத்து, அதன் படி செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) அன்று, விவசாயத் தொழிலாளர் கள் நாடு தழுவியப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டிலும், செவ்வாயன்று 200-க்கும் மேற்பட்ட மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஒன்றிய பாஜக அரசு ‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தை முழுமை யாக திரும்பப் பெற வேண்டும்; வேலைநாட்களை 200 நாட்களாக உயர்த்திட வேண்டும்; தினக்கூலி யை ரூ. 700 ஆக உயர்த்த வேண்டும்; பயனாளிகளின் கருவிழியை ஸ்கேன் செய்வதை கைவிட வேண் டும்; அனைத்து ஊராட்சிகளிலும் வேலை அட்டைப் பெற்றுள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் உடன் வேலை வழங்க வேண்டும்; தமிழக அரசு வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் விபி ஜி ராம் ஜி-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மாநிலம் முழுவதும் ஊராட்சி களில் நடைபெற்றப் போராட்டங் களில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் எம். சின்னதுரை எம்எல்ஏ, மாநிலப் பொதுச்செய லாளர் வீ. அமிர்தலிங்கம், பொரு ளாளர் அ. பழநிசாமி, மாநிலச் செய லாளர் வீ. மாரியப்பன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு எம்.சின்னதுரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வீ.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.