உள்ளூர்ப் பிரச்சனைகளுக்கு போராட்டக் களம் அமைப்போம்! பட்டா உரிமை, உழவர் பாதுகாப்புத் திட்டம் குறித்து விவசாயத் தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம்
28 Oct 2026, 8:25 pm

உள்ளூர்ப் பிரச்சனைகளுக்கு போராட்டக் களம் அமைப்போம்!

பட்டா உரிமை, உழவர் பாதுகாப்புத் திட்டம் குறித்து விவசாயத் தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம்

சேலம், அக். 28 -சேலம் மாவட்டம் எடப்பாடியில், அகில இந்திய விவசாயமற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் சங்கத்தின் (விதொச) தமிழ்நாடு 11ஆவது மாநில மாநாடுமூன்று நாட்கள் நடைபெற்றது. மனைப்பட்டா சிக்கல்கள், உழவர் பாதுகாப்புத் திட்ட முடக்கம் குறித்து முக்கியத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் வழங்கிய மனைப்பட்டா க்கள் அனைத்தும் நமுனா பட்டா,

டூசி பட்டா போன்ற, நில உரிமை இல்லாத தற்காலிகப் பட்டாக்களே என மாநாடு சுட்டிக்காட்டியது.ஆட்சேபனையற்ற இடங்களில்பல ஆண்டுகள் குடியிருப்போ ருக்கும், நத்தம் புறம்போக்குக் குடியிருப்புகளுக்கும் முறையானபட்டா இல்லை. வழங்கியபட்டாக்களை 10 ஆண்டுகளுக்குள்அரசு எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம்; நிலவரி, சிட்டா அடங்கல், உட்பிரிவு செய்து தனி உரிமை பெறுதல் போன்ற சட்டப்பாதுகாப்பும் இல்லை.

இவற்றால் வங்கி, கூட்டுறவுக்கடன் பெறவோ, சார்பதிவாளர் அலுவலகம் வழியாக வாரிசுகளுக்கு மாற்றவோ முடியவில்லை. எனவே நில உரிமையுடன் கூடிய, சட்டப் பின்புலமுள்ள அசைன்மென்ட் பட்டாவை அரசு வழங்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

நீர்நிலை, செட்டில்மென்ட் பகுதி எனக் காரணம் காட்டி லட்சக்கணக்கான குடும்பங்களு க்குப் பட்டா மறுக்கப்படுவதைக் கண்டித்து, நீர்நிலைகளுக்குப் பாதிப்பில்லாதபகுதிகளைக் கள ஆய்வு செய்து பட்டா வழங்க வேண்டும்; அரசு காலி செய்யும் மனைகளுக்கு இலவசமாக வீடுகட்டித் தர வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டம்

நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகளின் சமூகப் பாதுகாப்புக்கான இத்திட்டத்தில், 18 முதல் 65 வயதுடைய 2 கோடியே 83 லட்சத்து 28 ஆயிரத்து 270 பேர் பதிவு செய்துள்ளனர். 2025இல் நிலமற்ற வேளாண்தொழிலாளர்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை இன்னும் முழுமையாக அமலாகவில்லை. அடையாள அட்டை வழங்கப்படும் என அரசாணை கூறியும் வழங்கப்படவில்லை. எனவே, அனைத்துஉறுப்பினர்களுக்கும் உடனே அடையாள அட்டையும், கல்வி, திருமணம், விபத்து நிவாரண உதவிகளும் தாமதமின்றி வழங்கவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

உள்ளூரில் திரட்டுங்கள்: பி.வெங்கட்

சங்கத்தின் பொதுச்செய லாளர் பி.வெங்கட், புதிய மாநிலக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்து நிறைவுரையாற்றினார். கேரளா, மேற்கு வங்கம், தெலுங்கானாவுக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு நாட்டின்முக்கிய விவசாயத் தொழிலாளர் இயக்கமாக உள்ளது என்றார். 35 மாவட்டங்களில், 300க்கும் மேற்பட்டஇடைக்குழுக்களில் சங்கத்துக்கு அமைப்பு உள்ளது; தமிழகத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்காகப் போராடும் இயக்கம் இதுவே என்றார். விவசாயத் தொழிலாளர்களை அணிதிரட்டுவதே இச்சங்கத்தின் முக்கியப் பணி; மற்ற அமைப்புகளைப்போல இல்லாமல் அடிப்படையான நோக்கம் கொண்டது என்றும் குறிப்பிட்டார். “இலக்கு தீர்மானிக்கப்பட்டுவிட்டது; ஆனால் அதை நோக்கித்தான் பயணிக்கிறோமா, பாதை சரிதானா என்று பரிசோதிக்க வேண்டும்” என்றார். மாநாட்டுமுடிவுகளை அனைத்துக் கிராமங்களுக்கும் கொண்டுசென்று, விவசாயத் தொழிலாளர்களைச் சங்கத்தில் இணைக்க வேண்டும் என்றும்கேட்டுக்கொண்டார்.

“சென்னை, ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் என நமது போராட்டங்கள் நின்றுவிடக் கூடாது.

உள்ளூர்ப் பிரச்சனைகளை மையப்படுத்தி, உள்ளூர் விவசாயிகளைத் திரட்டி, உள்ளூரிலேயே போராட வேண்டும்” என்றார். சங்கத்தலைவர்கள் கிராமங்களில், தலித் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் தங்கி, மக்களின் பிரச்சனைகளை நேரில் அறிந்து அணிதிரட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அப்போதுதான் மக்களின் பிரச்சனைகளை எளிதில் புரிந்துகொண்டு தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல முடியும் என்றார். ஏழைவிவசாயிகளை ஒடுக்க நினைக்கும்பணக்கார சக்திகளை எதிர்த்துப்போராடும் பொறுப்பு நிர்வாகிகளிடமே உள்ளது என்றும் கூறினார்.

கிராமப்புறத்தின் புதிய பணக்காரர்கள்

கிராமங்களில் புதிய பணக்கார வர்க்கம் உருவாகியுள்ளது என்றார் வெங்கட். உரக்கடை,அரிசி ஆலை, மருத்துவமனை, வாடகை வீடு எனப் பொருளாதாரத்தையும் அரசியலையும் கட்டுப்படுத்தி, ஏழை விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் ஒடுக்குகின்றனர். பழைய பணக்காரர்களுக்கும் புதிய பணக்காரர்களுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து, அவர்களின்தன்மைக்கேற்பப் போராட்டங் களைத் திட்டமிட வேண்டும். இன்றைய வளர்ச்சிப் போக்கில் கிராமப்புறத்தில் நமதுபிரதான எதிரி புதிய வகை பெரும் பணக்காரர்களே; அவர்களுக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்தை அணிதிரட்ட,வர்க்கப் பார்வை வேண்டும் என்றார்.

முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் முதுகெலும்பாக இருப்பவர்களும் பணக்கா ரர்களே என்ற அவர், உழைக்கும்

மக்களுக்கு எதிரான, குறிப்பாகத்தீண்டாமைக்கு ஆதரவான அவர்களின் செயல்களை அம்பலப்படுத்த வேண்டும் என்றார். விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை முறையும் மாறி யுள்ளது; வேளாண்மையை மட்டுமே நம்பாமல், நகர்ப்புறங்களுக்கும் வேலைக்குச் செல்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

மாநாட்டை வாழ்த்தி சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். கண்ணன், விதொச தெலுங்கானா மாநிலச் செயலாளர் வெங்கட் ராம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், சிபிஐ விதொச செயலாளர் பெரியசாமி ஆகியோர் பேசினர்.வரவேற்பு குழு தலைவர் ஏ. ராமமூர்த்தி நன்றியுரை ஆற்றினார்.